1983ம் ஆண்டு நடந்தேறிய கறுப்பு யூலை தமிழர் படுகொலை மீதான குழுநிலை கலந்துரையாடல் பிரித்தானிய தமிழர் பேரவையினால் (BTF) வருடாவருடம் பிரித்தானியப் பாராளுமன்றில் நடாத்தி வருவது தெரிந்ததே. இவ் வருடம், கொரோனா-19 தீவிர நோய்ப் பரவலால் பிரித்தானியப் பாராளுமன்றின் மீது ஏற்பட்டுள்ள நெருக்கடி காரணமாக பாராளுமன்றில் அல்லாமல், Zoom இணையவழியூடாக குழுநிலை கலந்துரையாடலாக எதிர்வரும் யூலை 23ம் திகதி பிற்பகல் 6:00 மணியிலிருந்து 7.30 மணிவரை நடைபெறவுள்ளது. “அவர்கள் எதிர் நாங்கள்” இவ் வருடம் விவாதக் கருப்பொருளாக “அவர்கள் எதிர் நாங்கள்” (Them Vs
“புத்தகங்களை எரிக்கத் துணிந்தவர்கள், மனிதர்களையே எரித்துவிடுவார்கள்” ஹெயின்றிச் ஹெயின் (ஜேர்மானியக் கவிஞர், எழுத்தாளர், இலக்கிய விமர்சகர்) யாழ்ப்பாண நூலகம் 31 மே 1981ல் எரிக்கப்பட்டு இன்று 39வதுஆண்டை எட்டியுள்ளது. சிறிலங்கா அரசின் மூத்தஅமைச்சர்களால் தென் பகுதியிலிருந்து கொண்டு வரப்பட்டசிங்களக் கும்பலொன்றினைக் கொண்டு இத் தீவைப்புநடாத்தப்பட்டது. நூலக புத்தகங்களுக்கு வேண்டுமென்றே தீயிட்டழித்த இக்கொடுமையான நிகழ்வானது, சிறி லங்கா அரசின்தமிழர்களுக்கெதிரான இன இழிப்பு வரலாற்றில் ஒரு முக்கியநிகழ்வாகும். தெற்காசியா எங்கும் தேடக் கிடைக்காத தொன்மைவாய்ந்த, போற்றிப் பேணப்பட வேண்டிய ஏராளமான நூல்கள்மற்றும் ஆவணச் சுவடிகள் திட்டமிட்டு தீயிட்டழிக்கப்பட்டமையால்தமிழர்களின் விலைமதிப்பற்ற கலாச்சாரப் பாரம்பரியபொக்கிசமொன்று சிறிலங்கா அரசினால்நிர்மூலமாக்கப்பட்டுள்ளது. நூல் நிலையத்தை அண்டிய பகுதிகளில் அன்று எவ்விதஆத்திரமூட்டும் சம்பவங்களும் நடைபெற்றிருக்கவில்லை. யாழ்மாவட்ட பொலிஸ் தலைமைச் செயலகம் நூலகத்திலிருந்துகண்ணுக்கெட்டிய தூரத்திலேயே உள்ளது. முன்னாள்அமைச்சர்களான காமினி திசநாயக்காவும் சிறில் மத்தியூவும் தீவைப்பு சம்பவத்தை முன்னின்று நடாத்தியுள்ளார்கள். இவை யாவும்தீயிடல் சம்பவம் நன்கு திட்டமிட்டு (intent of genocide) தமிழர்வரலாற்றின் ஆவணப்படுத்தலை அழிப்பதற்கென்று நிகழ்த்தப்பட்டகலாச்சார இனப்படுகொலை என்பதற்கு சாட்சி பகர்கின்றன. கடந்த 70 வருடங்களாக தமிழர்களுக்கெதிராக நடந்து வரும்இனப் படுகொலையை ஒரு சர்வதேச நீதிப்பொறிமுறையின் மூலம்வெளிக் கொண்டு வந்து நீதி நிலைநாட்டப்பட வேண்டும்என்பதனையும் சிறிலங்காவில் வடக்கு கிழக்கு வாழ்தமிழர்களுக்கு சர்வதேச அங்கீகாரத்துடனான ஒரு பாதுகாப்புபொறிமுறை உருவாக்கப்பட வேண்டும் என்பதனையும் பிரித்தானியதமிழர் பேரவை வலியுறுத்துகின்றது. Please follow and like us:
மே 18, 2019 சனிக்கிழமை. ஆண்டுகள் பல கடந்தும் நீதிக்காகவும், சுதந்திர வேட்கையோடு எம் மண்ணின் விடுதலைக்காகவும் இறுதிப்போரில் வதைக்கப்பட்ட,கொல்லப்பட்ட எம் உறவுகளுக்காகவும் லண்டன் மாநகரில் அணி திரள்வோம் வாரீர். வழமை போன்று மத்திய லண்டனில் Charing Cross நிலக்கீழ் தொடருந்து நிலையத்திற்கு அண்மையில் TRAFALGAR SQUARE, London WC2N 5DN இல் மதியம் 2.00 மணிக்கு பொதுக் கூட்டத்துடன் நிகழ்வுகள் ஆரம்பித்து மாலை 5.00 மணிவரை நினைவு கூறப்பட உள்ளது. தாயக விடுதலைக்காக தொடர்ச்சியாக குரல் கொடுப்போம், அயராது செயல்படுவோம், சர்வதேசத்தை எம்பக்கம்
வரும் 25-02-2019 தாயகத்தில் நடைபெறும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் தாய்மார்கள் மற்றும் உறவினர்கள் பொதுமக்களால் நடத்தப்படும் கவனயீர்ப்பு போராட்டத்திற்கு பிரித்தானிய தமிழர் பேரவை முழு ஆதரவு வழங்குவதோடு மேலும் இப்போராட்டத்திற்கு தாயகத்திலும் புலம்பெயர் நாட்டிலும் பொதுமக்கள் அனைவரையும் மிக எழுச்சியுடன் கலந்து கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கின்றோம். நாள்: 25.2.2019 திங்கட்கிழமை நேரம்: முற்பகல் 10மணி -மதியம்12மணி இடம்: 10 Downing Street, London, SW1 அருகிலுள்ள தொடருந்து நிலையம்: Westminster நாளைய தினம் பிரித்தானிய பிரதம மந்திரியின் வாசஸ்தலத்தில் நடைபெறும் கவனயீர்ப்பு போராட்டத்தில்
பிரித்தானிய தமிழர் பேரவை இந்த வழக்கு தொடர்பில் மிகுந்த கவலையுடன் தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்த கடமைப்பட்டுள்ளது. 2010ஆம் ஆண்டின் சமத்துவ சட்டத்தின்கீழ் பேரவையின் தனிப்பட்ட உறுப்பினர் ஒருவரினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு தீர்ப்பு மூலம் பெருந்தொகை பணத்தை இழப்பீடாக வழங்க நேரிட்டுள்ளது. வழக்கு செலவு மற்றும் நட்டஈடு என்பவற்றினால் பிரித்தானிய தமிழர் பேரவை பெரும் பொருளாதார இழப்பை எதிர்கொண்டுள்ளது. நீதிமன்ற தீர்ப்பை மையமாக வைத்து சில தரப்பினரால் பிரித்தானிய தமிழர் பேரவையின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.தீர்ப்பின் ஒரு சில வாசகங்களை மட்டுமே
ஜெனீவாவை எதிர்கொள்ளப்போகும் புலம்பெயர் அமைப்புகள் – பிரித்தானிய தமிழர் பேரவையின் செயற்பாடுகள் பற்றி அமைப்பு சார்பாக வசியும் சுதாவும் கலந்து கொண்டு உரையாடிய காணொளி. Please follow and like us:
எதிர்வரும் வெள்ளிக்கிழமை அன்று 09-02-2018 லண்டனில் மாபெரும் போராட்ட பேரணி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இப் பேரணி ஆனது பிரித்தானியாவைத் தளமாக கொண்டு இயங்கும் பல அமைப்புகள் ஒன்றிணைந்து இலங்கை அரசின் பயங்கரவாத செயல்பாட்டை பிரித்தானிய அரசிற்கும் மற்றும் சர்வதேச நாடுகளுக்கும் எடுத்துரைக்கும் வண்ணம் நடாத்த உள்ளனர்.
இலங்கை அரசினால் முள்ளி வாய்க்காலில் படுகொலை செய்யப்பட்ட மக்களை நினைவு கூறும் வகையிலும் பாதிக்கப்பட்ட மகளுக்கான நீதி கோரியும் பிரித்தானிய தமிழர் பேரவையினரால் நேற்றைய தினம் ஒழுங்கு செய்யப்பட்ட 7 ம் ஆண்டு நினைவு தினத்தில் பெரும் திரளாக ஒன்று கூடிய உறவுகள் முள்ளி வாய்க்காலில் படு கொலை செய்யப்பட்ட தமது உறவுகளுக்கான அஞ்சலியை செலுத்தியிருந்த அதே சமயம் இந் நிகழ்விற்கு சமூகமழித்திருந்த பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்கள், மனித உரிமை பாதுகாவலர்கள் மற்றும் பொது மக்கள் நீதி வேண்டி போராடும் தமிழ் மக்களுக்கான தமது
இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவின் லண்டன் விஜயத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த இரு நாட்களாக பிரித்தானிய தமிழர் பேரவையினரால் ஆர்ப்பாட்டம் ஒன்று நடாத்தப்பட்டது. நேற்றைய தினம் (12/05/2016) காலை 8 மணி முதல் மாலை 4மனி வரை இரண்டாவது நாளாக மேற்கொள்ளப்பட்ட இவ் கண்டனப் பேரணியில் லண்டனின் பல பாகங்களிலும் இருந்து பெரும் திரளாக தமிழ் மக்கள் கலந்து கொண்டனர். உலக நாடுகளின் தலைவர்கள் கலந்து கொண்ட ஊழலுக்கு எதிராக நடைபெற்ற இம் மாநாட்டில் ஆரப்பாட்டம் ஒன்றினை மேற்கொண்டதன் மூலம் இலங்கையில் ஏற்பட்ட ஆட்சி
இலங்கையின் தற்போதைய அரச அதிபரும் இனப் படுகொலை அரசின் பங்காளியுமான மைத்திரி அவர்கள் நாளை 11ம் திகதி அன்று லண்டன் வருவதை முன்னிட்டு பிரித்தானிய வாழ் தமிழர்களின் கண்டனங்களை தெரிவுக்கும் முகமாக பிரித்தானிய தமிழர் பேரவையினரால் கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்று ஒழுங்கு செயப்பட்டுள்ளது. Marlborough House பகுதியில் Commonwealth Secretariat முன்பாக காலை 8 மணி முதல் மாலை 6.30 மணி வரை ஒழங்கு செய்யப்பட்டுள்ள இப் பேரணிக்கு பிரித்தானிய வாழ் தமிழர்கள் அனைவரையும் கலந்து கொண்டு தமது பூரண ஆதரவினை வழங்குமாறு பிரித்தானிய