வழமைபோல், இவ் வருடமும் பிரித்தானிய தமிழர் பேரவை (பி.த.பே) கீழ்க்காணும் உலகளாவிய சகோதர தமிழர் அமைப்புக்களுடன் இணைந்து 38ஆம் வருட கருப்பு ஜூலை 1983 நிகழ்வை எதிர்வரும் 27-07-2021 அன்று பி.ப. 6.00 மணி முதல் பி.ப. 7.30 (GMT) மணிவரை இணைய வழியில் நடாத்த உள்ளது.
ஆஸ்திரேலியத் தமிழ் காங்கிரஸ் (ATC),
பிரான்ஸ் தமிழ் ஈழ மக்களவை (MTE),
அயர்லாந்து தமிழர் பேரவை (ITF),
கனடியத் தமிழர் தேசிய அவை (NCCT),
நோர்வே ஈழத் தமிழர் அவை (NCET),
நீதிக்கும் சமாதானத்துக்குமான ஒற்றுமைக் குழு – தென் ஆப்பிரிக்கா (SGPJ – South Africa),
ஐக்கிய அமெரிக்க தமிழர் நடவடிக்கை குழு (USTAG).
இலங்கை அரசின் தமிழர்களுக்கு எதிரான திட்டமிட்ட இனப்படுகொலை பல்வேறு வடிவங்களில் காலத்துக்கு காலம் அரங்கேறி வருகிறது. 1983 ஜூலையில் கொழும்பில் சுற்றுலா பயணிகள் நிறைந்திருந்ததால் அங்கு நடைபெற்ற இனப்படுகொலை கண்கண்ட சாட்சியங்கள் மூலம் வெளி உலக வெளிச்சத்திற்கு வந்தது. தமிழர்கள் படுகொலையுண்ட காட்சிகளும் சம காலத்தில் வெளி நாடுகளில் தொலைக்காட்சிகளில் காண்பிக்கப்பட்டன.
கடந்த மார்ச் மாதம் ஐ. நா. மனித உரிமைச் சபையின் 46வது அமர்வில் சிறிலங்கா அரசுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட பாரதூரமான தீர்மானத்தின் பின்பும் சிறிலங்கா அரசு தனது தமிழர் விரோதப் போக்கில் தளர்வைக் காட்டவில்லை. சிறிலங்காவை ஒரே இனம், ஒரே மதம், ஒரே மொழி கொண்ட சிங்கள-பெளத்த மேலாதிக்க நாடாக மாற்றும் நிகழ்ச்சி நிரலுடன் அரசு செயல்படுகின்றது.
ஐ.நா. மனித உரிமைகளுக்கான உயர் ஸ்தானிகர் காரியாலயத்தின் 2015 அறிக்கையில் (OISL report 2015) குற்றமிழைத்தாக அடையாளம் காட்டப்பட்டவர்கள் இன்று சிறிலங்கா அரசாங்கத்தில் பொறுப்பு வாய்ந்த உயர் பதவிகளில் அதே அறிக்கையில் பெயரிடப்பட்டிருக்கும் தற்போதைய சிறிலங்கா ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சவினால் அமர்த்தப்பட்டுள்ளமை நெறிமுறையற்ற ஓர் அப்பட்டமான ஜனநாயக விரோத செயலாகும்.
சர்வதேச சமூகம் முன்வந்து பொருளாதாரத் தடைகள் (ECONOMIC SANCTIONS), நெறிமுறையற்ற வர்த்தகத்தை (UNETHICAL TRADE) நிறுத்துவது, GSP+, மற்றும் அது போன்ற சலுகைகளை நிறுத்துவது ஆகிய ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்வது பற்றி ஆராயுமாறு நாம் கோரிக்கை வைக்கின்றோம்.
தொடரும் வன்முறை சுழற்சி (Cycles of Violence), பாதிக்கப்பட்டவர் சாட்சியம், எதிர்காலத்தில் உருவாகப் போகும் அனர்த்தங்கள், வன்முறைகள் தொடர்வதற்கான மூல காரணங்கள் (Root causes of the conflict) போன்ற காத்திரமான விடயங்கள் கலந்துரையாடப்படப் போவதுடன் முக்கியமான சர்வதேச மனித உரிமை அமைப்புகள் பங்கு பெறப் போகும் இந்த நிகழ்வில் உலகளாவிய தமிழ் மக்களையும் மனித உரிமை ஆர்வலர்களையும் கலந்து கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.
நினைவுகூரல் நிகழ்வில் கலந்து கொள்வது உட்பட்ட விபரங்கள் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.
Zoom – – https://tinyurl.com/BlackJuly1983
Meeting ID: 318 409 4196
Passcode: 1983
இந் நிகழ்ச்சியை பின்வரும் தளங்களினூடாகவும் பார்வையிடலாம்.:
BTF Facebook (live) – @BritishTamilsForum
BTF YouTube (live) – British Tamils Forum Channel
38 th Year of Rememberence of Black July
Black July 2021 flyer (Tamil ) _ 2 (1)
Comments are closed.