அமரர் இல. கணேசன் ஐயா இரங்கல் அறிக்கை

அமரர் இல. கணேசன் ஐயா அவர்கள் பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாட்டின் மூத்த அரசியல்வாதியும், கட்சியின் தேசியக் குழுவின் முன்னாள் உறுப்பினரும், நாகாலாந்து, மணிப்பூர், மேற்குவங்காளம் ஆகிய மாநிலங்களின் முன்னாள் ஆளுநருமாவார். மேலும், அவர் முன்னாள் நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராகவும் பணியாற்றியுள்ளார்.

பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு மாநில செயலராக நியமிக்கப்படுவதற்கு முன்பு, கட்சியின் தேசிய செயலாளர், தேசிய துணைத்தலைவர், தமிழ்நாடு மாநிலத் தலைவர் ஆகிய பதவிகளை வகித்துள்ளார்.

அரசியல் பணி முழுவதிலும் நேர்மை, அர்ப்பணிப்பு மற்றும் அன்பு நிறைந்த பண்புகளைக் கொண்டிருந்த அவரின் சேவைகள் என்றும் நினைவுகூரப்படும். இந்திய அரசியலில் இருந்த போதும் ஈழத் தமிழர்களின் நலனின் மீது கொண்டிருந்த அக்கறை சிறப்பாகக் குறிப்பிடத் தக்கது. தமிழ் தேசியத்தின் பால் அவரின் ஈர்ப்பு எப்போதும் வெளிப்படையாக இருந்தது.

அவரது மறைவு இந்திய அரசியலுக்கும், ஈழத் தமிழர்களுக்கும் ஒரு பெரிய இழப்பாகும்.

அமரர் இல. கணேசன் ஐயா அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள், அரசியல் பிரமுகர்கள் அனைவருக்கும் பிரித்தானிய தமிழர் பேரவையின் சார்பில் எங்கள் ஆழ்ந்த அனுதாபங்களையும், இரங்கலையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.

அமரர் இல. கணேசன் ஐயா இரங்கல் அறிக்கை

Please follow and like us:
error

Comments are closed.