Sangeeth

16
Feb

சவால்களை எதிர்நோக்கும் தாயக மக்களும் இனஅழிப்புகெதிரான சர்வதேச போராட்டமும்!

  கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக இறுதிக் கட்டப் போரில்காணாமல் ஆக்கப்பட்ட தமிழ் மக்களையும், சரணடைந்த போராளிகளையும் விடுதலை செய்யக் கோரி அவர்களது குடும்பத்தாரும், உறவினர்களும், மனித உரிமைஆர்வலர்களும் போராடி வருகிற சூழலில் இலங்கை அதிபரின்அறிவிப்பு உறவினர் மற்றும் நீதிக்காகப் போராடுவோர் உள்ளங்களில் இடியென இறங்கியிருக்கிறது. இறுதிக் கட்டப்போரில் காணாமல் போனவர்களின் நிலை குறித்தறிய ஐ.நா.பெருமன்றம்வரை சென்று தமிழ்ச்சமூகம் போராடி வருகிறநிலையில், இதுகுறித்து வாய் திறக்காது கள்ளமௌனம்சாதித்து வந்த இலங்கை இனவாத அரசு, தற்போது அவர்கள்இறந்துவிட்டதாக அறிவித்திருப்பதன் மூலம் ஈழத்தில் தாங்கள் நடத்திய இனப்படுகொலையை மீண்டுமொருமுறைஒப்புக்

Read more

29
Jan

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் குறித்து சிறிலங்கா ஜனாதிபதியின் பொறுப்புத் துறப்பு! பிரித்தானிய மக்கள் ஒன்றுபட்ட கண்டன ஆர்ப்பாட்டம்!

நிலைமையின் முக்கியத்துவம் கருதி பிரித்தானிய பிரதமர் அலுவலகத்தின் முன் அமைப்புகள் ஒன்றுபட்டு குறுகிய கால அவகாசத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கணக்கான மக்கள் உணர்வுடன் கலந்து கொண்டனர். வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் விடயத்தை புறம் தள்ளி பொறுப்புக் கூறலை கைவிட முற்படும் சிறிலங்கா அரசின் செயலைக் கண்டிப்பதுடன் சிறிலங்கா அரசினை “சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில்” அல்லது அதற்கு நிகரான “சர்வதேச நீதிப் பொறிமுறை”ஒன்றின் முன் நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கையை போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் தமது கோரிக்கையாக முன்வைத்து 29 ஜனவரி 2020அன்று 4 மணியிலிருந்து

Read more

23
Jan

இறுதி யுத்தத்தில் ஸ்ரீலங்கா அரச படையினரிடம்கையளிக்கப்பட்ட எம் உறவுகள் எங்கே!

2009ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் போர்முடிவடைந்த பின்னர் சிறிலங்கா அரசபடையினரிடம் சரணடைந்த மற்றும் கைதுசெய்யப்பட்ட 18 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களின்விவரங்களை வெளியிட வேண்டும் என்று சர்வதேசஅரங்கத்தில் பிரித்தானிய தமிழர் பேரவைதொடர்ச்சியாக பல நடவடிக்கைகளைமேற்கொண்டு வந்தது. அதையொட்டி காணாமல்போனவர்களின் உறவுகள் அவர்களைத் தேடித்தருமாறும் அவர்கள் சம்பந்தமான விபரங்களைவெளியிடுமாறும் தொடர்ச்சியாக வற்புறுத்திவந்தனர். இதனை ஆராய்வதற்காக 2015 ஐநா மனிதஉரிமைக் கழகத்தின் தீர்மானம் 31/1இல் அதற்கானஒரு சரத்து இணைக்கப்பட்டு இருந்தது. ஒருமனிதாபிமான பிரச்சனை ஆகிய காணாமல்ஆக்கப்பட்டோரின் தொடர்பான விடயங்கள்சர்வதேச அரங்கில் முக்கியமான பேசுபொருளாகஉருவெடுத்தது. ஆனால் சிறிலங்கா ஜனாதிபதிகாணாமலாக்கப்பட்ட அனைவரும் கொல்லப்பட்டுவிட்டார்கள் என அறிவித்ததாக 20 ஜனவரி 2020 சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இறுதிக்கட்டப் போரில் சிறிலங்காவின் பாதுகாப்புச்செயலாளராக இருந்து தமிழினப் படுகொலைக்குசூத்திரதாரியாக வழிநடத்திய கோத்தபாய ராஜபக்ஷஅளித்த ஒப்புதல் வாக்குமூலம் ஆகவே இதனைபார்க்கவேண்டும். பல்லாயிரக்கணக்கான கொடூரமானபடுகொலைகளை அரங்கேற்றி விட்டு அவர்கள்அனைவரும் கொள்ளப்பட்டு விட்டார்கள் எனநேரடியாக ஒப்புக் கொண்ட கோத்தபாயா, காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது, அவர்கள் எவ்வாறு யாரால் எதற்காககொல்லப்பட்டார்கள் என்ற விடயங்களைத் தட்டிக்கழித்து அந்த விடயத்தை மூடிமறைத்து முடிவுக்குகொண்டு வர முயல்கின்றார். கைக் குழந்தைகள், சிறுவர்கள், பெண்கள் உட்படவிலைமதிப்பற்ற பல்லாயிரக்கணக்கானஉயிர்களிற்கும் அவர்களின் உறவுகள் சிந்தும்கண்ணீருக்கும் நீதி கிடைக்க வேண்டும். ஜெனீவாஉடன்படிக்கை (Geneva convention) மற்றும்சர்வதேச சட்டங்கள் என்பனவற்றை உதாசீனம்செய்த சிறிலங்கா அரசின் செயலைக்கண்டிப்பதோடு காணாமல் ஆக்கப்பட்டோர் விடயம்உட்பட தமிழ் மக்களுக்கு எதிராக நிகழ்த்தப்படும்அனைத்து மனித உரிமை மீறல்கள் மற்றும்இனப்படுகொலையை உலக நாடுகள் தலையிட்டுவிசாரிக்க சர்வதேச சுயாதீன விசாரணைஉடனடியாக உருவாக்க வேண்டும் என்றகோரிக்கையை முன்வைத்து எதிர்வரும் 29 ஜனவரி2020 புதன்கிழமை அன்று 4 மணியிலிருந்து 7 மணிவரை மத்திய லண்டனில் ஆர்ப்பாட்டமொன்றுபிரித்தானிய தமிழர் பேரவை புலம்பெயர்அமைப்புகளின் பங்களிப்போடு ஒழுங்குசெய்யப்பட்டு வருகின்றது. இது குறித்த மேலதிகவிபரங்கள் பின்னர் அறியத்தரப்படும். சர்வதேச அரங்கத்தில் முக்கியமான தருணத்தில்இவ் விடயத்தை முன் வைத்து முன்னெடுக்கப்படும்ஆர்ப்பாட்டத்தில் பிரித்தானியா வாழ் மக்கள் கலந்துகொள்ளுமாறு வேண்டிக் கொள்கின்றோம். இறுதி யுத்தத்தில் ஸ்ரீலங்கா அரச படையினரிடம் கையளிக்கப்பட்ட எம் உறவுகள் எங்கே! 23 01 2020   Please follow and like us:

12
Jan

தை மாதத்தினை “தமிழர் மரபுரிமை மாதமாக” இந்த நாட்டில் அங்கீகரிக்க வேண்டும் – பிரித்தானிய தமிழர் பேரவை

தனிச் சிறப்பு மிக்க தொன்மை வாய்ந்த மொழி, பண்பாடு, வரலாறுடன் கூடிய தமிழினத்தினை அடையாளப்படுத்தும் பல அம்சங்கள் உள்ளன. இயற்கையின் சமநிலையைக் குழப்பாத உற்பத்தி முறைகள் அதற்கு முக்கியமான நிலம், நீர், ஆதவன், விலங்குகள் போன்றவற்றை காலகாலமாக நன்றியுடன் நினைவு கூறும் பண்டிகைகள், பழக்க வழக்கங்கள் இன்றளவும் தொடர்கின்றன. அவை உலகெங்கும் தமிழ்கூறும் நல்லுலகை அடையாளப்படுத்தவும் ஒன்றாகப் பிணைத்து வைத்திருக்கவும் வழிவகுத்துள்ளன. தம் நிலத்தையும் பாரம்பரிய இனத்துவத்துக்கான அடையாளங்களையும் தக்க வைக்கப் போராடும் தாயகத்திலுள்ள எம் உறவுகள் துன்ப துயரங்களைக் கடந்து “தை பிறந்தால்

Read more

30
Jul

British Tamils reiterate call for UK Government to boycott CHOGM in Sri Lanka

In a recent meeting with Rt. Hon Alistair Burt MP – the Foreign Office Minister responsible  for South  Asia, British Tamils expressed their disappointment at the Prime Minister David Cameron’s decision to  visit Sri Lanka in November 2013, for the Commonwealth Heads of Government Meeting (CHOGM).  In the meeting, which was facilitated by the British Tamils Forum, Tamil representatives from a number  of Tamil groups based in the UK explained to the minister the reasons why the UK Government should  reconsider its decision to attend CHOGM in Sri Lanka. They further reasoned that this Commonwealth  summit in Sri Lanka would be against the fundamental political values of the Commonwealth and the  Commonwealth charter signed by the Queen on Commonwealth Day this year.    The  delegation  explained  the  culture  of  impunity,  lack  of  accountability  and  continuing  structural  genocide against Tamils in Sri Lanka ‐ describing both historical and current events and discussing their  moral and legal ramifications. They criticised the UK’s role in the failure to protect Tamils in 2009 and  the  failure  to bring Sri Lanka  to account ever  since – a  failure  that  sets  the conditions  for continued  abuses with impunity by the Sri Lankan state. The Minister was sympathetic to the concerns expressed  by the Tamil representatives but differed on the suggested course of action to address these concerns.  The  delegation  also  pointed  out  to  the  minister  the  failure  of  the  UK’s  strategy:  soft  diplomatic  engagement and influence has still not delivered justice to the victims though the war ended over four  years ago.   The Minister, in his  response declined  the delegation’s suggestion for a boycott or venue change  for 

Read more