பிரித்தானிய தமிழர் பேரவை பிரித்தானிய வெளிநாட்டு விவகாரங்கள் காரியாலயத்தின் சிறிலங்கா விவகாரங்களுக்கான அதிகாரிகளுடன் முக்கிய சந்திப்பொன்றை நடத்தியிருந்தனர். அந்த சந்திப்பில் கலந்து கொண்ட அதிகாரிகளுக்கு நீண்ட காலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் மற்றும் நீதி விசாரணையின்றி தடுத்து வைக்கப்பட்டுள்ள 217 பேர் தொடர்பான விடயங்கள் எடுத்துக் கூறப்பட்டுள்ளது. அவர்களும் அவர்களது உறவினர்களும் படும் அவலத்தினைக் கருதி போர் முடிந்த சூழ்நிலையில் மனிதாபிமான அடிப்படையில் அவர்களது விடுதலை தொடர்பாக பிரித்தானிய அரசு சிறிலங்காவிடம் வற்புறுத்த வேண்டும் என்று கோரப்பட்டது. 1971ஆம் ஆண்டு மற்றும் 1989 ஆம்
பிரித்தானிய அரசியலில் அண்மைக்காலமாக தமிழர்கள் சார்பான கொள்கைகளில் பல சாதகமான மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றது. பிரித்தானியாவின் பெரும் கட்சிகளின் தலைவர்கள் உலகத் தமிழர் பேரவையின் அங்குரார்ப்பண வைபவத்தில் தோன்றியமையும், பல பாராளுமன்ற விவாதங்களை நிகழ்த்தி ஈழ விவகாரத்தை ஆராய்ந்தமையும், பிரித்தானியா வாழ் தமிழர்களுக்கு நம்பிக்கையை கொடுக்கின்றது. இவ்வாறான நிகழ்வுகளின் பின்னால் தமிழ் மக்களின் நண்பர்கள் பாராளுமன்றத்தில் கடுமையாக உழைத்திருக்கின்றார்கள். பிரித்தானிய ஆட்சியாளர்களின் மனத்தினை முழுமையாக வெல்வதற்கு நாம் இன்னும் நீண்ட தூரம் பயணிக்க வேண்டும். அதற்கு எமது நண்பர்கள் பாராளுமன்றம் செல்லவேண்டும். யாருக்கு வாக்களிக்க