பிரித்தானிய பாராளுமன்றில் ‘’சிறிலங்காவில் தொடரும் வன்முறைச் சுழற்சியும் இன அழிப்பும்’’ ஆவண திரைப்பட வெளியீடு

பிரித்தானிய தமிழர் பேரவை 27 April 2022 மாலை 6:30 மணியளவில் பிரித்தானிய பாராளமன்ற உறுப்பினருக்கும் மற்றும் முக்கிய பிரமுகர்களுக்கும் பிரத்தியேகமாக “Continuing Cycles of Violence and Genocide in Sri Lanka” என்ற ஒரு 20 நிமிட ஆவணப்படத்தை வெளியிடுகிறது.

இவ் ஆவணப் படம் இலங்கை பிரித்தானியர்களிடமிருந்து சுதந்திரமடைந்த நாள் தொட்டு தமிழ் மக்கள் காலம் காலமாக அனுபவித்து வரும் இன அழிப்பு உள்ளிட்ட அட்டூழியக் குற்றங்களை சுருக்கமாகவும் தெளிவாகவும் எடுத்துக் காட்டுகிறது.

காத்திரமான இந்த நிகழ்வில் பங்கேற்க உங்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் கோரிக்கை விடுமாறு வேண்டுகின்றோம்.

பிரித்தானிய தமிழர் பேரவை இவ்வாவணப் படத்தை பொதுமக்கள் பார்வைக்காக 27 April 2022க்குப் பின் YouTube இல் வெளியிட இருக்கிறது.

Tamil Press Release-Screening documentary film by BTF

Please follow and like us:
error

Comments are closed.