பிரித்தானிய அரசியலில் அண்மைக்காலமாக தமிழர்கள் சார்பான
கொள்கைகளில் பல சாதகமான மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றது.
பிரித்தானியாவின் பெரும் கட்சிகளின் தலைவர்கள் உலகத் தமிழர்
பேரவையின் அங்குரார்ப்பண வைபவத்தில் தோன்றியமையும், பல
பாராளுமன்ற விவாதங்களை நிகழ்த்தி ஈழ விவகாரத்தை ஆராய்ந்தமையும்,
பிரித்தானியா வாழ் தமிழர்களுக்கு நம்பிக்கையை கொடுக்கின்றது.
இவ்வாறான நிகழ்வுகளின் பின்னால் தமிழ் மக்களின் நண்பர்கள்
பாராளுமன்றத்தில் கடுமையாக உழைத்திருக்கின்றார்கள். பிரித்தானிய
ஆட்சியாளர்களின் மனத்தினை முழுமையாக வெல்வதற்கு நாம் இன்னும்
நீண்ட தூரம் பயணிக்க வேண்டும். அதற்கு எமது நண்பர்கள்
பாராளுமன்றம் செல்லவேண்டும்.
யாருக்கு வாக்களிக்க வேண்டும்?
பேரவை கட்சி சார்பின்றி அனைத்து கட்சிகளோடும் இணைந்து
பணியாற்றுகின்றது. அனைத்துக் கட்சிகளிலும் அங்கம் வகிக்கும் எமது
நண்பர்கள் பாராளுமன்றத்திற்கு தெரிவாவது எமக்கு மிகப்பெரும் பலத்தினை
சேர்க்கும். ஆகவே இதுவரை காலமும் எமக்காக குரல் கொடுத்த,
எமக்காக இதய சுத்தியோடு உழைத்த அனைவரும் மீண்டும் பாராளுமன்றம்
செல்ல வேண்டும். அத்தோடு தமிழ் மக்களுக்காக உழைக்க திடசங்கல்ப்பம்
பூண்டுள்ள புதிய நண்பர்கள் பலர் இப்பாராளுமன்றத் தேர்தலில்
வேட்பாளராக நிற்கின்றனர். இவர்களும் பாராளுமன்றத்திற்கு தெரிவாகினால்
பிரித்தானிய அரசியலில் தமிழர் சார்பான மேலும் நல்ல மாற்றங்கள் உருவாகும்.
இத்தேர்தலில் தமிழ் மக்கள் வாக்களித்து எமது நண்பர்களை
பாராளுமன்றத்திற்கு அனுப்பும் பணியை மேற்கொள்ளுமாறு பேரவை கேட்டுக்
கொள்கின்றது
Comments are closed.