Tamil News

20
Mar

பிரித்தானிய பாராளுமன்றத்தில் இலங்கை பற்றிய முக்கிய விவாதம்

-சுய நிர்ணய உரிமை -இன அழிப்பு நடந்தது என்பதை அங்கீகரித்தல் -சர்வதேச போர்க்குற்ற நீதிமன்றத்திற்கு (ICC) பரிந்துரைத்தல் -சாட்சியங்களை திரட்டும் பொறிமுறை -மீண்டும் வன்முறைகள் இடம்பெறாமல் தடுத்தல் -தமிழர் இராட்சியம் -சர்வதேச மனித உரிமை மீறுவோருக்கான தடைச் சட்டம் (Magnitsky act) -ஆயுத ஏற்றுமதி மற்றும் வர்த்தக ஒப்பந்தம் பிரித்தானிய பாராளுமன்றத்தில் இலங்கை பற்றிய விவாதம் தமிழர்களுக்கான அனைத்து கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களின் செயற்குழுவால் 18/03/2021 அன்று நடாத்தப்பட்டது. இவ்விவாதத்தை சிவோன் மெக்டோனா (Siobhain McDonagh MP) அவர்கள் ஒழுங்கு செய்திருந்தார். இதற்கு கெளரவ

Read more

17
Mar

பிரித்தானிய பாராளுமன்றத்தில் நடைபெற இருக்கின்ற இலங்கை மீதான விவாதம்

பின்வரிசை பாராளுமன்ற உறுப்பினர்கள் விவாதம் ஒன்று (Backbench  Debate) பிரித்தானிய  பாராளுமன்றத்தில் நடைபெற இருக்கின்றது. இதற்கான முயற்சிகளை பிரித்தானிய தமிழர் பேரவையினர், தமிழர்களுக்கான அனைத்துக் கட்சி பாராளுமன்ற குழுவினூடாக (APPG for Tamils) முன்னெடுத்து இருந்தனர். கடந்த 11ம் திகதி பெப்ரவரி மாதம் நடைபெற இருந்த இவ் விவாதமானது பாராளுமன்றத்தின் வேறு ஒரு அவசர நிகழ்வால் மாற்றப்பட்டு தற்போது வரும் வியாழக்கிழமை 18 மார்ச் 2021 அன்று நடைபெறுவது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாட்டினை தொழில் கட்சியைச் சேர்ந்த தமிழர்களுக்கான அனைத்துக் கட்சி பாராளுமன்ற

Read more

26
Feb

ஈழத் தமிழ் மக்களின் உற்ற தோழராக குரல் கொடுத்த தா பாண்டியன் அவர்களிற்கு எம் இதயபூர்வமமான அஞ்சலி

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும் தேசிய குழு உறுப்பினருமாகிய தா பாண்டியன் அவர்கள் மறைந்த செய்தி கேட்டு பெரும் துயர் அடைகின்றோம். நாடு மற்றும் நாட்டின் வளங்கள் நாட்டு மக்கள் அனைவருக்கும் பொதுவானவை. இந்தக் கோட்பாட்டின் அடிப்படையில் தன் இள வயதிலிருந்தே தன்னை அர்ப்பணித்து போராடிய நேர்மையான பெருந்தகையாக தா பாண்டியன் ஐயா அவர்கள் நினைவு கூரப்படுகின்றார். ஈழத் தமிழ் மக்களின் உற்ற தோழராக தொடர்ச்சியாக குரல் கொடுத்ததுடன் ஒடுக்குமுறைக்கெதிராக போராடும் பலருக்கும் எம் இனத்திற்கேற்பட்ட வன்கொடுமைகளை புரிய வைத்த தா பாண்டியன்

Read more

28
Oct

சிறிலங்கா குற்றவாளிகளுக்கு எதிராக உலகளாவிய மனிதஉரிமைகள் தடை விதிமுறைகளை பிரயோகியுங்கள்

கடுமையான மனித உரிமை துஷ்பிரயோகங்கள், மீறல்கள் புரிந்த குற்றவாளிகள் தொடர்ச்சியாக தண்டனைகளிலிருந்து தப்புவிப்பதனை நிறுத்துவதற்காக, ஐக்கிய ராச்சியம் சமீபத்தில் அதன் ”உலகளாவிய மனித உரிமைகள் தடை விதிமுறைகள்” சட்டத்தை (Global Human Rights Sanctions Regime Act), கடந்த ஜூலை மாதத்தில் நடைமுறைக்கு கொண்டு வந்தது. ஆயினும், சிறிலங்கா அரசில் பங்கு வகிக்கும் மனிதநேயமற்ற அட்டூழியங்களைப் புரிந்து உள்நாட்டில் எவ்வித தண்டனைகளுமின்றி வாழும் குற்றவாளிகளுக்கு பிரித்தானியாவின் இச் சட்டம் விலக்களித்து உள்ளதால் தமிழர் சமூகம் மேற்படி சட்ட அமுலாக்கலில் அதிருப்தி அடைந்துள்ளது. சிறிலங்கா சர்வதேச

Read more

1
Sep

உலகளாவிய தமிழர் அமைப்புக்கள் சிறிலங்காவில் காணாமல் ஆக்கப்பட்ட தமிழ் சொந்தங்களின் உறவுகளுடன் கைகோர்த்து நிற்கின்றன

சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தில் (30-08-2020) அவுஸ்ரேலிய தமிழ் காங்கிரஸ் (ATC), பிருத்தானிய தமிழர் பேரவை (BTF), அயர்லாந்து தமிழர் பேரவை (ITF), அமைதிக்கும் நீதிக்குமான ஒற்றுமைக்குழு (SGPJ), மற்றும் ஐக்கிய அமெரிக்க தமிழர் செயற்பாட்டுக் குழு (USTAG) ஆகிய அமைப்புக்கள் சிறிலங்காவில் காணாமல் ஆக்கப்பட்ட தமிழ் சொந்தங்களின் உறவுகளுடன் கைகோர்த்து நிற்கின்றன. தங்கள் அன்பு உறவுகள் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து 1,200 நாட்களுக்கு மேலாக தொடர்ந்தும் அவர்களின் உறவுகள் நீதி கேட்டு வருகிறார்கள். இராசபக்ச அரசின் மீள்வருகையின் பின்னும் இது

Read more

20
Jul

பிரித்தானிய தமிழர் பேரவையின் கருப்பு ஜூலை 83 நினைவேந்தல் 2020 ‘அவர்கள் எதிர் ‘நாங்கள்’

“தமிழ் மக்கள் கருத்துக்கள் பற்றி நான் கவலைப்படவில்லை. அவர்கள் பற்றியோ, ‘அவர்கள்’ வாழ்க்கை பற்றியோ அல்லது அவர்கள் எம்மைப் பற்றி வைத்திருக்கும் கருத்து பற்றியோ ‘நாங்கள்’இப்போது சிந்திக்க முடியாது”. இது 1983 ஆடி படுகொலையின் போது சிறிலங்காவின் ஜனாதிபதியாக இருந்த ஜே ஆர் ஜெயவர்தனேயினால் 11-07-1983 அன்று ‘டெயிலி ரெலிகிறாவ்’ (Daily Telegraph) பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் கூறப்பட்டது. 37 வருடங்கள் கழிந்தும் நீதி இன்னமும் எட்டாக் கனியாகவே உள்ளது. பாதிக்கப் பட்டவர்கள் அவ்வினப்படுகொலை அதிர்ச்சியிருந்து முற்றாக மீளவில்லை. 1948ல் சிறிலங்கா சுதந்திரம் அடைந்ததில்

Read more

5
Jul

கறுப்பு யூலை 1983 – 37வது வருடாந்த இணையவழி நினைவேந்தல் 2020 குழுநிலை கலந்துரையாடல் – “அவர்கள் எதிர் நாங்கள்”

1983ம் ஆண்டு நடந்தேறிய கறுப்பு யூலை தமிழர் படுகொலை மீதான குழுநிலை கலந்துரையாடல் பிரித்தானிய தமிழர் பேரவையினால் (BTF) வருடாவருடம் பிரித்தானியப் பாராளுமன்றில் நடாத்தி வருவது தெரிந்ததே. இவ் வருடம், கொரோனா-19 தீவிர நோய்ப் பரவலால் பிரித்தானியப் பாராளுமன்றின் மீது ஏற்பட்டுள்ள நெருக்கடி காரணமாக பாராளுமன்றில் அல்லாமல், Zoom இணையவழியூடாக குழுநிலை கலந்துரையாடலாக எதிர்வரும் யூலை 23ம் திகதி பிற்பகல் 6:00 மணியிலிருந்து 7.30 மணிவரை நடைபெறவுள்ளது. “அவர்கள் எதிர் நாங்கள்” இவ் வருடம் விவாதக் கருப்பொருளாக “அவர்கள் எதிர் நாங்கள்” (Them Vs

Read more

28
Jun

ஐக்கிய இராச்சியத்தின் நிழல் வெளிவிவகார அமைச்சர் ஸ்டீபன் கின்னொக் அவர்களுடனும் நிதியமைச்சின் நிழல் செயலாளர் வெஸ் ஸ்றீரிங் அவர்களுடனுமான பிரித்தானிய தமிழர் பேரவையின் சந்திப்பு

ஐக்கிய இராச்சியத்தின் நிழல் வெளிவிவகார அமைச்சர் ஸ்டீபன் கின்னொக் (Hon. Stephen Kinnock) அவர்களுடனும், நிதியமைச்சின் நிழல் செயலாளர் வெஸ் ஸ்றீரிங் (Wes Streeting) அவர்களுடனுமான பிரித்தானிய தமிழர் பேரவையின் மிகுந்த ஆக்கபூர்வமான சந்திப்பு அண்மையில் இடம்பெற்றுள்ளது. இலங்கை அரசின் தற்போதைய செயற்பாடுகள் பற்றியும் இலங்கைவாழ் தமிழர்களுக்கான நீதி, சமாதானம், சுபீட்சம் என்பனவற்றை அடைந்து கொள்வதற்கான எமது கரிசனைகள் பற்றியும் கூட்டாக எடுத்துரைத்தோம். இலங்கையில் வாழும் தமிழ் மக்களுக்கு எதிரான இனவழிப்பை தடுப்பதற்கு வலுவான உறுதியான சர்வதேச நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பது எமது

Read more

6
Jun

யாழ்ப்பாண நூலகத்தை எரித்தமை இனஅழிப்புக்கானஉள்நோக்கம் கொண்டது!

“புத்தகங்களை எரிக்கத் துணிந்தவர்கள், மனிதர்களையே எரித்துவிடுவார்கள்” ஹெயின்றிச் ஹெயின் (ஜேர்மானியக் கவிஞர், எழுத்தாளர், இலக்கிய விமர்சகர்) யாழ்ப்பாண நூலகம் 31 மே 1981ல் எரிக்கப்பட்டு இன்று 39வதுஆண்டை எட்டியுள்ளது. சிறிலங்கா அரசின் மூத்தஅமைச்சர்களால் தென் பகுதியிலிருந்து கொண்டு வரப்பட்டசிங்களக் கும்பலொன்றினைக் கொண்டு இத் தீவைப்புநடாத்தப்பட்டது. நூலக புத்தகங்களுக்கு வேண்டுமென்றே தீயிட்டழித்த இக்கொடுமையான நிகழ்வானது, சிறி லங்கா அரசின்தமிழர்களுக்கெதிரான இன இழிப்பு வரலாற்றில் ஒரு முக்கியநிகழ்வாகும். தெற்காசியா எங்கும் தேடக் கிடைக்காத தொன்மைவாய்ந்த, போற்றிப் பேணப்பட வேண்டிய ஏராளமான நூல்கள்மற்றும் ஆவணச் சுவடிகள் திட்டமிட்டு தீயிட்டழிக்கப்பட்டமையால்தமிழர்களின் விலைமதிப்பற்ற கலாச்சாரப் பாரம்பரியபொக்கிசமொன்று சிறிலங்கா அரசினால்நிர்மூலமாக்கப்பட்டுள்ளது. நூல் நிலையத்தை அண்டிய பகுதிகளில் அன்று எவ்விதஆத்திரமூட்டும் சம்பவங்களும் நடைபெற்றிருக்கவில்லை. யாழ்மாவட்ட பொலிஸ் தலைமைச் செயலகம் நூலகத்திலிருந்துகண்ணுக்கெட்டிய தூரத்திலேயே உள்ளது. முன்னாள்அமைச்சர்களான காமினி திசநாயக்காவும் சிறில் மத்தியூவும் தீவைப்பு சம்பவத்தை முன்னின்று நடாத்தியுள்ளார்கள். இவை யாவும்தீயிடல் சம்பவம் நன்கு திட்டமிட்டு (intent of genocide) தமிழர்வரலாற்றின் ஆவணப்படுத்தலை  அழிப்பதற்கென்று நிகழ்த்தப்பட்டகலாச்சார இனப்படுகொலை என்பதற்கு சாட்சி பகர்கின்றன. கடந்த 70 வருடங்களாக தமிழர்களுக்கெதிராக நடந்து வரும்இனப் படுகொலையை ஒரு சர்வதேச நீதிப்பொறிமுறையின் மூலம்வெளிக் கொண்டு வந்து நீதி நிலைநாட்டப்பட வேண்டும்என்பதனையும் சிறிலங்காவில் வடக்கு கிழக்கு வாழ்தமிழர்களுக்கு சர்வதேச அங்கீகாரத்துடனான ஒரு பாதுகாப்புபொறிமுறை உருவாக்கப்பட வேண்டும் என்பதனையும் பிரித்தானியதமிழர் பேரவை வலியுறுத்துகின்றது. Please follow and like us:

1
May

உலகெங்கும் இதயங்களால் இணைந்து முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையை நினைவு கூறுவோம்.

உலகத்தின் பார்வையில் இருந்து முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையை மறக்கவோ, மறுக்கவோ முடியாது. இது மனிதரால் இழைக்கப்பட பேரவலம் என்பதனை நாம் எம் மக்களுக்கு அநீதி இழைக்கப்பட்ட காலத்தில் இருந்து பாதிக்கப்பட்ட இனத்தின் சார்பாக தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றோம். தற்போது உலகெங்கும் மனித குலத்தை அச்சுறுத்தி வரும் கொறோனா பேரழிவின் விழிம்பில் நிற்கும் இவ்வேளையில் ஒட்டுமொத்த மானுடத்தின் உயிர்வாழ்வு, எதிர்காலம் குறித்த எமது அக்கறையையும், பாதிக்கப்பட்டவர்களுக்கு எமது அனுதாபங்களையும் தெரிவிப்பதோடு தமது உயிரை துச்சமாக மதித்து முன்னரங்கில் நின்று செயல்படும் அனைவரின் தியாகத்திற்கும் தலை வணங்குகின்றோம். மானுடத்தை

Read more