வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பிரித்தானிய பாராளுமன்ற உள் அரங்கில்    தமிழர் மரபுரிமை திங்கள் – தைபொங்கல் திருநாள்

புலம்பெயர் தமிழர்கள் தமது கலாச்சர பண்பாடுகளை பேணி பாதுகாக்கும் முகமாக புலம்பெயர் தேசத்தில் பல்வேறு  தமிழ் பண்டிகைகளையும் கலாச்சார நிகழ்வுகளையும்  மிக முனைப்போடு முன்னெடுத்து வருகின்றமை மிக பாராட்டுதலுக்குரியது. இப் பண்டிகைகள் தமிழர்கள்  தமக்கிடையில் மட்டும் கொண்டாடும் நிகழ்வாக அல்லாமல் உலக அரங்கில் தமிழர்களின் தனித்துவ அடையாளத்தையும் எமது கலாச்சரத்தையும் உலகறியச் செய்வதன் முக்கியத்துவம் கருதி பிரித்தானிய தமிழர் பேரவையினர் ஆகிய நாம் முதன் முதலில் பிரித்தானியாவின் ஹரோ கவுன்சிலில் தை பொங்கல் திருநாளினை சில பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் சகிதம் ஒழுங்கு செய்திருந்தோம். அதன் பிற்பாடு பிரித்தானியாவின் பாராளுமன்றத்தில், கடந்த பல வருடங்களாக தொடர்ச்சியாக தை மாதத்தினை தமிழர் மரபுரிமை மாதமாக அங்கீகரிக்க கோரி  பாராளுமன்ற உறுப்பினர்களின் பிரசன்னத்துடனும், பிரித்தானிய வாழ் தமிழ் இளையோர்களின் ஆதரவுடனும் சிறப்பாக முன்னெடுத்திருந்தோம்.

இச் செயற்பாடுகள் தொடர்பில் எமக்கான ஆதரவு உலக தமிழர்களிடம் இருந்து கிடைக்கப் பெற்றது மட்டுமன்றி தமது நாடுகளிலும் இவ்வாறான முயற்சியை உலகத் தமிழர்கள் முன்னெடுத்து இருந்தனர். முக்கியமாக கனடா வாழ் தமிழர்களின் முயற்சியினால்  அக்டோபர் 2016ம்  வருடம் கனடா தேசம் தை மாதத்தினை தமிழர் மரபுரிமை மாதமாக அங்கீகரித்து தமிழர்க்கும் தமிழுக்கும் பெருமை சேர்த்து இருந்தது. கடந்த வருடமும் இவ் வருடமும்  பிரித்தானியாவிலும் எமக்கான உத்தியோகபூர்வ அங்கீகாரத்துக்கான நடவடிக்கையாக,   பாராளுமன்றத்தின் இரு உள்ளரங்கங்களில் பெரும் எண்ணிக்கையான பாராளுமன்ற உறுப்பினர்கள், அரசியல் தலைவர்கள், சமய குருமார்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் பங்குபற்றும் நிகழ்வாக முன்னெடுக்கப்படவுள்ளதுடன்  பிரித்தானிய பிரதமருக்கு, ஜனவரி மாதத்தினை தமிழர் மரபுரிமை மாதமாக அங்கீகரிக்குமாறு கோரும் உத்தியோகபூர்வ விண்ணப்பம் ஒன்றும் சமர்பிக்கப்பட்டுள்ளது.

பிரித்தானிய பிரதமருக்கான இவ் உத்தியோகபூர்வ விண்ணப்பத்திற்கு தம்மையும் ஈடுபடுத்தி எமக்கான முழு ஆதரவு வழங்கிய ஏனைய தமிழ் அமைப்புக்கள் மற்றும் அனைத்து நிர்வாகங்களுக்கும்  இச் சமயத்தில் எம் மனப்பூர்வ நன்றியை தெரிவிப்பதுடன்,  தொடர்ச்சியாக எமக்கு கிடைத்து வரும் தமிழர்களின் ஆதரவினால் மற்றுமொரு விண்ணப்பம் சமர்ப்பிக்கும் செயல்திட்டத்தினை தற்போது முன்னெடுத்து வருகின்றோம். இச் செயற்பாட்டிற்கு ஆதரவு  தர விரும்பும் அமைப்புகள் அல்லது ஏனைய தமிழ் பாடசாலை, ஆலய மற்றும் ஊர்ச் சங்க நிர்வாகங்கள் உட்பட தமிழர் நலன் பேணும் சமூக நிறுவனங்கள்  கால தாமதமின்றி எம்மை தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

இதுவரை தமது ஆதரவினை வழங்கியுள்ள தமிழர் நலன் பேணும் அமைப்புகளின் விபரம் இங்கே தரப்பட்டுள்ளது.

 1. Agaram Senthamizh Foundation
 1. Arivu Foundation
 2. Federation of Tamil Organisations Waltham Forest
 3. Sri Katpaga Vinaygar Temple
 4. Sri Merupuram Kali Amman temple
 5. Tamil Catholic Chaplaincy
 6. Emmanuel Christian Fellowship
 7. Waltham Forest Tamil Sangam
 8. Tamil Elders Welfare Association
 9. Waltham Forest Sai Centre
 10. London Tamil Centre
 11. Milton Keynes Murugan Temple Trust
 12. OSA CMMV UK
 13. Ray of Hope People
 14. Tamil Association of Brent (TAB)
 15. Tamil Academy of Language and Arts (TALA)
 16. Tamil Learning Centre- Crawley
 17. Thaaitamil Sangam, A Coventry & Warwickshire Tamil Community
 18. Thamilavai
 19. The Milton Keynes Tamil Forum
 20. Tamil Studies UK (TSUK)
 21. Federation of Saiva (Hindu) Temples – United Kingdom
 22. Sri Ghanapathy temple
 23. Sri Kanaga Durka Amman Kovil
 24. Highgatehill Murugan temple
 25. Sri Rajarajeswari Amman temple
 26. London Sivan Kovil
 27. Crawley Sri Swarna Kamadchi Amman temple
 28. Sri Katpaga Vinayagar temple
 29. Enfield Nagapooshani Ambaal temple
 30. Arulmigu Sri Sivagami Sametha
 31. London Sri Selvavinayagar temple
 32. Sri Sithi Vinayagar Thevasthanam
 33. Shree Sakthy Ghanapathy temple
 34. Eela Patheeswarar temple
 35. New Malden Murugan temple
 36. Sri Merupuram Maha Pathiragali Amman Devasthanam
 37. Coventry Shree Maha Sithi Vinayagar
 38. London Sree Ayyappan Temple
 39. Eela Kanthan temple
 40. Liverpool Ganesh temple
 41. Sri Thurkkai Amman temple
 42. Meenakshi temple
 43. Sri Katpaga Vinayahar temple
 44. Kopay Christian College Old Students Association UK
 45. Attiar Hindu College Old Student Association UK
 46. Neervely Welfare Association UK
 47. Tamil Mandram Cardiff
 48. Shri Kalpaga Hindu Culture Association
 49. SWaT badminton club (south Wales Tamils)
 50. Surrey Tamil School
 51. ITC Kingston Tamil School
 52. Tamil Learning Centre- Crawley
 53. Milton Keynes Tamil Academy
 54. UNITY – United Tamil Artiste
 55. Nottingham Tamil School
 56. Sivapatha Natyalaya
 57. Alaveddy Makkal Sangam
 58. NAAME NAMAKKU
 59. Conservative Friends of Tamils (CFT)
 60. Tamils for Labour (TfL)
 61. Tamil Friends of Liberal Democrats (TFLibDem)
 62. Rayners football club
 63. Maruthanila Charity
 64. Thayakam sports club, Milton Keynes
 65. Maidstone All Stars Club
 66. Croydon Academy of Eastern Arts
 67. Serendip Children’s Home
 68. Hendon Tamil School
 69. Tamil Women Development Forum (TWDF)

Tamil Press Release Pongal Event

Please follow and like us:
error

Comments are closed.