Tamil News – British Tamils Forum https://www.britishtamilsforum.org BTF (United Kingdom), Our organisation will be the bridging voice between the British Tamil Community and the Tamil people in the island of Sri Lanka. Thu, 18 Jan 2024 20:37:15 +0000 en-GB hourly 1 https://wordpress.org/?v=4.9.6 https://www.britishtamilsforum.org/8976-2/ Sat, 28 May 2022 17:32:21 +0000 http://www.britishtamilsforum.org/?p=8976 Read more]]> “சிறிலங்காவில் சீன ஆதிக்கத்துடன் தமிழ் இனப்படுகொலை தீவிரமடைகிறது”

பிரித்தானிய  தமிழர்  பேரவையின் கண்காட்சியும் புத்தக வெளியீடும்

பிரித்தானியத் தமிழர் பேரவை (BTF), 13வது ஆண்டு முள்ளிவாய்க்கால் இன அழிப்பு நினைவேந்தல் நிகழ்வின் ஒரு பகுதியாக, 18 மே 2022 அன்று லண்டனில் உள்ள ட்ரஃபல்கர் சதுக்கத்தில் (Trafalgar square) கூடியது, கடந்த ஏழு தசாப்தங்களாக தொடரும் தமிழ் மக்கள் மீதான இன அழிப்பு மற்றும் வன்முறைச் சுழற்சிகளின் வரலாற்றையும் அதற்கான காரணிகளையும் ஆதாரபூர்வமாக வெளிப்படுத்தும் ஐம்பதுக்கும் மேற்பட்ட விடயங்கள் குறித்த “சிறிலங்காவில் சீன ஆதிக்கத்துடன் தமிழ் இனப்படுகொலை தீவிரமடைகிறது” எனும் தலைப்பிலான கண்காட்சியை ஏற்பாடு செய்தது. 

செப்டம்பர் 2021 மற்றும் மார்ச் 2022 இல் நடந்த ஐ.நா. மனித உரிமைக் கழக (UNHRC) அமர்வுகளின் போது ஜெனீவாவில் காட்சிப்படுத்தியதன் தொடர்ச்சியாக மத்திய லண்டனில் ட்ரஃபல்கர் சதுக்கத்தில் பிரித்தானிய தமிழர் பேரவை மூன்றாவது முறையாகக் காட்சிப்படுத்தியது, இக் கண்காட்சியை பொதுமக்களுக்கு இலவசமாக பார்வையிடும் ஏற்பாடுகள் செய்யப்பட்டதனால் பெருமளவிலான பல்லின மக்கள் வந்து பார்வையிட்டு சென்றமை குறிப்பிடத் தக்கது.  

இருபது இளம் தலைமுறை செயல்பாட்டாளர்கள் அவர்களிடையே காட்சிகளைப் பகிர்ந்து கொண்டு, தேவையான இடங்களில் மக்களுக்கு வழிகாட்டுதல் மற்றும் விளக்கமளித்தனர்.

ஒவ்வொரு காட்சியிலும் வழங்கப்பட்ட தகவல்கள் மற்றும் புள்ளிவிவரங்கள் மிகவும் காத்திரமானதும் முன்னர் எப்போதும் வெளிக் கொண்டு வரப்படாத புதிய தகவல்களாகவும் இருந்தது. கண்காட்சியை மிகவும் ஆர்வத்துடன் பார்வையிட்ட ஏராளமான பல்லின மக்கள் அவற்றைப் படித்து, இளம் தலைமுறை செயல்பாட்டாளர்களிடம் கேள்விகளைக் கேட்டு, தங்கள் கைபேசியில் காட்சிகளை புகைப்படம் எடுத்தனர்.

1956 ஆம் ஆண்டு சிங்களம் மட்டும் சட்டம் கொண்டு வரப்பட்ட போது அதற்கு எதிராக தமிழ் மக்கள் கிளர்ந்தெழுந்து சனநாயக வழிமுறைகளில் எதிர்ப்பைத் தெரிவித்த போது அதனையே சாட்டாக வைத்து தமிழ் பகுதிகளில் இராணுவ முகாம்களை அமைத்து தமிழ் மக்களை ஒடுக்குவதற்கு அரசு முன்வந்தது என்ற விளக்கத்துடன் முதல் காட்சி தொடங்கியது. இது தமிழ் மக்களை ஆயுதரீதியாக அழிக்கும் திட்டத்தை 1963ஆம் ஆண்டிலேயே சிறிலங்கா தனது மூலோபாயத்தில் உட்கொண்டு வந்ததை நிரூபிப்பதுடன்  இன அழிப்பின் உள்நோக்கத்தையும் (intent of Genocide) வெளிப்படுத்துகின்றது. வன்முறையின் சுழற்சிகள் அவ்வப்போது தொடர்ந்தன, ஒவ்வொரு முறையும் வன்முறையின் தீவிரம் அதிகரித்தது.

நம்பகமான ஆதாரங்களில் இருந்து பெறப்பட்ட உண்மைகள் மற்றும் புள்ளிவிபரங்கள், தமிழர் தாயகத்தில் தேவையற்ற உயர் இராணுவ நிலைநிறுத்தத்தை மேற்கோள் காட்டி, தமிழ் மக்களை அச்சுறுத்தல், கைது, தடுப்பு, சித்திரவதை மற்றும் கொடூரமான பயங்கரவாதத் தடைச் சட்டடத்தினை (PTA) பாவித்து தமிழ் மக்களை மரண பயத்துடன் தொடர்ந்து அச்சுறுத்தி வைத்திருக்க வழிவகுத்தது.

குடிசார் வாழ்வில் இராணுவமயமாக்கல், ஊடகவியலாளர்கள் மற்றும் மனித உரிமைப் பாதுகாவலர்களுக்கு எதிராக பயங்கரவாத தடைச்சட்டத்தின் போர்வையில் அரச பாதுகாப்புப் படையினரால் இழைக்கப்பட்ட அட்டூழியங்கள், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர், தமிழர் தாயகத்தில் சனத்தொகை மாற்றம், தமிழ் மக்கள் தொகை வீழ்ச்சி, தமிழர் தாயகத்தில் நில அபகரிப்பு, தமிழர் தாயகத்தில் பௌத்த கட்டமைப்புகளை அதிகரிப்பது போன்ற காட்சிகள் பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்ததுடன் அவற்றை தம் கைத் தொலைபேசியில் (Mobile phone) பதிவு செய்து கொண்டது குறிப்பிடத் தக்கது. 

இலங்கையின் தற்போதைய நிதி நெருக்கடிகளுக்கான காரணங்கள் மற்றும் விளைவுகளைக் காட்டும் புள்ளிவிபரத் தரவுகளுடன் வரைபடங்களுடன் காட்சிப் பொருள்கள் சேர்க்கப்பட்டுள்ளன, இதற்கு சீனத் தாக்கம் ஒரு முக்கிய காரணியாக உள்ளது. சீனாவின் செல்வாக்கு, குறிப்பாக போர் முடிவுக்குக் கொண்டு வரப்பட்ட பின் சிறிலங்காவை அதன் தற்போதைய அவல நிலைக்கு எவ்வாறு இட்டுச் சென்றது என்பதை பல காட்சிகள் தெளிவான ஆதாரங்களுடன் சித்தரித்தன.

இறுதிக் காட்சியானது சிறிலங்காவில் தமிழர்களுக்கு எதிரான மாபாதக குற்றமிழைத்தவர்களுக்கு எதிராக உலகளாவிய மனித உரிமைகள் தடைச் சட்டத்தின் பிரயோகத்தை வலியுறுத்தும் அதேவேளை, இலங்கையில் பொறுப்புக்கூறல் மற்றும் சர்வதேச குற்றவியல் நீதிப் பொறிமுறை உருவாக்குதல், உலகளாவிய நியாயாதிக்க சட்டத்தை (Universal Jurisdiction) வலுப்படுத்தி பயணத் தடை மற்றும் சொத்து முடக்கம், நெறிமுறையற்ற வர்த்தகத்தை நிறுத்துதல் மற்றும் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு போன்ற முக்கிய அம்சங்களை அமுல்படுத்த கோருகின்றது.

இக் கண்காட்சியின் உள்ளடக்கங்கள் தொகுக்கப்பட்டு முன்னுரையுடன் “Tamil Genocide Intensifies in Sri Lanka with Chinese Influence” எனும் தலைப்பில் ஒரு புத்தகமாகத் தயாரிக்கப்பட்டுள்ளது, இது கல்வியாளர்களுக்கும், ஆய்வாளர்களுக்கும் கொள்கை வகுப்பாளர்களுக்கும் அரசியல்வாதிகளுக்கும் பொதுமக்களுக்கும் மிகக் காத்திரமான துல்லியமான தகவல்களை வழங்குகிறது.

இப் புத்தகமானது அதன் மூலோபாய முக்கியத்துவம் கருதி முள்ளிவாய்க்கால் இன அழிப்பு நினைவு கூரல் நிகழ்வு இடம் பெற்ற மேடையில் வைத்து லிபெரல் டெமோகிராடிக் (Liberal Democratic party) கட்சித் தலைவரும் தமிழர்களுக்கான அனைத்துக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் குழுவின் (APPG for Tamils) உப தலைவருமான சேர் எட் டேவி (Rt Hon Sir Ed Davey MP) அவர்கள் மூலம் வெளியிட்டு வைக்கப்பட்டதுடன் பிரதிகள் அங்கு வருகை தந்த பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் ஏனைய முக்கியஸ்தர்ளுக்கும் வழங்கப்பட்டது.

பங்கு பற்றியோருக்கும், உதவி செய்தோருக்கும், பொதுமக்களுக்கும் லண்டன் மாநகரத்துக்கும் இந்த நிகழ்வு உணர்வுபூர்வமாகவும் சிறப்பாகவும் நடந்தேற ஒத்துழைத்தமைக்கு பிரித்தானிய தமிழர் பேரவை தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது.

“Tamil Genocide Intensifies in Sri Lanka with Chinese Influence” எனும் வெளியீட்டினை பின் வரும் இணைப்பினை பாவித்து தரவிறக்கம் செய்து கொள்ளலாம். Tamil Genocide Intensifies in Sri Lanka with Chinese Influence – British Tamils Forum

இது போன்ற ஆய்வுகளை நடத்தவும் தொகுத்து வெளியிடவும் பிரித்தானிய தமிழர் பேரவை உங்களது செயல்பூர்வமான உன்னத பங்களிப்பினை வேண்டி நிற்கின்றது. இளையோர், முதியோர், ஆண், பெண் என்ற வேறுபாடின்றி இதில் ஆர்வமுள்ளோர் அனைவரும் எம்முடன் தொடர்பு கொள்ளுமாறு வேண்டுகின்றோம். அறிவின் ஆற்றலைப் பயன்படுத்தி எம் தேசத்தினை மீட்டெடுப்போம். 

மேலதிக விபரங்களுக்கு பிரித்தானிய தமிழர் பேரவையுடன் தொடர்பு கொள்ளவும்.

நன்றி.

The Video at: https://youtu.be/QZXwLSHYlXM

]]>
https://www.britishtamilsforum.org/8970-2/ Sat, 28 May 2022 17:18:48 +0000 http://www.britishtamilsforum.org/?p=8970 Read more]]> சர்வதேச குற்றவியல் நீதி விசாரனைப் பொறிமுறை ,  சர்வதேச மத்தியஸ்துவத்துடனும் உத்தரவாததுடனும் 

நீண்டகால அரசியல் தீர்வு மற்றும் புனர்வாழ்வுபுனரமைப்புமீள் குடியேற்றம் 

என்பவற்றுக்கான இடைக்கால நிர்வாகம்

13ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் இன அழிப்பு நினைவு கூரல் நிகழ்வில் பிரித்தானிய தமிழர் பேரவை

13ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் இன அழிப்பு நினைவு கூரல் நிகழ்வு கடந்த மே18ஆம் திகதி மத்திய லண்டன் ட்ரபால்கர் சதுக்கத்தில் (Trafalgar square) பல்லின மக்கள் பார்வையிடக் கூடிய ஏற்பாடுகளுடன் பிரித்தானிய தமிழர் பேரவையினரால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்ததது.

பாராளுமன்ற உறுப்பினர்கள், பொது மக்கள் என பலர் பங்குபற்ற்றியிருந்த இந்த நிகழ்வில், பிரித்தானிய தமிழர் பேரவை சார்பாக உரை நிகழ்த்திய பொது செயலாளர் ரவி குமார் அவர்கள், சிறிலங்காவில் இடம் பெற்று வரும் அவல நிலைமைக்கு சிறிலங்கா ஆட்சியாளர்கள் மாத்திரமல்லாது பௌத்த சிங்களவாதத்தினை தொடர்ச்சியாக முன்னெடுத்து கொண்டிருக்கும் மத பீடங்கள், அரசியல் விற்பன்னர்கள், வெகுசனத் தொடர்பு ஊடகங்கள்,  அதிகாரிகள், கொள்கை வகுப்பாளர்கள் ஆகியோருடன் மெத்தனமான அணுகுமுறையைக் கடைப் பிடித்த சர்வதேச நாடுகளும் பொறுப்பேற்க வேண்டும் என தெரிவித்திருந்தார்.

மேலும் இலங்கையில் தொடரும் வன்முறை சுழற்சிக்கான (Cycles of Violence) காரணங்கள் கண்டறியப்பட வேண்டுமாயின் சர்வதேச குற்றவியல் நீதி விசாரனைப் பொறிமுறை உடனடியாக உருவாக்கப்பட வேண்டும் எனவும் சர்வதேச மத்தியஸ்துவத்துடனும் உத்தரவாததுடனும் தமிழர்களுக்கான நீண்டகால அரசியல் தீர்வுக்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் மற்றும் சிறிலங்கா தேசம் கட்டவிழ்த்து விட்ட நீண்ட கால போரினால் சிதைக்கப்பட்ட தமிழர் தேசத்தில் புனர்வாழ்வு, புனரமைப்பு, மீள் குடியேற்றம் என்பவற்றுக்கான இடைக்கால நிர்வாகக் கட்டமைப்பு உருவாக்கப்பட வேண்டும் எனவும் தெரிவித்திருந்தார்.

2009ம் ஆண்டில் இருந்து சர்வதேச நாடுகளுடன் பல தளங்களில் தமிழர்களுக்கான நிரந்தர அரசியல் தீர்வு நோக்கி செயற்பட்டுவரும் பிரித்தானிய தமிழர் பேரவை, சிறிலங்கா அரசுக்கு எதிரான சர்வதேச நாடுகளின் முடிவுகள் அமைவதற்கு ஏதுவாக தமது செயற்பாடுகளை விரிவுபடுத்தியிருந்தது. குறிப்பாக சிறிலங்காவிற்கு எதிரான சர்வதேச விசாரணை தீர்மானத்துக்கு முக்கிய காரணமாக, பிரித்தானிய தமிழர் பேரவை

2010ம் ஆண்டு முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தில் ஆரம்பிக்கப்பட்ட Are They Alive? போன்ற முன்னெடுப்புகள் முக்கிய பங்கு வகித்திருந்தது.

முள்ளிவாய்க்கால் என்பது தமிழினம் மட்டுமே நினைவு கூரும் நாளாக அனுஷ்டிக்காமல், ஸ்ரெப்ரெனிக்கா என்றதும் அங்கே இடம்பெற்ற இன அழிப்பு என்பதனை உலக மக்கள் அறிய முற்பட்டது போன்று முள்ளிவாய்க்கால் அமைவிடம் மற்றும் அங்கே நடந்த படுகொலைகள் உட்பட தமிழின அழிப்பின் வரலாற்றினை உலக மக்களுக்கு அறிவூட்டும் ஒரு தொலைநோக்கோடு பிரித்தானிய தமிழர் பேரவை திட்டங்களை வகுத்து செயல்படுத்த தொடங்கியது.

படுகொலை செய்யப்பட்டும் காணாமல் ஆக்கப்பட்டும் பல கொடூர கணங்களை தாங்கி நிற்கும் எமது உறவுகளுக்கான நீதி வேண்டி எமக்கான புதிய புதிய அரசியல் உத்திகளையும் மற்றும் செயற்பாடுகளையும்  விரிவுபடுத்தி சர்வதேசத்துடன் எமது கரங்களை பலப்படுத்தி எமக்கான விடுதலைக்கான பயணத்தை தொடர்ச்சியாக மேற்கொள்வதற்கு பிரித்தானிய தமிழர் பேரவை எம் உறவுகளின் பேராதரவை வேண்டி நிற்கின்றது.

பிரித்தானிய தமிழர் பேரவையின் முழுமையான உரையினை கீழ் உள்ள இணைப்பில் பார்வையிடலாம்.

The Speech at: https://youtu.be/23hvePOal7M

The Speech text at: BTF’s Mullivaikkal Rememberence Day Speech in Text – British Tamils Forum

]]>
https://www.britishtamilsforum.org/mullaivaikkal-tamil-press/ Thu, 05 May 2022 09:46:52 +0000 http://www.britishtamilsforum.org/?p=8919 Read more]]> பிரித்தானியா பாராளுமன்றத்தில் ஆவணப் படம் திரையிடல் “இலங்கையில் தொடரும் வன்முறை சுழற்சிகள் மற்றும் இனப் படுகொலை”

1948 ஆம் ஆண்டு சுதந்திரம் பெற்றதில் இருந்து, இலங்கையில் ஆட்சிக்கு வந்த இனவாத அரசாங்கங்கள் தமிழ் மக்கள் மீது தொடரும் வன்முறை சுழற்சிகள் மற்றும் இனப் படுகொலை என்பதை சர்வதேச சமூகத்திற்கு காண்பிக்கும் வகையில், ஒரு ஆவணப் படம் தயாரிக்கப்பட்டது. பல்வேறு ஆதாரங்களில் இருந்தும் புகைப்படங்கள் மற்றும் வீடியோ பதிவுகளைப் பயன்படுத்தியும் உருவாக்கப்பட்ட ஆவணப் படம் 27 ஏப்ரல் 2022 அன்று பிரித்தானிய நாடாளுமன்றத்தில் திரையிடப்பட்டது.

கோவிட் (Covid) மற்றும் நாடாளுமன்ற விதிமுறைகள் காரணமாக பார்வையாளர்கள் எண்ணிக்கை மட்டுப்படுத்தப்பட்டன. அனைத்து கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள், மனித உரிமைகள் கண்காணிப்பகம் (Human Rights Watch – HRW) மற்றும் தமிழ் சமூகத் தலைவர்கள் இதில் கலந்து கொண்டனர். இறுதியாக, கேள்வி-பதில் நிகழ்ச்சியுடன் நிகழ்வு நிறைவுற்றது.

இந் நிகழ்வில் கலந்து கொண்டிருந்த அனைத்து கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்கள் மிக விசனத்துடனும் அதிர்ச்சியுடனும்  இக் காணொளிகளை பார்வையிட்டனர். கலந்து கொண்ட பார்வையாளர்கள் மனமுடைந்து கண்ணீருடன் இனப்படுகொலை காணொளிகளை பார்வையிட்டனர்.

இவ் ஆவணப் படத்தின் முக்கிய நோக்கம், இலங்கை தொடர்பான கொள்கை வகுப்பாளர்களுக்கும் அது தொடர்பிலான முடிவினை எடுப்பவர்களுக்கும், தமிழ் மக்களின் அவல நிலைமையினை தெரியப்படுத்துவதாக இருந்தது.

சிறிலங்கா மீது பொருளாதார தடைகளையும், போர் குற்றவாளிகளை தமது நாட்டுக்குள் அனுமதிப்பதற்கான தடைகளையும் அமுல்படுத்த முடியும். மனித உரிமைப் பாதுகாவலர்களும், அமைப்புகளும், தமிழர்கள் மீதான இனப்படுகொலையின் உண்மை நிலைமையினை உறுதிப்படுத்துவதற்கு இவ் ஆவணப்படம் சிறந்த ஆதாரமாக அமையும்

பிரித்தானியாவிடம் இருந்து இலங்கை சுதந்திரம் அடைந்ததில் இருந்து, இலங்கை அரசின், தமிழர்களுக்கு எதிரான இனப்படுகொலை ஆதாரங்களை வெளிப்படுத்தும் புகைப்பட கண்காட்சி ஒன்று  2008ம் ஆண்டு பிரித்தானிய பாராளுமன்றத்தில்  பிரித்தானிய தமிழர் பேரவையினரால் முதன்முதலாக ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.

இதன் தொடற்சியாக,2012 ம் ஆண்டு மீண்டும்  ஒரு புகைப்பட கண்காட்சி  மேலதிக தகவல்கள் மற்றும் புகைப்பட ஆதாரங்கள் திரட்டப்பட்டு பாராளுமன்றத்துக்குள் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.

அங்கு விவாதிக்கப்பட்ட விபரங்கள் பின்வருமாறு:

  • தமிழர் தாயகத்தில் இராணுவம் அகற்றப்படல் மற்றும் நாடளாவிய ரீதியில் படைக் குறைப்பு செய்தல்.
  • ஆட்சி மாற்றத்திற்குப் பதிலாக, முழுமையான கட்டமைப்பு மாற்றம் (மையப்படுத்தப்பட்ட ஒற்றையாட்சி அரசு நிறுவனங்களின் மறுசீரமைப்பு) முக்கியமானது.
  • இழப்பீடு: தீவின் வடகிழக்கை போரினால் பாதிக்கப்பட்ட பிரதேசமாக பிரகடனப்படுத்தல், தமிழர் தாயகமான வடக்கு கிழக்கினை இலங்கையின் ஏனைய பகுதிகளில் காணப்படும் சமூக அபிவிருத்தி குறிகாட்டிகள் மட்டத்திற்கு கொண்டு வருவதற்கு புனர்வாழ்வு, மீள்குடியேற்றம், மீள் கட்டமைத்தல்  மற்றும் புனரமைப்புச் செயற்பாடுகளை அமுல்படுத்துவதற்கான விசேட இடைக்கால அதிகாரசபையை நிறுவுதல்..
  • வன்முறைச் சுழற்சிகள் மீண்டும் நிகழாமல் இருப்பதை உறுதி செய்வதற்கான அரசியல் தீர்வொன்று  சுயநிர்ணய உரிமை மற்றும் அதிகாரப் பகிர்வு ஏற்பாடுகளின் அடிப்படையில் உருவாக்குவதற்காக சர்வதேச நடுவர் மன்றம் அமைக்கப்பட வேண்டும்.
  • சிறிலங்கா மீது அனைத்து அழுத்தங்களையும் பிரயோகித்து தேவைப்பட்ட அளவிலான தடைகளை படிப்படியாகப் பயன்படுத்தி காலக்கெடு உடன் கூடிய திட்டத்தின் அடிப்படையில் நீண்ட காலத் தீர்வினை உருவாக்கி செயல்படுத்திட வேண்டும். அதே வேளையில் பொதுமக்கள் பாதிக்கப்படாமல் அவர்களுக்கான உணவு, மருத்துவம் மற்றும் பிற அத்தியாவசியப் பொருட்களைப் பாதிக்காது கரிசனை எடுத்துக் கொள்ள வேண்டும்.
  • சிறிலங்காவில் போர்க் குற்றங்கள், மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் இனப் படுகொலைகளில் ஈடுபடுபவர்களுக்கு எதிரான உலகளாவிய மனித உரிமைகள் தடைகள் ஆட்சிச் சட்டம் பிரயோகிக்கப்பட வேண்டும்.
  • இலங்கையுடனான நெறிமுறையற்ற வர்த்தகத்தை நிறுத்த வேண்டும்.
  • மனித உரிமைகளை கடைபிடிக்க இலங்கையை நிர்ப்பந்திக்க, வர்த்தக மற்றும் இராஜதந்திர தடைகளை விதித்தல்.
  • கடந்த கால குற்றங்கள் மீண்டும் நிகழாமல் இருக்க உத்தரவாதம் அளிக்கும் ஒரு நடவடிக்கையாக இலங்கையில் நீதி மற்றும் பொறுப்புக்கூறலை நிலைநிறுத்துவதற்கு சர்வதேச குற்றவியல் பொறிமுறையை நிறுவுதல்.

20 நிமிட ஆவணப்படம் விரைவில் யூடியூப் (Youtube) பதிப்பாக பொதுமக்களுக்கு வெளியிடப்படும்

நிகழ்ச்சிக்கான இணைப்புகளை கீழே காணவும்.

Parliamentary Screening: Continuing Cycles of ViolenceParliamentary Screening: Continuing Cycles of Violence

https://www.britishtamilsforum.org/portfolio_item/screening-documentary-film-in-the-parliament-continuing-cycles-of-violence-and-genocide-in-sri-lanka/ .

Tamil Press Release Screening documentary film in the Parliament

 

 

]]>
Screening documentary film “Continuous Cycles of Violence and Genocide in Sri Lanka” at Parliament https://www.britishtamilsforum.org/screening-documentary-film-continuous-cycles-of-violence-and-genocide-in-sri-lanka-at-parliament-2/ Thu, 21 Apr 2022 16:37:53 +0000 http://www.britishtamilsforum.org/?p=8876 Read more]]> பிரித்தானிய பாராளுமன்றில் ‘’சிறிலங்காவில் தொடரும் வன்முறைச் சுழற்சியும் இன அழிப்பும்’’ ஆவண திரைப்பட வெளியீடு

பிரித்தானிய தமிழர் பேரவை 27 April 2022 மாலை 6:30 மணியளவில் பிரித்தானிய பாராளமன்ற உறுப்பினருக்கும் மற்றும் முக்கிய பிரமுகர்களுக்கும் பிரத்தியேகமாக “Continuing Cycles of Violence and Genocide in Sri Lanka” என்ற ஒரு 20 நிமிட ஆவணப்படத்தை வெளியிடுகிறது.

இவ் ஆவணப் படம் இலங்கை பிரித்தானியர்களிடமிருந்து சுதந்திரமடைந்த நாள் தொட்டு தமிழ் மக்கள் காலம் காலமாக அனுபவித்து வரும் இன அழிப்பு உள்ளிட்ட அட்டூழியக் குற்றங்களை சுருக்கமாகவும் தெளிவாகவும் எடுத்துக் காட்டுகிறது.

காத்திரமான இந்த நிகழ்வில் பங்கேற்க உங்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் கோரிக்கை விடுமாறு வேண்டுகின்றோம்.

பிரித்தானிய தமிழர் பேரவை இவ்வாவணப் படத்தை பொதுமக்கள் பார்வைக்காக 27 April 2022க்குப் பின் YouTube இல் வெளியிட இருக்கிறது.

Tamil Press Release-Screening documentary film by BTF

]]>
Tamil Press release Militarisation & Financial Crisis https://www.britishtamilsforum.org/tamil-press-release-militarisation-financial-crisis/ Sun, 10 Apr 2022 21:10:07 +0000 http://www.britishtamilsforum.org/?p=8861 Read more]]> சிறிலங்காவின் அதீத பாதுகாப்புச் செலவீனங்கள் அதன் பொருளாதார நெருக்கடியையும்இ தமிழ் மக்களின் கசப்புணர்வையும் மோசமாக்குகிறது

  • போர் முடிந்த பின் அதிகரித்துள்ள பாதுகாப்புச் செலவு (US $14.92 -> US $17.28 பில்லியன்
  • விரயமாக்கப்பட்டுள்ள பாதுகாப்பு செலவு US $34.7 -> US $200 பில்லியன் 
  • வெளிநாட்டுக் கடன் US $50.7 பில்லியன் 
  • யுத்தம் முடிந்த பின்னும் அதிகரிக்கும் இராணுவ ஆளணி (223.000 -> 317,000
  • பாதுகாப்புச் செலவிற்கான நடப்பு வருட ஒதுக்கீடு வரவு செலவுத் திட்டத்தின் 15% (சுமார் US $2 பில்லியன்)  
  • 19 இல் 16 படை பிரிவுகள் வட மாகாணத்தில் நிலைநிறுத்தம் 

மே 2009இல் உள்நாட்டுப் போர் முடிவடைந்த போதிலும், சிறிலங்காவின் பாதுகாப்புச் செலவுகள் அதிகரித்துள்ளதை தேர்ச்சி பெற்ற பொருளாதார அமைப்புகளால் தயாரிக்கப்பட்ட ஆய்வுத் தகவல்கள் நிரூபிக்கின்றன.

மேக்ரோ ட்ரெண்ட்ஸ் அறிக்கையின்படி, (முதலீட்டாளர்களுக்கான ஆராய்ச்சி தளம்) 1960ஆம் ஆண்டு முதல் சிறிலங்காவின் பாதுகாப்புக்கான வரவு செலவுத் திட்டச் செலவுகள் பின்வருமாறு:

 

காலம் மொத்தம் 

US$ Billion

ஆண்டு சராசரி

 US$ Billion

1960 to 1982 0.52 0.023
1983 to 2009 14.92 0.553
2010 to 2019 (போரின் பின்) 17.28 1.728
மொத்தம் 32.72

2020ஆம் ஆண்டு வரை சிறிலங்கா தனது பாதுகாப்புக்காக US$34.7 பில்லியன் டொலர்களை செலவிட்டுள்ளதாக உலக வங்கி அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இதன்படி 2020 ஆம் ஆண்டு பாதுகாப்புக்காக மட்டும் US$1.58 பில்லியன் டொலர்களை இலங்கை செலவிட்டுள்ளது. போருக்குப் பிந்தைய கால வரவு செலவுத் திட்ட பாதுகாப்பு செலவு (US$ 17.28 பில்லியன்) போர் கால பாதுகாப்பு செலவை விட (US$14.92 பில்லியன்) அதிகமாக உள்ளது.

இந்தியாவின் முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகரும் வெளியுறவு செயலாளருமான சிவசங்கர் மேனனின் அறிக்கையில் மே 2009இல் முடிவடைந்த இலங்கையின் உள்நாட்டுப் போரால் நாட்டிற்கு சுமார் US$200 பில்லியன் டாலர்கள் இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்திருப்பதை கருத்தில் கொள்வது பயனுள்ளது ஆகும். இந்த US$200 பில்லியன் டாலர்கள் மிகப் பெரியது மட்டுமன்றி சிறிலங்காவின் பதிவுகளில் கணக்கில் காட்டப்படவில்லை.

மேலும், மேலே மேற்கோள் காட்டப்பட்ட பாதுகாப்பு செலவின் புள்ளிவிபரங்களில் சர்வதேச சமூகங்களால் இலவசமாக வழங்கப்பட்ட அனைத்து பாதுகாப்பு உபகரணங்கள், வெடிமருந்துகள், ஆயுதங்கள் மற்றும் படைக்கலன்கள் ஆகியவை  உள்ளடக்கப்படவில்லை.

சிறிலங்காவின் இராணுவத்தினர் தொகை பின்வருமாறு:

 

வருடம் மொத்தம்
1985 21,600
2009 (போர் முடிவில்) 223,000
2018 317,000

மேற்கூறிய விவரங்களிலிருந்து, 2009 இல் போர் முடிவடைந்த பின்னரும், சிறிலங்காவில் இராணுவத்தை அதிகரிப்பதில் தனது வரவு செலவுத் திட்டத்தில் கணிசமான தொகையைச் செலவழித்து வருகிறது என்பது சந்தேகத்திற்கு இடமின்றி தெளிவாகிறது. நடப்பு ஆண்டு மொத்த வரவு செலவுத் திட்டத்தின் 15%ஐ அதாவது சுமார் US$2 பில்லியன் டாலர்களை பாதுகாப்புச் செலவிற்காக ஒதுக்கியுள்ளது.

இராணுவத்தினர் தொகையை 2009ல் போர் முடிவடையும் கட்டத்தில் 223,000 பேரிலிருந்து இன்றுவரை 317,000 ஆக (94,000 பேரால்) அதிகரித்தது. இது 2009 இல் நடந்த போருக்குப் பிறகு, தீவின் வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள தமிழர் தாயகங்களில் இராணுவத்தினர் அதிக அளவில் குவிக்கப்பட்டுள்ளதை குறிக்கிறது. இதற்கிடையில், சிறிலங்காவின் சமாதானம் மற்றும் நீதிக்கான பிரச்சாரக் குழு, (Sri Lanka Campaign for Peace & Justice) அதன் 06 மார்ச் 2013 அறிக்கையில் பின்வரும் புள்ளிவிவரங்களை வழங்கியது.


மேற்குறிப்பிட்ட அறிக்கையானது, வடக்கில் மாத்திரம், யுத்தத்தின் முடிவில் 200,000 படையினர் இருந்ததாகவும், 2012 இல் 300,000 ஆகவும், 2015 ஆம் ஆண்டளவில் 400,000 படையினரை நிலை கொள்ள வைக்க கணிப்பிடப்பட்டது.. இக் கணிப்பீடானது, சிறிலங்கா அரசாங்கம், வடக்கு கிழக்கில் வாழும் தமிழ் மக்களை அவர்களின்  பூர்வீக வாழ்விடங்களிலிருந்து தற்காலிக வாழ்விடங்களுக்கு விரட்டி ஏழ்மை நிலைக்கு தள்ளி விட்டு, அங்கு ஏறக்குறைய தனது அனைத்து இராணுவத்தினரையும் நிலைநிறுத்தி வருவதைக் குறிக்கிறது. ஏற்கனவே 2009 ஆம் ஆண்டு வரை 30 வருட உள்நாட்டுப் போரினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள், இராணுவத்தின் ஆக்கிரமிப்பிற்காக நில அபகரிப்பினால் தொடர்ந்தும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இடர் பகுப்பாய்வுகளை மேற்கொள்வது, ஊழல்கள் மீதான தணிக்கை போன்ற நடைமுறைகளை மேற்கொண்டு சிறிலங்கா தனது பாதுகாப்பு செலவினங்களை வீணாக்காமல் இருந்திருந்தால், US$50.7 பில்லியன் டாலர் வெளிநாட்டுக் கடன்களினால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியை ஓரளவு தணித்திருக்க முடியும் என்று நாங்கள் கருதுகிறோம்.

சிறிலங்காவின் அரசியல்வாதிகள் உள்நாட்டில் மட்டுமன்றி வெளிநாட்டிலும் எவ்வாறு சொத்து சேர்த்தார்கள் என்று கேள்வி எழுப்புவதன் மூலம், பாதுகாப்புக் கொள்வனவுகள் மட்டுமன்றி உரக் கொடுக்கல் வாங்கல்கள், 2004 சுனாமி நன்கொடைகள் மற்றும் எண்ணெய்க் கசிவுகளுக்காக வழங்கப்பட்ட நஷ்டஈடு போன்றவற்றிற்கான நிதி ஆய்வை மேற்கொள்வது மிகவும் அவசியமாகும். 

மேற்கூறிய காரணிகளை ஆராயும் அதே வேளை, பின்வரும் பிரச்சினைகளை சமாளிப்பதற்கான சிறிலங்கா அரசாங்கத்தின் தற்போதைய மற்றும் எதிர்கால கொள்கைகளை மீளாய்வு செய்தல் முன்னேற்றத்துக்கான ஆக்கபூர்வமான வழியாகும். 

  • கொள்கை நெருக்கடி 
  • பொருளாதார நெருக்கடி, மற்றும்
  • அரசியல் நெருக்கடி

சிறிலங்காவின் தற்போதைய அவலநிலை குறித்து சர்வதேச சமூகம் பக்கச்சார்பற்ற விசாரணைகளை முன்னெடுப்பது அத்தியவசியமாகும்.

அதே வேளையில், நாங்கள் சர்வதேச நாணய நிதியத்திடம் வலியுறுத்துவது என்னவென்றால் சிறிலங்காவின் வடக்கு கிழக்கு பகுதிகளில் இராணுவத்தின் அளவை குறைப்பதற்கு சிறிலங்காவின் மேல் அழுத்தங்களை கொடுப்பதற்கான பூர்வாங்க நடவடிக்கைகளை மேற் கொண்டு தமிழ் மக்கள் மீதான இராணுவ நெருக்கடிகளை நீக்குவதுடன் இராணுவமயமாக்கலை முற்றாக நிறுத்துவதன் மூலம் அதிகரித்த தேசிய செலவினத்தை குறைப்பதே முதல் மற்றும் முதன்மையான நடவடிக்கையாகும்.

அதே வேளையில், நாங்கள் சர்வதேச நாணய நிதியத்திடம் வலியுறுத்துவது என்னவென்றால்  சிறிலங்காவின் மேல் அழுத்தங்களை கொடுப்பதற்கான பூர்வாங்க நடவடிக்கைகளை மேற் கொண்டு சிறிலங்காவின் வடக்கு கிழக்கு பகுதிகளில் இராணுவமயமாக்களை முழுமையாக நீக்குவதுடன் சிறிலங்காவின் தேவையற்ற யுத்தசன்னதத்தை குறைப்பதன் மூலம் அநாவசியமான தேசிய செலவினத்தை ஒழிப்பது முதன்மையான நடவடிக்கையாகும்.

மேலும் விவரங்களுக்கு (ஆதாரம்) :

  1. https://www.macrotrends.net/countries/LKA/sri-lanka/military-spending-defense-budget
  2. https://www.macrotrends.net/countries/LKA/sri-lanka/military-army-size
  3. https://www.ips.lk/wp-content/uploads/2017/01/The-Economic-Cost-of-the-War-in-SL-Copy.pdf
  4. https://data.worldbank.org/indicator/MS.MIL.XPND.CD?locations=LK
  5. https://data.worldbank.org/indicator/MS.MIL.XPND.GD.ZS?locations=LK
  6. https://data.worldbank.org/indicator/MS.MIL.TOTL.P1?locations=LK
  7. https://data.worldbank.org/indicator/MS.MIL.XPND.CN?locations=LK
  8. https://data.worldbank.org/indicator/MS.MIL.MPRT.KD?locations=LK
  9. https://data.worldbank.org/indicator/MS.MIL.XPND.CD?locations=LK
  10. https://sangam.org/sri-lankas-north-military-occupation
  11. https://www.newindianexpress.com/world/2016/dec/13/sri-lankas-internal-war-cost-us-200-billion-1548433.html
  12. https://tradingeconomics.com/sri-lanka/external-debt

 

Tamil Press release Militarisation & Financial Crisis

Militarisation & Financial crisis FINAL (1)

 

]]>
இலங்கையில் போர்க் குற்றவாளிகளின் மீதான பகிரங்க தடை இலங்கையில் இனவழிப்பு, மனிதகுலத்திற்கு எதிரான குற்றம் மற்றும் போர்க் குற்றங்களில் ஈடுபட்ட போர்க் குற்றவாளிகளுக்கு எதிரான பிரச்சாரம். https://www.britishtamilsforum.org/%e0%ae%87%e0%ae%b2%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%af%8b%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%af%8d-%e0%ae%95%e0%af%81%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%b5/ Fri, 04 Feb 2022 22:41:54 +0000 http://www.britishtamilsforum.org/?p=8846 Read more]]>  

இலங்கையின் 74வது சுதந்திர தினம் தமிழ் மக்களின் ஒரு துக்க தினமாகும். இலங்கையில் மனித குலத்திற்கு எதிரான பாரிய குற்றங்களில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக 04 பெப்ரவரி 2022, அன்று உலகளாவிய புலம்பெயர் தமிழ் அமைப்புகளால் மனித குலத்திற்கு எதிரான பாரிய குற்றங்களில் ஈடுபட்டார்கள் என்று நம்பத் தகுந்த குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் இனம் காணப்பட்ட நபர்கள் மீது பகிரங்க தடை விதிக்க கோரி பிரச்சாரத்தை தொடங்குகின்றனர்

பிரச்சாரம் பற்றி:

இலங்கை அரச இயந்திரத்தினால் தமிழ் மக்கள் மீது நடத்தப்பட்ட மனிதகுலத்திற்கு எதிரான பாரிய குற்றங்களினால் இலங்கையிலிருந்து வெளியேறிய பத்து லட்சத்துக்கும் அதிகமான தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் உலகளாவிய புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் இணைந்து இந்த மனுவில் கையொப்பமிட்டு, தங்கள் நாடுகளின் அரசாங்கங்களை நம்பத் தகுந்த சாட்சியங்களை ஆதரமாகக் கொண்டு 16 செப்டம்பர் 2015 அன்று வெளியிடப்பட்ட இலங்கை மீதான .நா. மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலக (OHCHR) விசாரணையின் (OISL) அறிக்கையின்படி அதில் பெயர் குறிப்பிடப்பட்ட நபர்களை பகிரங்க தடை செய்ய கோரும் நடவடிக்கை. இந்த அறிக்கை (OISL) குறிப்பாக 2008-2009 போரின் முடிவில் பாரிய மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களைச் செய்ததற்காக கட்டளைப் பொறுப்பைக் கொண்டிருந்த பதினெட்டு இலங்கை அதிகாரிகளையும் தலைவர்களையும் அடையாளம் கண்டுள்ளது.

பிரச்சார நோக்கம்:

இந்த அறிக்கையில் (OISL) ஆதாரபூர்வமாக சுட்டிக்காட்டப்பட்ட உண்மையின் அடிப்படையிலும், UNHRC தீர்மானம் 46/1 வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டமை கொடுத்த ஊக்கத்தின் அடிப்படையிலும், அந்தந்த நாடுகளை பின்வரும் விடயங்களை நடைமுறைப்படுத்த வலியுறுத்துவதை நோக்கமாகக் கொண்டு இப் பிரச்சாரம் அமைந்துள்ளது;

  • 16 செப்டம்பர் 2015ல் இடம்பெற்ற இலங்கை மீதான OHCHR விசாரணை அறிக்கையில் (OISL) பட்டியலிடப்பட்டுள்ள நம்பத் தகுந்ததாகக் கூறப்படும் 18 போர்க் குற்றவாளிகளுக்கு பகிரங்கத் தடை விதித்தல்.
  • இந்த 18 நபர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் மீது பயணத் தடை மற்றும் சொத்து முடக்கம் ஆகியவற்றை நடைமுறைப்படுத்துதல்.
  • உலகளாவிய நியாயாதிக்கம் (Universal Jurisdiction) வழிகளைப் பயன்படுத்தி இந்தப் போர்க் குற்றவாளிகளுக்கு தக்க தண்டனையை உறுப்பு நாடுகளின் நீதித்துறை செயல்முறையின் மூலம் பெற்றுத்தரல்.

எதிர்பார்க்கின்ற பெறுபேறுகள்:

பிரேசில், கனடா, அமெரிக்கா (U.S.A), பிரித்தானியா (U.K) மற்றும் ஐரோப்பாவில் உள்ள சில நாடுகள், மனிதகுலத்திற்கு எதிரான பாரிய குற்றங்களில் ஈடுபட்டதாக நம்பத் தகுந்த வகையில் குற்றம் சாட்டப்பட்ட சில தேர்ந்தெடுக்கப்பட்ட இலங்கை போர்க் குற்றவாளிகளை அந்தந்த நாடுகளுக்குள் நுழைவதை தடுத்தும் மற்றும் வெளியேற்றியும் வருகின்றன. அண்மையில் அமெரிக்க இராஜாங்க திணைக்களம் இரண்டு இலங்கை இராணுவ அதிகாரிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் அமெரிக்காவிற்குள் நுழைவதற்கு பகிரங்கமாக தடை விதித்துள்ளது. அதேபோன்று, 2020ஆம் ஆண்டு அமெரிக்க இராஜாங்கச் செயலர் மைக் பொம்பியோ தீவிரமான மற்றும் நம்பகமான ஆதாரங்களை மேற்கோள் காட்டி, தற்போதைய பாதுகாப்புப் படைத் தளபதியும், இலங்கை இராணுவத் தளபதியுமான சவேந்திர சில்வா, சட்டத்திற்குப் புறம்பான கொலைகள் மற்றும் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதன் காரணமாக, அமெரிக்காவுக்குள் நுழைவதற்குத் தகுதியற்றவர் என அறிவித்தார்.

ஜனநாயகம், சட்டத்தின் ஆட்சி மற்றும் மனித உரிமைகளை மதிக்கும் நாடுகள் மேலே பட்டியலிடப்பட்டுள்ள பிரச்சார நோக்கங்களை அடைய உதவ முன்வர வேண்டும் என்று இனப்படுகொலையால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

பிரச்சார மனு:

1948 இல் பிரித்தானியர்களிடம் இருந்து சுதந்திரம் பெற்றதில் இருந்து அடுத்தடுத்து வந்த இலங்கை அரசாங்கங்களால் இனப்படுகொலை நோக்கத்துடன் கொடூரமான ஒடுக்குமுறையால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்குப் பரிகார நீதி கிடைப்பதற்கு, புலம்பெயர் தமிழ் மக்கள் வாழும் நாடுகள், .நா, .நாவின் உறுப்பு நாடுகள், சர்வதேச அரசு சாரா நிறுவனங்கள், பொதுமக்கள் மற்றும் ஊடகங்கள் ஆகிய அனைவரையும் ஆதரவளிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.

இலங்கையின் 74வது சுதந்திர தினமான 04 பெப்ரவரி 2022 அன்று உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டஇலங்கைப் போர்க் குற்றவாளிகள் மீதான பகிரங்க தடைபிரச்சாரத்தில் இணையுமாறு உலகத் தமிழ் அமைப்புகளையும், உண்மை, மனித உரிமைகள் மற்றும் நீதியை நிலைநாட்டும் பிற நிறுவனங்களையும் இருகரம் நீட்டி அழைக்கிறோம்.

இலங்கை மீதான OHCHR விசாரணை அறிக்கையில் (OISL) பட்டியலிடப்பட்டுள்ள நம்பத்தகுந்த குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் போர்க் குற்றவாளிகள் என பட்டியல் இடப்பட்ட பெயர் விபரம்.

  1.       மஹிந்த ராஜபக்ஷபிரதமர், அப்போதைய ஜனாதிபதி மற்றும் ஆயுதப் படைகளின் தலைமைத் தளபதி
  2.       கோட்டாபய ராஜபக்சஜனாதிபதி, முன்னாள் பாதுகாப்பு செயலாளர்
  3.       ஜெனரல் சரத் பொன்சேகா
  4.       லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா
  5.       மேஜர் ஜெனரல் சத்தியப்பிரிய லியனகே
  6.       மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன
  7.       மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்க
  8.       மேஜர் ஜெனரல் நந்த மல்லவாராச்சி
  9.       மேஜர் ஜெனரல் ஜகத் டயஸ்
  10.     மேஜர் ஜெனரல் ஜகத் ஜயசூரிய
  11.     பிரிகேடியர் பிரசன்ன சில்வா
  12.     பிரிகேடியர் நந்தன உடவத்த
  13.     பிரிகேடியர் சாகி கல்லகே
  14.     கேணல் ஜி.வி. ரவிப்ரியா
  15.     அட்மிரல் வசந்த குமார் ஜயதேவ கரன்னாகொட
  16.     அட்மிரல் திசர எஸ்.ஜி.சமரசிங்க
  17.     அட்மிரல் திஸாநாயக்க விஜேசிங்க ஆராச்சிலாகே சோமதிலகே திஸாநாயக்க
  18.     சி.என்.வகிஷ்டா

For Contact details:

Australian Tamil Congress (ATC): +61300660629, mano_manics@hotmail.com

British Tamils Forum (BTF): +447814486087, info@britishtamilsforum.org

Irish Tamils Forum (ITF): 0035389959270, irishtamilsforum@gmail.com

Maison du Tamil Eelam (France): +33652725867, mte.france@gmail.com

National Council of Canadian Tamils (NCCT): +14168307703, info@ncctcanada.ca

Solidarity Group for Peace and Justice (SGPJ – South Africa): pregasenp@telkomsa.net

Swiss Tamil Action Group (STAG): +41764450642, swisstamilag@gmail.com

Tamil Movement Against Genocide (Mauritius): +230 5728 5505, tamilmagen0@gmail.com

United States Tamil Action Group (USTAG): +12025953123, info@theustag.org

இலங்கையில் போர்க் குற்றவாளிகளின் மீதான பகிரங்க தடை Final

]]>
ஐக்கிய இராச்சியத்திற்கு வருகை தந்துள்ள இலங்கை இனப்படுகொலையாளிக்கு அதிகார வரம்பு நீதியை (Jurisdictional Justice Provisions) பிரயோகிக்குமாறு உலகளாவிய புலம்பெயர் அமைப்புகள் கோரிக்கை https://www.britishtamilsforum.org/%e0%ae%90%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%87%e0%ae%b0%e0%ae%be%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%af%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b1%e0%af%8d%e0%ae%95%e0%af%81/ Thu, 04 Nov 2021 22:01:22 +0000 http://www.britishtamilsforum.org/?p=8742 Read more]]> இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்து உலகம் முழுவதும் வாழும் ஒரு கோடிக்கு மேற்பட்ட தமிழர்களின் புலம்பெயர் அமைப்புகளாகிய நாம்  ஒருங்கிணைந்து ஐக்கிய இராச்சியத்திற்கு வந்துள்ள இனப் படுகொலையாளியான இலங்கையின் அதிபர் கோத்தபாய ராஜபக்சவிற்கு அதிகார வரம்பு நீதியினை (Jurisdictional  Justice  Provisions) பிரயோகித்து, இனப் படுகொலையால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு நிலைமாறுகால நீதியின் ஒரு படி முன்னேற்றத்தை மேற்கொள்ளுமாறு ஐக்கிய இராச்சியத்திடம் வேண்டுகோள் விடுக்கின்றோம். நவம்பர் 01 திகதி கிளாஸ்க்கோவில் (Glasgow) நடைபெறும் ஆர்ப்பாட்டங்கள் உட்பட உலகளாவிய அளவில் வெவ்வேறு இடங்களில் நடைபெறும் ஆர்பாட்டங்களுக்கும் எமது ஆதரவை வழங்குகிறோம். 

அப்பட்டமான மகாபாதக மனித உரிமை மீறல்களாலும், ஒருதலைப்பட்சமான பாராளுமன்ற அரசியல் அமைப்பாலும் வன்முறையற்ற கவனயீர்ப்புப் போராட்டங்கள் போன்றவற்றை மறுத்ததாலும் மீண்டும் மீண்டும் தொடர்ந்து தமிழினப் படுகொலையை மையமாக வைத்து அரச ஆதரவுடன் நடைபெறும் மிருகத்தனமான கொடுமைகளைத் தாங்க முடியாமல் இலங்கையிலிருந்து தப்பி வெளிநாடுகளில் தஞ்சம் புகுந்த தமிழ் மக்களால் ஆனது தான் புலம்பெயர் அமைப்புகள் என்பதை இத்தால் குறிப்பிட விரும்புகிறோம். எஞ்சிய 3 மில்லியன் தமிழர்கள் இன்னும் அரச கட்டமைப்புக்குளான இனப்படுகொலைகளை இன்னும் தாயகத்தில் முகம் கொடுத்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். தமிழர்களின் காணிகள் தொடர்ந்தும் இராணுவ மையங்கள் அமைப்பதற்கும் தெற்கிலிருந்து சிங்களவர்களைக் குடியேற்றுவதற்கும் அபகரித்துக் கொண்டிருக்கிறார்கள்.

இலங்கையில் தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைகள் தொடரும் பயங்கரவாத தடுப்புச் சட்டம் (PTA) போன்ற கொடூரமான சட்டங்களினால் நசுக்கப்பட்டும் சுதந்திரமானதும் நம்பகரமானதுமான நீதிப் பொறிமுறை தொடர்ச்சியாக மறுக்கப்பட்டும் வருகின்றது. இனப் படுகொலையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிலைமாறுகால நீதி மூலம் ஒரு கண்ணியமான நீண்ட கால அரசியல் தீர்வு கிடைக்காமல் இழுத்தடிக்கப்படுகிறது. அதனால் புலம் பெயர்ந்த தமிழர்களாகிய எமக்கு மேற்கூறியவற்றை பெற்றுக் கொடுத்து முறையான நீதியையும் அமைதியையும் நிலைநாட்ட உதவ வேண்டிய கடப்பாடு உண்டு.

அத்துடன் அண்மையில் கோத்தபாய ராஜபக்ச அரசாங்கம் மற்றுமொரு சர்வாதிகாரப் போக்காக அங்கு வாழும் பல்லின சமூகதின் மேல் அதிகாரம் செலுத்தும் வகையில், பல குற்றங்கள் புரிந்த, காணாமலாக்கப்பட்ட ஒரு பத்திரிகையாளருக்கான வழக்கின்போது நீதிமன்றத்தை மிரட்டி அவமதித்ததால் சிறை சென்று பின் சிறைக்காலம் முடியும் முன்பே ஜனாதிபதியால் மன்னிப்பு வழங்கி விடுவிக்கப்பட்டவருமான பொது பல சேனா அமைப்பின் தலைவர்  கலகொட அத்தே ஞானசார தேரோவை  ‘ஒரு நாடு ஒரு சட்டம்’ என்ற செயலணிக்குழுவிற்கு தலைவராக  நியமித்துள்ளார். இச் செயல் தமிழ் மக்கள் வடக்கிலும் கிழக்கிலும் பல்லாண்டு காலமாக பாதுகாத்து வந்த மொழி, மதம், கலாச்சாரம் மற்றும் காணி உரிமைகளைப் பறிக்கும் நோக்கமாகவே நோக்க வேண்டியுள்ளது.

ஐக்கிய இராச்சியம் காலனித்துவ சக்தியாக இருந்து இலங்கைக்கு சுதந்திரம் வழங்கிய போது தமிழர்  தேசத்திற்கு கூட்டாட்சி உரிமையோ, பாதுகாப்போ, அரசியல் பகிர்வோ இல்லாமல் விட்டுச் சென்றதால் ஐக்கிய இராச்சியத்திற்கு இப்பொது ஒரு தார்மிக கடமை இருப்பதை உணர்த்தி நாம் முறையீடு செய்கிறோம். அத்தோடு 300,000 மேற்பட்ட தமிழர்கள் தற்போது இங்கு வாழ்வதால் இந்த முக்கியமான தருணத்தில் ஐக்கிய இராச்சியத்தின் தார்மிக கடமையை மேலும் வலியுறுத்துகிறோம்.

மேலும் பல்லாயிரத்திற்கு மேற்பட்ட தமிழர்கள் வாழும் ஐரோப்பிய ஒன்றியத்திடம் GSP+ போன்ற பொருளாதார அந்நிய செலவாணியை கட்டுப்படுத்தி  அழுத்தம்  கொடுக்குமாறு வேண்டுகிறோம். கடும்போக்குவாத கொள்கையுடைய சிறிலங்கா போன்ற அரசுகளுக்கு கண்ணியமான இராஜதந்திரம் ஒவ்வாது. 

சிறிலங்கா தான் புரிந்த அப்பட்டமான மகாபாதகக் குற்றங்களை மூடி மறைக்க இராஜதந்திர முயற்சிகள் மூலம் பகீரதப் பிரயத்தனம் எடுத்தும், பாதிக்கப்பட்டவர்கள் என்ன ஆனார்கள் என்பதை வெளியிட மறுத்தும் அதே சமயம் புலம்பெயர் தமிழர்களுடன் பேச்சுவார்த்தை நடாத்த தயார் எனக் கூறியும் நாடகமாடி வருகிறது. இத் தருணத்தில், நாங்கள் ஐக்கிய இராச்சியத்தினதும், ஐரோப்பிய ஒன்றியத்தினதும் கவனத்தை, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர் ஆணையாளர் மிஷேல் பச்லெற் அம்மையார் அவர்களால் 12 ஜனவரி 2021ல் வெளியிடப்பட்ட அறிக்கையின்பால் ஈர்க்கின்றோம். உயர் ஆணையாளர் பரிந்துரைத்த சர்வதேச நடவடிக்கைகளில் பின்வருவன உள்ளடங்குகின்றன:

  1. எதிர்கால பொறுப்புக்கூறல் செயல்முறைகளுக்காக சாட்சியங்களை சேகரித்து பாதுகாப்பதற்கான ஆற்றலினை ஆதரிக்கவும், பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் உயிர் பிழைத்தவர்களுக்காக வாதிடவும், உறுப்பு நாடுகள் உட்பட தகுதியான அதிகார வரம்பைக் கொண்ட நீதித்துறை நடவடிக்கைகளை ஆதரித்தல்,
  2. வேற்று நாட்டு (extraterritorial) அல்லது உலகளாவிய நியாயாதிக்க தத்துவங்களின் அடிப்படையில் (universal jurisdiction), தாம் வாழும் நாடுகளின் நீதித்துறை நடவடிக்கைகளுக்கு அமைவாக, சிறிலங்காவில் புரியப்பட்ட சர்வதேச குற்றங்களை விசாரித்து வழக்குத் தொடர பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களின் பிரதிநிதிகளுடன் ஒத்துழைத்தல்,
  3. சொத்து முடக்கம் (asset freeze) மற்றும் பயணத் தடைகள் (travel bans) போன்ற சாத்தியமான தடைகளை (targeted sanctions), பாரதூரமான மனித உரிமை மீறல்கள் மற்றும் துஷ்பிரயோகங்கள் செய்ததாக நம்பகமாக குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது பிரயோகிப்பது பற்றி ஆராய்தல்.

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் மார்ச் 2021 இல் நிறைவேற்றப்பட்ட A/HRC/46/1 தீர்மானம் கடந்த கால உள்நாட்டுப் பொறிமுறைகளின் தோல்வியையும், நடந்துகொண்டிருக்கும் அப்பட்டமான மனித உரிமை மீறல்களையும் எடுத்துக்காட்டுகிறது என்பதையும் நாங்கள் சுட்டிக்காட்ட விரும்புகிறோம். அதே தீர்மானம் ஐ.நா நிர்வகிக்கும் சாட்சிய சேகரிப்பு செயல்முறையின் அவசியத்தை வலியுறுத்தி சர்வதேச பொறுப்புக்கூறல் நடவடிக்கைகளை வகுத்து பரிந்துரைக்க உயர் ஸ்தானிகரை பணித்துள்ளது. 

எனவே, தமிழ் மக்களுக்கு எதிரான அதன் கட்டமைப்புரீதியான இனப்படுகொலையை தொடரும் சிறிலங்கா அரசை ஊக்கப்படுத்தி பாதுகாக்கும் தண்டனையின்மையை முடிவுக்குக் கொண்டுவந்து, சிறிலங்காவிற்கு எதிராகவும் இங்கு வருகை தந்துள்ள சிறிலங்கா ஜனாதிபதி உட்பட போர்க் குற்றவாளிகளுக்கு எதிராகவும் விரைவான சர்வதேச நடவடிக்கை தேவை என்பதை மீண்டும் வலியுறுத்துகிறோம்.

குறிப்பு: இந்த கூட்டறிக்கை ஸ்காட்லாந்து COP26 மாநாட்டிற்கு  சிறிலங்கா அதிபர் கோத்தபாய ராஜபக்சவின் வருகையையிட்டு 31 அக்டோபர் 2021 அன்று வெளியிடப்பட்ட ஆங்கில அறிக்கையின் தமிழாக்கம் ஆகும்.

Contact details:

Australian Tamil Congress (ATC): +61300660629, mano_manics@hotmail.com

British Tamils Forum (BTF): +447814486087, info@britishtamilsforum.org

Maison du Tamil Eelam (France): +33652725867, mte.france@gmail.com

Irish Tamils Forum (ITF): 0035389959270, irishtamilsforum@gmail.com

National Council of Canadian Tamils (NCCT): +14168307703, info@ncctcanada.ca

Solidarity Group for Peace and Justice (SGPJ – South Africa): pregasenp@telkomsa.net

Tamil Movement Against Genocide (Mauritius): +230 5811 2044, koomarenchetty@gmail.com

United States Tamil Action Group (USTAG): +12025953123, info@theustag.org

இனப்படுகொலையாளிக்கு அதிகார வரம்பு நீதியை பிரயோகிக்கவும் Final1

]]>
உலகளாவிய தமிழ் புலம்பெயர் அமைப்புகள் அரசியல் தீர்வுக்கான சிறிலங்கா அரசுடனான பேச்சுவார்த்தையில் சர்வதேச மத்தியஸ்தத்தைக் கோருகின்றனர் https://www.britishtamilsforum.org/%e0%ae%89%e0%ae%b2%e0%ae%95%e0%ae%b3%e0%ae%be%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d-%e0%ae%aa%e0%af%81%e0%ae%b2%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%af%86%e0%ae%af%e0%ae%b0/ Thu, 26 Aug 2021 20:26:12 +0000 http://www.britishtamilsforum.org/?p=8676 Read more]]> கீழ் குறிப்பிட்ட உலகளாவிய தமிழ் புலம்பெயர் அமைப்புகள் சிறிலங்கா அரசுடன் எதிர்காலத்தில் நடத்தப்படக் கூடிய அரசியல் பேச்சுவார்த்தைகள் குறித்த சில அம்சங்கள் சம்பந்தமாக எமது கருத்தை தெரிவிக்க விழைகின்றோம். 

சிறிலங்காவில் தொடர்ந்து இடம்பெறும் வன்முறைச் சுழற்சி (Cycle of Violence) மற்றும் தமிழர்களுக்கெதிரான இனப்படுகொலையினால் பாதிக்கப்பட்ட ஈழத்தை பூர்வீகமாகக் கொண்ட 10 லட்சத்திற்கு மேற்பட்ட தமிழ் மக்கள் தற்போது புலம்பெயர் நாடுகளில் வாழ்ந்து வருகின்றனர் என்பதனை நாங்கள் இங்கு பதிவு செய்கின்றோம். தாயகம் திரும்புவதற்கான எமது உரிமையை (Right to Return) நாங்கள் உறுதிப்படுத்த விரும்புகின்றோம். ஆகையினால் சிறிலங்காவிலுள்ள பல்லின, பல் மத சமுதாயங்கள் மத்தியில் சகவாழ்வினையும், நீண்ட கால அமைதியையும் ஏற்படுத்துவதற்கான அரசியல் தீர்வொன்றை உருவாக்குதல், மற்றும் அது தொடர்பான பேச்சுவார்த்தைகளில் பங்காளிகளாக ஈடுபட நாங்கள் விரும்புகின்றோம். 

மனித உரிமைகள் மற்றும் அரசியல் உரிமைகளை நிலைநாட்டுதல் சம்பந்தமாக நாங்கள் வாழும் நாடுகளிலுள்ள அரசுகளுடனும், உலகளாவிய ரீதியில் இரு தரப்பு, பலதரப்பு கொள்கை வகுக்கும் மையங்களுடனும் மேற்குலகுடனும் பிராந்திய வல்லரசான இந்தியாவுடனும் எங்கள் அமைப்புகள் தொடர்ச்சியாக பணியாற்றி வந்துள்ளன. 

சிறிலங்கா தீவிலும் அதனைச் சூழவும் உள்ள பிராந்தியத்தில் தற்போது காணப்படும் பிராந்திய பதட்ட நிலையையும் மற்றும் மனித உரிமை அமைப்புகளினால் எச்சரிக்கப்பட்டபடி இத் தீவில் எதிர்காலத்தில் ஏற்படக் கூடிய மோசமான செல்நெறிகளையும் கருத்தில் கொள்கின்றோம். ஆகையினால் சிறிலங்காவில் பல காலமாக புரையோடிப் போயிருக்கும் தமிழ் தேசிய பிரச்சினையில் நேரடியாகத் தலையிடுமாறும் இதற்கு நீதியான தீர்வொன்றை கொண்டு வர உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் சர்வதேச சமூகத்தை நாங்கள் வேண்டிக் கொள்கின்றோம். 

இது சம்பந்தமாக தமிழர் தரப்பிற்கும் சிறிலங்கா அரசிற்கும் இடையில் ஐக்கிய அமெரிக்க அரசு மற்றும் இந்திய அரசின் அனுசரணையுடன் நடாத்தப்பட்ட அரசியல் பேச்சுவார்த்தைகள் சம்பந்தமான முன்னெடுப்புகளை நாங்கள் கவனத்தில் கொள்கின்றோம். தமிழ் மக்களின் நீண்டகால நியாயபூர்வமான வேணவாக்களை (Legitimate Aspirations) பூர்த்தி செய்வதற்கான இந்திய மற்றும் அமெரிக்க அரசுகளினால் முன்னெடுக்கப்படும் அரசியல் பேச்சுவார்த்தைகளை வரவேற்கும் அதே வேளையில் கடந்த காலங்களில் சிறிலங்கா அரசுடனான நேரடிப் பேச்சுவார்த்தைகளின் தோல்விகளையும் எழுதப்பட்ட ஒப்பந்தங்கள் சிங்களத் தலைவர்களினால் கிழித்தெறியப்பட்ட துரதிர்ஷ்ட வரலாற்றினையும் கருத்தில் கொள்ளுமாறு நாங்கள் கேட்டுக் கொள்கின்றோம்.

ஆகையினால் எந்த ஒரு பேச்சுவார்த்தையும் வெற்றிகரமான தீர்வொன்றினை அடைவதற்கு சர்வதேச மத்தியஸ்தம் (Arbitration) அவசியம் என்பதனை உறுதியாகத் தெரிவித்துக் கொள்கின்றோம். ஒருங்கிணைந்த மூலோபாய  திட்டமொன்றை ஏற்படுத்துமாறும்  இடம்பெறக் கூடிய பேச்சுவார்த்தைகளில் மத்தியஸ்துவம் வகித்து தலைமை ஏற்குமாறும் ஏற்படக் கூடிய உடன்படிக்கைகளை நிறைவேற்றுவதனை உறுதிப்படுத்துமாறும்  நாங்கள் உலக வல்லரசான அமெரிக்காவையும் பிராந்திய வல்லரசான இந்தியாவையும் தமிழ் மக்கள் பெருமளவில் புலம் பெயர்ந்து வாழும் நாடுகளான ஐக்கிய இராச்சியம், ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் கனடாவையும் வேண்டிக் கொள்கின்றோம்.

அத்துடன் இம் முயற்சிகளை முனைப்புடன் ஆதரித்து, அவர்கள் வசமுள்ள அரசியல், மனித உரிமைகள் மற்றும் பொருளாதார கருவிகளை பாவித்து உறுதுணையாக இருக்குமாறும் நாங்கள் வாழும் நாடுகளான ஐரோப்பா, ஐக்கிய இராச்சியம், ஐக்கிய அமெரிக்கா, கனடா, அவுஸ்திரேலியா மற்றும் தென்னாபிரிக்கா முதலிய நாடுகளிலுள்ள அரசுகளை கேட்டுக் கொள்கின்றோம்.

அத்துடன் எந்த தீர்வு முயற்சிகளிலும் உலகளாவிய தமிழ் புலம்பெயர் மக்களின் உரிமைகளையும் பொறுப்புகளையும் ஏற்றுக் கொண்டு அவர்களை பொருத்தமான பங்காளிகளாக அங்கீகரிக்குமாறு மீண்டும் வலியுறுத்துகின்றோம். 

Contact details:

Australian Tamil Congress (ATC): +61300660629, mano_manics@hotmail.com

British Tamils Forum (BTF): +447814486087, info@britishtamilsforum.org

Maison du Tamil Eelam (France): +33652725867, mte.france@gmail.com

Irish Tamils Forum (ITF): 0035389959270, irishtamilsforum@gmail.com

National Council of Canadian Tamils (NCCT): +14168307703, krishanthy@ncctcanada.ca

Norwegian Council of Eelam Tamils (NCET): +4790641699, stevenpush.k@gmail.com

Solidarity Group for Peace and Justice (SGPJ – South Africa): pregasenp@telkomsa.net

United States Tamil Action Group (USTAG): +12025953123, info@theustag.org

 

தமிழ் புலம்பெயர் அமைப்புகள் பேச்சுவார்த்தையில் சர்வதேச மத்தியஸ்தத்தைக் கோருகின்றனர் Final (UNICODE)

]]>
38ஆம் வருட கருப்பு ஜூலை 1983 நினைந்தல் https://www.britishtamilsforum.org/38%e0%ae%86%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%b0%e0%af%81%e0%ae%9f-%e0%ae%95%e0%ae%b0%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81-%e0%ae%9c%e0%af%82%e0%ae%b2%e0%af%88-1983-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%a9/ Mon, 26 Jul 2021 09:03:51 +0000 http://www.britishtamilsforum.org/?p=8343 Read more]]> வழமைபோல், இவ் வருடமும் பிரித்தானிய தமிழர் பேரவை (பி.த.பே)  கீழ்க்காணும் உலகளாவிய சகோதர தமிழர் அமைப்புக்களுடன் இணைந்து 38ஆம் வருட கருப்பு ஜூலை 1983 நிகழ்வை எதிர்வரும் 27-07-2021 அன்று பி.ப. 6.00 மணி முதல் பி.ப. 7.30 (GMT) மணிவரை இணைய வழியில் நடாத்த உள்ளது. 

ஆஸ்திரேலியத் தமிழ் காங்கிரஸ் (ATC),

பிரான்ஸ்  தமிழ் ஈழ மக்களவை (MTE),

அயர்லாந்து தமிழர் பேரவை (ITF),

கனடியத் தமிழர் தேசிய அவை (NCCT),

நோர்வே ஈழத் தமிழர் அவை (NCET),

நீதிக்கும் சமாதானத்துக்குமான ஒற்றுமைக் குழு – தென் ஆப்பிரிக்கா (SGPJ – South Africa),

ஐக்கிய அமெரிக்க தமிழர் நடவடிக்கை குழு (USTAG).

இலங்கை அரசின் தமிழர்களுக்கு எதிரான திட்டமிட்ட இனப்படுகொலை பல்வேறு வடிவங்களில் காலத்துக்கு காலம் அரங்கேறி வருகிறது. 1983 ஜூலையில் கொழும்பில் சுற்றுலா பயணிகள் நிறைந்திருந்ததால் அங்கு நடைபெற்ற இனப்படுகொலை கண்கண்ட சாட்சியங்கள் மூலம் வெளி உலக வெளிச்சத்திற்கு வந்தது. தமிழர்கள் படுகொலையுண்ட காட்சிகளும் சம காலத்தில் வெளி நாடுகளில் தொலைக்காட்சிகளில் காண்பிக்கப்பட்டன. 

கடந்த மார்ச் மாதம் ஐ. நா. மனித உரிமைச் சபையின் 46வது அமர்வில் சிறிலங்கா அரசுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட பாரதூரமான தீர்மானத்தின் பின்பும் சிறிலங்கா அரசு தனது தமிழர் விரோதப் போக்கில் தளர்வைக் காட்டவில்லை. சிறிலங்காவை ஒரே இனம், ஒரே மதம், ஒரே மொழி கொண்ட சிங்கள-பெளத்த மேலாதிக்க நாடாக மாற்றும் நிகழ்ச்சி நிரலுடன் அரசு செயல்படுகின்றது.

ஐ.நா. மனித உரிமைகளுக்கான உயர் ஸ்தானிகர் காரியாலயத்தின் 2015 அறிக்கையில் (OISL report 2015)  குற்றமிழைத்தாக அடையாளம் காட்டப்பட்டவர்கள் இன்று சிறிலங்கா அரசாங்கத்தில் பொறுப்பு வாய்ந்த உயர் பதவிகளில் அதே அறிக்கையில் பெயரிடப்பட்டிருக்கும் தற்போதைய சிறிலங்கா ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சவினால் அமர்த்தப்பட்டுள்ளமை நெறிமுறையற்ற ஓர் அப்பட்டமான ஜனநாயக விரோத செயலாகும்.

சர்வதேச சமூகம் முன்வந்து பொருளாதாரத் தடைகள் (ECONOMIC SANCTIONS), நெறிமுறையற்ற வர்த்தகத்தை (UNETHICAL TRADE) நிறுத்துவது, GSP+, மற்றும் அது போன்ற சலுகைகளை நிறுத்துவது ஆகிய ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்வது பற்றி ஆராயுமாறு நாம் கோரிக்கை வைக்கின்றோம்.

தொடரும் வன்முறை சுழற்சி (Cycles of Violence), பாதிக்கப்பட்டவர் சாட்சியம், எதிர்காலத்தில் உருவாகப் போகும் அனர்த்தங்கள், வன்முறைகள் தொடர்வதற்கான மூல காரணங்கள் (Root causes of the conflict) போன்ற காத்திரமான விடயங்கள் கலந்துரையாடப்படப் போவதுடன் முக்கியமான சர்வதேச மனித உரிமை அமைப்புகள் பங்கு பெறப் போகும் இந்த நிகழ்வில் உலகளாவிய தமிழ் மக்களையும் மனித உரிமை ஆர்வலர்களையும் கலந்து கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.

நினைவுகூரல் நிகழ்வில் கலந்து கொள்வது உட்பட்ட விபரங்கள் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

Zoom – – https://tinyurl.com/BlackJuly1983

Meeting ID: 318 409 4196 

Passcode: 1983 

இந் நிகழ்ச்சியை பின்வரும் தளங்களினூடாகவும் பார்வையிடலாம்.: 

BTF Facebook (live) – @BritishTamilsForum 

BTF YouTube (live) – British Tamils Forum Channel

38 th Year of Rememberence of Black July

Black July 2021 flyer (Tamil ) _ 2 (1)

 

]]>
முள்ளிவாய்க்கால் நினைவுச்சின்னம் அழிப்பை உலகளாவிய புலம்பெயர் தமிழர் சமூகம் கண்டிக்கின்றது https://www.britishtamilsforum.org/%e0%ae%ae%e0%af%81%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%be%e0%ae%af%e0%af%8d%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%a9%e0%af%88%e0%ae%b5%e0%af%81/ Wed, 19 May 2021 18:58:47 +0000 http://www.britishtamilsforum.org/?p=8308 Read more]]>
2009ம் ஆண்டு யுத்த சூனிய பிரதேசங்களில் வைத்து சிறிலங்கா ராணுவத்தால் வகைதொகையின்றி கொல்லப்பட்ட பல்லாயிரக்கணக்கான தமிழர் நினைவுகளை நெஞ்சில் நிறுத்தி அவர்களை ஆராதிக்கவும் மற்றும் மன ஆறுதலின் அடையாளமாகவும் முள்ளிவாய்க்காலில் நிறுவப்பட்டிருந்த இனப்படுகொலை நினைவுச்சின்னதை அழித்து அவமதிப்பு செய்தமைக்கு உலகெங்கிலுமுள்ள புலம்பெயர் தமிழ் அமைப்புகள் தமிழினப் படுகொலை நினைவேந்தல் நாள் நெருங்கும் இவ் வேளையில், மிகக் கடுமையான கண்டனத்தை, வெளிப்படுத்துகின்றன.
சொலமன் தேவாலயம் நினைவுகூரப்படுவது அதன் பிரம்மாண்டமான தோற்றம் காரணமாக அல்ல – மாறாக, ரோமானிய படையினரால் மிக மோசமான முறையில் அழிக்கப்பட்டமைக்காகவே. மிகக் கடுமையான கோவிட் கட்டுப்பாடுகளும், தொடர் ராணுவ பிரசன்னமும் இருந்த வேளையில் இவ் வெட்கக்கேடான செயல் அரங்கேறியுள்ளமை குற்றவாளிகள் யார் என்பதில் எவ்வித சந்தேகத்தையும் ஏற்படுத்தவில்லை.
சமீபத்தில் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் சிறிலங்கா தொடர்பாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு எதிர்ப்பை வெளிக்காட்டும் சிறிலங்கா அரசாங்கத்தின் பதிலடி நடவடிக்கையாகவே, போரில் இறந்த தமிழர்களை நினைவேந்த முள்ளிவாய்க்காலில் நிறுவப்பட்டிருந்த நினைவுச் சின்னம் மோசமான முறையில் அழிக்கப்பட்டுள்ளமை தென்படுகிறது. தீர்மானம் A / HRC / 46 / L1 ஆனது, மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரின் கீழ் ஒரு விசாரணை பொறிமுறை அமைத்து சிறிலங்காவில் இடம்பெற்ற மொத்த மனித உரிமை மீறல்கள் தொடர்பில் ஆதாரங்களை சேகரித்தல், பாதுகாத்தல் மற்றும் மதிப்பீடுசெய்தல் ஆகியவற்றை மேற்கொண்டு அதன் பொறுப்புக்கூறலை மேம்படுத்துவதற்கும் எதிர்கால சட்ட நடவடிக்கைகளுக்கு உதவுவதற்கும் வழி செய்கிறது.
ஒடுக்கப்பட்ட தேசத்தின் வரலாறு மற்றும் அவலங்கள் அச்சிலோ அல்லது கல் மேல் எழுத்துக்களாகவோ பதிவு செய்யப்பட வேண்டிய அவசியமில்லை. இது தமிழர்களின் இதயங்களிலும், மனங்களிலும் பேணப்பட்டு தலைமுறை தலைமுறையாக காவிச் செல்லப்படும் துன்பியல் வடுவாகும். தமிழர் தாயகத்தில் ஞாபகச் சின்னங்களை அழித்தல், கல்லறைகளை இழிவுபடுத்துதல் போன்ற செயல்கள் எல்லாம், நீதி தேடும் முயற்சியில் தமிழர்களின் மனோவுறுதிக்கு மேலும் வலுச் சேர்த்து வரும்.
சிறிலங்கா ராணுவத்தின் மனிதநேயமற்ற செயல்களை கண்டிக்கும்படியும், நினைவு கூரும் உரிமையை சிறிலங்கா அரசு மதிக்க வேண்டும் என அதனை வலியுறுத்துமாறும் பன்னாட்டு அரசுகளையும், சர்வதேச மனித உரிமை அமைப்புகளையும் கேட்டுக் கொள்கிறோம்.
Contacts:
M. Manokaran
Chairman – Australian Tamil Congress (ATC)
T: +61 300 660 629
Email: Mano_manics@hotmail.com
Twitter: @austamilcongres
V. Ravi Kumar
General Secretary, British Tamils Forum (BTF)
T: +44 (0) 7814 486087
Email: info@britishtamilsforum.org
Twitter: @tamilsforum
Thiruchchoti Thirukulasingam
La Maison du Tamil Eelam (The Tamil Eelam-France House)
T: +33 652725867
Email: mte.france@gmail.com
Twitter: @Thiru92110
V. Revichandran
Irish Tamils Forum (ITF)
T: 00353 899592707
Email: irishtamilsforum@gmail.com
Krishanthy Sarojkumaran
Executive Director, National Council of Canadian Tamils (NCCT)
T: +1.416.830.7703
Email: krishanthy@ncctcanada.ca
Steven Pushparajah K
Norwegian Council of Eelam Tamils (NCET)
T: +47 90 64 16 99
Email: stevenpush.k@gmail.com
Twitter: @StevenPK10
Pregas Padayachee
Solidarity Group for Peace and Justice in Sri Lanka (SGPJ- South Africa)
Email: pregasenp@telkomsa.net
S. Seetharam
President – United States Tamil Action Group (USTAG)
(formerly USTPAC)
T: +1(202) 595 3123
Email: info@ustag.org
Twitter: @UstpacAdvocacy
]]>