25 ஏப்ரல் 2023 செவ்வாய்கிழமை அன்று சிறிலங்காவின் வடக்கு மற்றும் கிழக்கில் பொது வேலைநிறுத்தத்திற்கு புலம்பெயர்ந்த தமிழர் அமைப்புக்கள் ஆதரவு

 சிறிலங்காவின் வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள தமிழர்களின் பாரம்பரிய தாயகத்தில் 25 ஏப்ரல் 2023 செவ்வாய்க்கிழமை அன்று இடம்பெறவுள்ள பொது வேலைநிறுத்தத்திற்கு (ஹர்த்தாலுக்கு) புலம்பெயர்ந்த தமிழர் அமைப்புக்களான நாங்கள் முழு ஆதரவை வழங்குகிறோம். இந்த இக்கட்டான நேரத்தில் கருத்து வேறுபாடுகளைக் களைந்து பொது வேலைநிறுத்தத்திற்கு ஆதரவளிக்க அனைத்து புலம்பெயர் அமைப்புகளையும் அன்புடன் அழைக்கிறோம்.

பொது வேலைநிறுத்தத்தின் நோக்கங்கள்:

  • சிறிலங்கா பாராளுமன்றத்தின் அங்கீகாரத்திற்காக சமர்ப்பிக்கப்படவுள்ள பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்திற்கு எதிர்ப்பு தெரிவிப்பது. ஏனெனில் இது தற்போதைய பயங்கரவாதத் தடைச் சட்டத்தை விட மோசமானது.
  • ஒரு திட்டமிட்ட கட்டமைப்பு ரீதியான இனப்படுகொலையை செய்து தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை மறுதலிக்கும் பின் வரும் நடவடிக்கைகளை எதிர்ப்பதற்காக:

o நில அபகரிப்பு

o தமிழர் தாயகத்தில் தெற்கிலிருந்து சிங்கள மக்களை குடியேற்றம் செய்வதன் மூலம் தீவின் வடக்கு-கிழக்கில் வாழும் தமிழ் மக்களின் குடித்தொகையை சிதைத்தல்

o தமிழ் மரபுச் சான்றுகளை அழித்தல்

o வரலாற்றுச் சிறப்புமிக்க இந்துக் கோவில்களை இடித்து, அதற்குப் பதிலாக புத்த விகாரைகள் அமைத்தல்.

இவை யாவும் தீவின் வடக்கு கிழக்கில் வாழும் தமிழ் மக்களின் நீண்ட வரலாற்றை திரித்து மறுப்பதை நோக்கமாக கொண்டது.

இந்த பொது வேலைநிறுத்தத்தினை ஆரம்பித்து நடாத்தும் அனைத்து அரசியல் கட்சிகள், மத நிறுவனங்கள், தொழிற்சங்கங்கள், பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் ஏனைய சிவில் சமூக அமைப்புக்களுக்கு எமது மனமார்ந்த நன்றியையும் நேசத்தையும் தெரிவித்துக் கொள்கிறோம். மேலும் எதிர்காலத்திலும் இது போன்ற ஒருங்கிணைந்த நடவடிக்கைகளைத் தொடர ஊக்குவிக்கிறோம்.

இலங்கையில் வாழும் அனைத்து தமிழ் மக்களையும் தமிழ் அரசியல் கட்சிகளையும் ஒன்றிணைந்து இந்த பொது வேலைநிறுத்தத்தில்  கலந்து கொண்டு சிங்கள பௌத்த அரசிற்கும் பெரும்பாண்மை சிங்கள மக்களுக்கும் சர்வதேச சமூகத்தினருக்கும் எமது ஒற்றுமையின் பலத்தை வெளிப்படுத்துமாறு அழைப்பு விடுக்கின்றோம்.

On behalf of:

SUPPORT TO HARTAL IN NORTH & EAST OF SRI LANKA ON TUESDAY 25 APRIL 2023 TAMIL

Please follow and like us:
error

Comments are closed.