British Tamils Forum https://www.britishtamilsforum.org BTF (United Kingdom), Our organisation will be the bridging voice between the British Tamil Community and the Tamil people in the island of Sri Lanka. Sun, 31 Aug 2025 19:25:42 +0000 en-GB hourly 1 https://wordpress.org/?v=4.9.6 Common proposal for a new resolution by the member states in the UNHRC https://www.britishtamilsforum.org/common-proposal-for-a-new-resolution-by-the-member-states-in-the-unhrc/ Sun, 31 Aug 2025 19:25:42 +0000 http://www.britishtamilsforum.org/?p=10111 Read more]]> Please find attached the “Common Proposal” for the forthcoming resolution at the United Nations Human Rights Council (UNHRC), which was communicated to Ambassadors, Permanent Missions, the OHCHR, and other relevant stakeholders on 25 August 2025.

This comprehensive proposal has been jointly prepared and submitted by the British Tamils Forum, together with our sister organisations worldwide. It includes:

  • Robust international criminal justice mechanisms to address past and ongoing violations and ensure accountability.
  • Interim measures for reparations to support victims and affected communities, with a particular focus on the war-devastated North and East of Sri Lanka.
  • A long-term framework for constitutional and institutional reform to guarantee non-recurrence of violence, systemic discrimination, and genocide.

This initiative represents a collective and coordinated global effort and is endorsed by the following organisations (listed in alphabetical order):

ATMA, Mauritius
British Tamils Forum (BTF), UK
Centre de Protections des Droits du Peuple Tamoul, France
Conservative Friends of Tamils (CFT), UK
Delhi Tamil Advocates Association (DTAA), India 
Delhi Tamil Sangam, India
German Tamil Advocacy Forum, Germany 
Global Human Rights Defence (GHRD), Netherlands
Global Thamil Council, Canada
Irish Tamils Forum (ITF), Ireland 
Korea Tamil Sangam (KTS), Korea
Mother Tongue First Foundation (MTFF), India
Pasumai Thaayagam, India 
Solidarity Group for Peace and Justice (SGPJ), South Africa
Swiss Tamil Action Group (STAG), Switzerland 
Tamil Council, Mauritius
Tamil Friends of Liberal Democrats, UK
Tamils for Labour (TfL), UK

 

Common_proposal_for_UNHRC_September_2025_resolution

Common proposal for a new UNHRC resolution

]]>
https://www.britishtamilsforum.org/10106-2/ Fri, 22 Aug 2025 21:42:39 +0000 http://www.britishtamilsforum.org/?p=10106 Read more]]> தமிழர் தாயகத்தில் அவசர கால அடிப்படையில் மீள் குடியேற்றமும் மீள் நிர்மாணமும் 

பிரித்தானிய தமிழர் பேரவை திட்ட முன்மொழிவு

1983இலிருந்து போர்ச் சூழலினால் இந்தியாவிற்கு அகதியாக சென்ற தமிழ் மக்களின் அவல வாழ்க்கையினைத் தீர்ப்பதற்கான திட்டங்களை வகுத்து இந்தியாவுடனும், மனிதாபிமான பணிகளுக்கு ஆதரவு தரும் சில மேற்குலக நாடுகளுடனும் அவர்களின் மீள் குடியேற்றம் (Resettlement) மற்றும் போரால் சிதைக்கப்பட்ட தமிழர் தாயகத்தின் மீள் நிர்மாணம் (Reconstruction) ஆகிய இரண்டையும் உடனடியாக தொடங்க வேண்டும் என்று ஒரு தசாப்தத்திற்கு மேலாக இடை விடாத தொடர்பாடலை பிரித்தானிய தமிழர் பேரவை மேற்கொண்டு வருவது பலர் அறிந்த விடயம் ஆகும்.

இதுவரை இருந்த சிறிலங்காவின் அனைத்து அரசுகளும் இது குறித்து பாராமுகமாக இருந்தது மட்டும் அல்லாது தமிழ் மக்களின் மீள் குடியேற்றத்திற்கு பல முட்டுக் கட்டைகளை ஏற்படுத்தி வந்ததனை ஆதாரங்களுடன் மேற்படி அதிகார மையங்களிடம் முன் வைத்து அழுத்தங்களை பாவிக்க கூறி வந்தோம். 

தமிழ் மக்களின் மீள் குடியேற்றமும் மீள் நிர்மாணமும் போருக்கு பிந்திய மிக முக்கியமான விடயமாக அவசர கால அடிப்படையில் நடைமுறைப்படுத்தி இருக்க வேண்டும். 

இது குறித்து சிங்கள தரப்புகள் மட்டும் அல்லாது தமிழர் தரப்பிலும் கூட கவனத்தில் எடுக்காதது மிகுந்த விசனத்துக்குரியது. ‘அரசியல் தீர்வு ஒன்று வரும் வரை காத்திருப்போம்’, என பெரும் பாதிப்புக்குள்ளான ஒரு பகுதி மக்களின் நீண்ட கால பிரச்சினையைத் தள்ளிப் போடுவது பொறுப்பற்ற செயலாகும். 

இந்தோ லங்கா உடன்படிக்கையின் ஒரு முக்கிய அங்கமாக மீள் குடியேற்றம் குறிப்பிடப்பட்டிருந்தாலும் அதனை நடைமுறைப்படுத்தாது இழுத்தடித்து, “எண்ணிக்கை சிறுபான்மையினராக” (numerical minority) தமிழர் தாயகத்திலேயே தமிழ் மக்களை பலவீனப்படுத்தவே சிங்கள அரசுகள் தொடர் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன என நாம் பல்வேறு தளங்களில் பல்வேறு நாடுகளுக்கும் முக்கியஸ்தர்களுக்கும் தமிழ் மக்களின் அவல வாழ்க்கையினை விளங்கப்படுத்தி வருகின்றோம்.  

இதே வேளையில் “இந்தியாவில் உள்ள இலங்கை அகதிகள் அனைவரையும் அன்புடன் பொறுப்பேற்போம். அவர்களுக்கு முழுமையாக ஒத்துழைப்புக்களை வழங்குவோம்.”  என சிறிலங்காவின் அமைச்சர் பிமல் ரத்நாயக்க அண்மையில் பாராளுமன்றில் கதைத்திருப்பதாக அறிய வருகின்றோம். (வீரகேசரி https://www.virakesari.lk/article/222965.)

தமிழர் தாயகத்தின் சனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்படும் பிரதிநிதிகள், சிவில் சமூகம், புலமையாளர்கள், பொறுப்புணர்வுடன் செயல்படும் புலம்பெயர் அமைப்புகளுடன் இணைந்து ஒருங்கிணைந்த ஒரு முன்மொழிவினை கொடுத்து வினைத் திறனுடன் நேர்மையாக இதனை நடைமுறைப்படுத்த தொடர் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றோம். 

முக்கியத்துவம் வாய்ந்த இந்த மனிதாபிமான பணிகளை அவசர கால அடிப்படையில் நடைமுறைப்படுத்த தமிழ் மக்களின் இருப்பினில் உண்மையான அக்கறை உள்ளவர்களுடன் இணைந்து செயல்பட பிரித்தானிய தமிழர் பேரவை விரும்புகிறது.

மீள் குடியேற்றம் (Resettlement) மற்றும் மீள் நிர்மாணம் (Reconstruction) குறித்து தமிழ் மக்களின் அரசியல் மற்றும் குடிசார் அமைப்புகள் சிறிலங்கா அரசிற்கு அழுத்தம் பிரயோகிக்க முன் வர வேண்டும்.

தமிழர் தாயகத்தில் அவசர கால அடிப்படையில் மீள் குடியேற்றமும் மீள் நிர்மாணமும் – BTF

]]>
https://www.britishtamilsforum.org/10102-2/ Mon, 18 Aug 2025 16:21:27 +0000 http://www.britishtamilsforum.org/?p=10102 Read more]]> அமரர் இல. கணேசன் ஐயா இரங்கல் அறிக்கை

அமரர் இல. கணேசன் ஐயா அவர்கள் பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாட்டின் மூத்த அரசியல்வாதியும், கட்சியின் தேசியக் குழுவின் முன்னாள் உறுப்பினரும், நாகாலாந்து, மணிப்பூர், மேற்குவங்காளம் ஆகிய மாநிலங்களின் முன்னாள் ஆளுநருமாவார். மேலும், அவர் முன்னாள் நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராகவும் பணியாற்றியுள்ளார்.

பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு மாநில செயலராக நியமிக்கப்படுவதற்கு முன்பு, கட்சியின் தேசிய செயலாளர், தேசிய துணைத்தலைவர், தமிழ்நாடு மாநிலத் தலைவர் ஆகிய பதவிகளை வகித்துள்ளார்.

அரசியல் பணி முழுவதிலும் நேர்மை, அர்ப்பணிப்பு மற்றும் அன்பு நிறைந்த பண்புகளைக் கொண்டிருந்த அவரின் சேவைகள் என்றும் நினைவுகூரப்படும். இந்திய அரசியலில் இருந்த போதும் ஈழத் தமிழர்களின் நலனின் மீது கொண்டிருந்த அக்கறை சிறப்பாகக் குறிப்பிடத் தக்கது. தமிழ் தேசியத்தின் பால் அவரின் ஈர்ப்பு எப்போதும் வெளிப்படையாக இருந்தது.

அவரது மறைவு இந்திய அரசியலுக்கும், ஈழத் தமிழர்களுக்கும் ஒரு பெரிய இழப்பாகும்.

அமரர் இல. கணேசன் ஐயா அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள், அரசியல் பிரமுகர்கள் அனைவருக்கும் பிரித்தானிய தமிழர் பேரவையின் சார்பில் எங்கள் ஆழ்ந்த அனுதாபங்களையும், இரங்கலையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.

அமரர் இல. கணேசன் ஐயா இரங்கல் அறிக்கை

]]>
DETERIORATION OF TAMIL HOMELAND – MANAL AARU (மணல் ஆறு) 🡪 WELI OYA (වැලි ඔය) https://www.britishtamilsforum.org/deterioration-of-tamil-homeland-manal-aaru-%e0%ae%ae%e0%ae%a3%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%86%e0%ae%b1%e0%af%81-%f0%9f%a1%aa-weli-oya-%e0%b7%80%e0%b7%90%e0%b6%bd%e0%b7%92-%e0%b6%94%e0%b6%ba/ Mon, 11 Aug 2025 08:34:14 +0000 http://www.britishtamilsforum.org/?p=10087 Read more]]> DETERIORATION OF TAMIL HOMELAND – MANAL AARU (மணல் ஆறு) 🡪 WELI OYA (වැලි ඔය)

Manal Aaru, a historically Tamil region located in the Mullaitivu District of Sri Lanka, has endured a tragic transformation over the past several decades. Once a vibrant Tamil village, it has been forcefully renamed and repopulated under the guise of development — specifically through the Maduru Oya irrigation scheme.

On 16th April 1988, a Gazette notification by the Sri Lankan Government officially renamed Manal Aaru to Weli Oya, a Sinhala name. This was not a mere renaming — it was part of a broader and calculated strategy to alter the demographics and cultural identity of the region.

 Forced Displacement and Violence

 Between 1st and 15th December 1984, coordinated massacres were carried out in Tamil villages located between Mullaitivu and Trincomalee. These brutal attacks targeted Tamil civilians, many of whom had ancestral ties to the land going back centuries. Survivors were driven out of their homes, and the state-sponsored Sinhala colonization of the region began in earnest.

Under the pretence of development, Sinhala settlers were brought in, heavily protected by the Sri Lankan military. Dispossessed and displaced Tamil natives were left in poverty, with limited access to their lands, livelihoods, and cultural heritage. The use of draconian laws like the Prevention of Terrorism Act (PTA) provided a legal cover for such actions and impunity.

 Demographic Shift and Systematic Colonization

Since the 1980s, and particularly after the end of the war in 2009, state-backed encroachment has continued. Sinhala settlements have grown in number and infrastructure, while Tamil communities remain marginalized, under-resourced, and often intimidated or surveilled by the military.

The demographic maps (attached below) highlight the alarming transformation of Weli Oya from a predominantly Tamil area in 2015 to its current state — a visual representation of decades of orchestrated displacement and colonization. 

1 https://en.wikipedia.org/wiki/Weli_Oya

2 https://web.archive.org/web/20101019025338/http://www.nakkeran.com/colonization3A.htm

 

 Weli Oya – Before 2015 (Pink)

Weli Oya in 2015

 

Weli Oya – At Present (Pink)

Weli Oya at Present

What Are Our Leaders Doing?

While the Tamil homeland is being quietly taken over, what are our Members of Parliament, and the civil society organizations doing? Why is there such undue silence from those entrusted with protecting our rights and our identity?

Our Language, Our Land, Our Future

Land is not just soil — it is culture, identity, memory, and future. The erosion of our land directly impacts the survival of our language, religion, and the way of life.

Over the last 77 years, we have lost too much. Now is the time to rise and act. We must come together — not tomorrow, not next year — now, to protect our legitimate rights, to preserve and treasure our Tamil homeland, and to demand justice.

DETERIORATION OF TAMIL HOMELAND – MANAL AARU

]]>
International Call for Urgent Action on Enforced Disappearances in Sri Lanka https://www.britishtamilsforum.org/international-call-for-urgent-action-on-enforced-disappearances-in-sri-lanka/ Wed, 30 Jul 2025 14:55:17 +0000 http://www.britishtamilsforum.org/?p=10082 Read more]]> International Commission of Jurists (ICJ) warns that “Sri Lanka continues to have one of the highest numbers of unresolved enforced disappearances worldwide, with the Chemmani mass grave site standing as a painful reminder of this ongoing human rights crisis. The site first came to international attention in 1998 after the confession of a Sri Lankan soldier involved in the rape and murder of schoolgirl Krishanthy Kumaraswamy.” 

Although 15 skeletons were exhumed at the Chemmani site in 1999, the investigation was abruptly halted that same year without any credible explanation. To this day, no individuals – particularly those in positions of command, have been held accountable for the torture, sexual violence, extrajudicial executions, and enforced disappearances linked to the site. Furthermore, there has been no progress in determining the fate or whereabouts of the 628 individuals reported missing between 1996 and 1998, during the period when Jaffna district was under the control of Sri Lankan security forces.

The ICJ stresses the urgent need for sustained international oversight as Sri Lanka resumes the exhumation process. Past investigations into mass graves – including those at Chemmani, Mannar (2018), and other sites – have failed to deliver truth or justice, often stalled or suppressed by domestic judicial mechanisms.

The International Commission of Jurists (ICJ) supports the calls from families of the disappeared and local human rights groups for international oversight and technical expertise. This includes the deployment of independent international forensic experts and human rights observers, transparent and timely updates to families and the public, and rigorous protection of evidence to ensure future criminal accountability.

Although Sri Lanka is a State Party to both the International Covenant on Civil and Political Rights (ICCPR) and the International Convention for the Protection of All Persons from Enforced Disappearance (CPED), it has failed to implement its international obligations. Despite ratifying these treaties and enacting domestic legislation – such as the CPED Act – no successful prosecutions have taken place, and investigations remain superficial or ineffective.

International law requires that the Chemmani investigation goes beyond identifying human remains. It must uncover the full chain of responsibility, uphold victims’ rights, and preserve the site in accordance with international human rights standards.

Given Sri Lanka’s persistent impunity, ongoing cover-ups, and refusal to cooperate with international justice mechanisms, the British Tamils Forum (BTF) calls for:

  • An internationally mandated mechanism to assume custody of all identified and suspected mass grave sites—including Chemmani, Kokkuthoduvai, Muthur and Mannar.
  • The immediate deployment of international forensic and investigative teams.
  • The use of satellite imagery, forensic expertise, DNA sampling and recovery tracking to secure and examine remains and evidence gathered in prior investigations.

Such actions by the international community would send a strong and unequivocal message: those responsible for war crimes, crimes against humanity, and genocide will not be shielded from accountability – whether in Sri Lanka or anywhere else.

International Call for Urgent Action on Enforced Disappearances in Sri Lanka

]]>
The UN’s Failure in Sri Lanka: A Call for Genuine International Justice https://www.britishtamilsforum.org/the-uns-failure-in-sri-lanka-a-call-for-genuine-international-justice/ Mon, 30 Jun 2025 06:32:46 +0000 http://www.britishtamilsforum.org/?p=10079 Read more]]> We, the British Tamils Forum (BTF), sincerely thank the High Commissioner for Human Rights HE Mr Volker Turk for visiting Sri Lanka, visiting the mass graves and meeting the families of the victims, civil society, human rights defenders and Tamil National Political leaders. 

It is regrettable when the genocidal violence climaxed in 2009 against the Tamil population in Sri Lanka, the UN General Assembly, the Security Council, and the Human Rights Council (UNHRC) collectively failed at least to convene a single session to address or act on the grave violations committed by the Sri Lankan state and its security forces at that time. This historic failure to act in a timely manner not only denied justice to victims but also set a precedent for the unscrupulous nations to follow, jeopardising the world’s peace and security.

The UN thus has a great responsibility to rectify its past ignorance by taking appropriate actions to negate the Sri Lankan Bad Blueprint rather than promoting ruthless nations like Sri Lanka. 

The 2015 OISL Report (OHCHR Investigation on Sri Lanka) recommended a hybrid accountability mechanism due to the lack of trust in the domestic system as a compromise formula.

Following this, in 2015, the Sri Lankan government strategically maneuvered international diplomacy by agreeing to a resolution co-sponsored at the UNHRC, which included 25 key commitments—among them, the establishment of a hybrid tribunal with international participation and legal reforms allowing accountability for command responsibility and genocidal crimes. However, this cooperation proved illusory. Successive Sri Lankan administrations, having bought time and international goodwill, have systematically derailed, delayed, and ultimately abandoned the justice process—exposing the limits of soft diplomacy without enforceable accountability.

In succinct, the OISL 2015 Report’s recommendation was cynically used by the Sri Lankan state to feign compliance while ensuring impunity prevailed.

Today, the newly elected NPP (JVP-led) government appears poised to adopt the same playbook, using more sophisticated tactics: publicly cooperating, but for diluting international scrutiny, steering UN resolutions to their advantage, and ultimately stalling any meaningful criminal justice process

The UN must therefore have to be vigilant for not exerting its enormous effort, time and money in great peril of sabotaging justice and accountability that Tamil people entrusted that the UN would lead based on facts and figures that it collected in compliance to the Resolutions 46/1, 51/1 and 57/1. 

Among many things that the High Commissioner had stated in OHCHR’s Report A/HRC/57/19 dated 27 august 2024, the High Commissioner’s recommendations of paras 54 and 64 are particularly drawn to attention in retrospect.

  1. The international legal system offers further opportunities, including through the inter-State complaint mechanisms of treaty bodies, and/or consideration of proceedings before the International Court of Justice, where provided for by relevant human rights treaties. Efforts have been undertaken by CSO to request the Prosecutor of the International Criminal Court (ICC), to the extent possible, to exercise jurisdiction over relevant crimes committed in Sri Lanka. The Rome Statute provides opportunities for States to activate the ICC’s jurisdiction, including through the UN Security Council formally referring a situation to it.
  2. Following the elections, the newly elected Government should – as a matter of urgency – pursue an inclusive national vision for Sri Lanka that addresses the root causes of the conflict and undertakes fundamental constitutional and institutional reforms needed to strengthen democracy and devolution of political authority and advance accountability and reconciliation.

In the meantime, BTF would like to present a few salient points of facts of the Janatha Vimukthi Peramuna (JVP); President elect — challenge faced by Tamil nation.; to the High Commissioner for Human Rights, Mr Volker Turk’s attention.

Additionally, the JVP has three clear political positions:

  • Unitary State — with no devolution of the powers of Parliament.
  • Refusal to recognise the traditional homeland of the Tamils.
  • Oppose any form of international action to establish an international criminal justice mechanism for war crimes, crimes against humanity and genocide perpetrated against Tamils.

For the victims’ communities, Tamil civil society, Tamil national political parties, and the global Tamil diaspora, the demand is clear and unwavering: only an independent international criminal justice mechanismfree from Sri Lankan state interference—can meaningfully address this 75-year history of ethnic violence, systemic discrimination, and genocide.

If that occurs, the credibility of the UN system and the international community’s commitment to justice will prevail

By being stern on Sri Lanka in its ethos, the UN can not only redeem its past failures but can also establish a global precedent for responding to state-led atrocities. Given the current global conflicts, if there is any possibility of setting up a successful UN model on the application of international law & justice, Sri Lanka is the only country turning from a bad model to a role model and a deterrence. 

Such an action would send a powerful message to rogue regimes, following the prototype of Sri Lanka’s Bad Model, around the world. 

The culture of impunity must be forfeited.

The UN’s Failure in Sri Lanka – A Call for Genuine International Justice

]]>
https://www.britishtamilsforum.org/10072-2/ Wed, 11 Jun 2025 07:35:09 +0000 http://www.britishtamilsforum.org/?p=10072 Read more]]> ஐ.நா. மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரின் சிறிலங்காவிற்கான பயணமும் செம்மணி புதைகுழி தோண்டப்பட்டதன் முக்கியத்துவமும்.

செம்மணியில் கண்டுபிடிக்கப்பட்ட பாரிய புதைகுழிகள் தோண்டப்பட்ட விடயமும், தொடர்ந்து கொண்டிருக்கும் தமிழ் மக்களின் அவலநிலை ஆகியனவும், சர்வதேசத்தின் கவனத்தை அவசரமாகக் கோருகின்றன. உயர்ஸ்தானிகரின் விஜயமானது உண்மை மற்றும் நீதிக்கான எமது தேடலின் ஒரு திருப்புமுனையாக அமைவதுடன், எதிர்வரும் செப்ரெம்பர் மாத ஐ.நா மனித உரிமைகள் ஆணையத்தின் அமர்வில், நீதி மற்றும் பொறுப்புக் கூறலுக்கு வழிவகுக்குமென நாம் நம்புகிறோம்.

ஜூன் 2025இன் மூன்றாவது வாரத்தில் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் திரு. வோல்கர் துர்க் (Mr Volker Turk) அவர்கள் இலங்கைக்கு விஜயம் செய்ய இருக்கிறார். இதன் இன்றியமையாத முக்கியத்துவத்தை பிரித்தானிய தமிழர் பேரவை அடிக்கோடிட்டுக் காட்டுகின்றது. இது கடந்த ஒன்பது ஆண்டுகளில் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் ஒருவரின் முதலாவது உத்தியோகபூர்வ விஜயமாகும். மேலும், வடகிழக்கு பிராந்தியங்களில், குறிப்பாக திருகோணமலை, செம்மணி மற்றும் முள்ளிவாய்க்கால் ஆகிய இடங்களில் கடந்த கால மற்றும் தற்போதைய மனித உரிமை மீறல்களைக் காணவும், அவற்றை நிவர்த்தி செய்யவும் இது ஒரு முக்கிய வாய்ப்பை வழங்குகிறது.

ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தின் A/HRC/46/1, A/HRC/51/1 மற்றும் A/HRC/57/1 தீர்மானங்களுக்கு இணங்க அதன் கட்டாய விதிகளை (mandatory provisions) பலப்படுத்துவதற்காக, ஐ.நா. இன் சிறிலங்கா பொறுப்புக்கூறல் திட்டத்திற்கு (OSLAP) பிரித்தானியா தமிழர் பேரவையினால் தாக்கல் செய்யப்பட்ட முக்கியமான அடையாள வழக்குகளிற்கான (Emblematic cases) சாட்சிய கோப்புகளில் “செம்மணி மனிதப் புதைகுழி” மற்றும் “கிருஷாந்தி குமாரசாமி கொலை” ஆகியவை குறிப்பிடத்தக்கவை.

மனித உரிமை ஆணைக் குழு உயர்ஸ்தானிகர் திரு. வோல்கர் துர்க் அவர்கள், ஜூன் மாதத்தில் 3 நாள்கள் சிறிலங்காவிற்கான உத்தியோகபூர்வ பயணத்தை மேற்கொள்ளவுள்ளார் என்பதையும், அத்துடன் அவர் தமிழர்களின் தாயகமான திருகோணமலைக்கு மட்டுமே செல்லவுள்ளார் என்பதையும் அறிந்தவுடனே பிரித்தானியா தமிழர் பேரவை, 27 மே 2025 அன்று உயர்ஸ்தானிகருக்கு முக்கியத்துவம் வாய்ந்த  ஒரு கடிதத்தை அனுப்பியது (கடிதத்தின் பிரதி இணைக்கப்பட்டுள்ளது). அதில் செம்மணி மற்றும் முள்ளிவாய்க்கால் ஆகிய இடங்களில் இடம்பெற்ற ஈவிரக்கமற்ற மற்றும் கொடூரமான மனித உரிமை மீறல்கள் குறித்து பாதிக்கப்பட்ட மக்களை நேரடியாக சந்தித்து தகவல்களைப் பெற்றுக் கொள்ளுமாறு குறிப்பிடப்பட்டிருந்தது.

அண்மையில் செம்மணி புதைகுழியிலிருந்து சில மீட்டர்கள் தொலைவில் அகழ்வாராய்ச்சி மேற்கொள்ளப்பட்டு, பச்சிளங் குழந்தைகள் உட்பட உடைகள் நீக்கப்பட்ட 17 எலும்புக் கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் உயர்ஸ்தானிகர் திரு. வோர்கர் துர்க் அவர்கள் செம்மணிக்கு நேரில் சென்று பார்த்து, பாதிக்கப்பட்டவர்களுடன் கலந்துரையாடி தகவல்களை உறுதிப்படுத்தி நீதி மற்றும் பொறுப்புக்கூறலை உறுதி செய்வதென்பது தவிர்க்க முடியாததாகும்.

இந்தத் தருணத்தில் பிரித்தானியா தமிழர் பேரவை உயர்ஸ்நானிகருடன் மேற்கொண்டிருந்த சில தொடர்பாடல்களை மீண்டும் வலியுறுத்துவது இன்றியமையாததாகும்.

  • 22 ஜூலை 2024 தேதியிட்ட கடிதம் – ஐ.நா. நிறுவனங்களின் பெரும் தோல்வியை எச்சரித்து, “சிறிலங்கா மாதிரி” (Sri Lankan Model) என்பது இரக்கமற்ற நாடுகள் நீதியின் பிடியிலிருந்து தப்பிக்க பயன்படுத்தும் ஒரு சர்வதேச முன்னுதாரணமாக மாறியுள்ளது. இது சிறிலங்காவை அதன் “மோசமான மாதிரியிலிருந்து” (bad model) ஒரு “நல்ல மாதிரியாக” மாற்ற வேண்டிய அவசியத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன் மூலம் மற்ற நாடுகள் “சிறிலங்கா மாதிரி” என்ற மூலோபாயத்தினை பின்பற்றுவதற்கு ஒரு தடையாக (deterrence) அமையும்.
  • 16 செப்டம்பர் 2024 தேதி மின்னஞ்சல் – 2024 செப்டம்பரில் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கான மந்தமான முன்னேற்றம் குறித்து தமிழ் மக்களின் கவலைகளை வெளிப்படுத்துகின்றது.
  • 10 மார்ச் 2025 தேதியிட்ட கடிதம் – NPP (JVP) தலைமையிலான புதிய அரசாங்கத்தைக் குறிப்பிட்டு, அதன் சிங்கள அடிப்படை வாதக் கொள்கைகளை மேற்கோள் காட்டி, சிறிலங்காவில் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு உண்மை, நீதி மற்றும் பொறுப்புக்கூறலுக்கான பாதையை அமைப்பதன் முக்கியத்துவத்தை மீண்டும் வலியுறுத்துகின்றது.
  • 27 மே 2025 தேதியிடப்பட்ட கடிதம் – பிரித்தானியா தமிழர் பேரவையானது உயர்ஸ்தானிகரின் 2025 ஜூன் விஜயம் குறித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்திய போதும், உள்நாட்டு போர் முடிவடைந்து 16 ஆண்டுகள் கடந்து விட்ட பின்னரும், போரில் பாதிக்கப்பட்டவர்களின் அவல நிலையைக் காணவும், முள்ளிவாய்க்கால் மற்றும் செம்மணி ஆகிய இடங்களுக்குச் செல்ல வேண்டியதன் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தியது.

தற்போதைய சிறிலங்கா அரசாங்கம் “சுத்தமான சிறிலங்கா” என்ற போர்வையில் மனித உரிமைகளை மதிப்பதில் நீதியான பாதையை எடுத்து வருகிறது என்ற பொதுவான கருத்தை ஏற்று உயர் ஸ்தானிகர் அல்லது சர்வதேச சமூகம் ஏமாறக் கூடாது. ஐ.நா. தகவல் களஞ்சியத்தில் (UN Repository) ஏற்கனவே உறுதிப்படுத்தப்பட்ட உண்மை தகவல்கள் மற்றும் சாட்சியங்களை ஆராய்ந்து சாதுர்யமாக கையாள  வேண்டும். தற்போதைய NPP அரசாங்கம் அதன் உள்ளக குற்றவியல் வழக்கு விசாரணை பொறிமுறையின் மூலம் போர்க்குற்றங்கள், மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் இனப்படுகொலையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி மற்றும் பொறுப்புக்கூறலை வழங்கும் என்று நம்பி ஐ.நா. அமைப்புகளும் சர்வதேச சமூகமும் தங்களை கைவிட்டு விடுமோ என்று தமிழ் மக்கள் கவலைப்படுகிறார்கள்.

பாதிக்கப்பட்டவர்களை மையப்படுத்தபடுத்திய ஐ.நா. உயர் ஸ்தானிகரின் கலந்தாலோசனைகள், செப்டெம்பரில் வரவுள்ள OSLAP இன் இறுதி அறிக்கை மற்றும் மேலே குறிப்பிடப்பட்ட காரணங்களுடன், 2025 செப்டம்பரில் நடைபெறவிருக்கும் 60வது UNHRC அமர்வு, தமிழர்களுக்கு நீதி, தீவுக்கு அமைதி, ஸ்திரத்தன்மை மற்றும் செழிப்பு ஆகியவற்றை வழங்குவதற்கான பாதையை வகுக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்.

முக்கிய குறிப்புகள்:

  • சிறிலங்காவின் கொலைக் களங்கள் (Killing Fields), மனிதப் புதைகுழிகள் (Mass Graves), மறைக்கப்பட்ட சித்தரவதை மையங்கள், சட்டவிரோத தடுப்பு  மையங்கள் மற்றும் பாதிக்கப்பட்ட மக்களின் சாட்சியம் போன்றனவற்றை உலக சமுதாயம் கவனிக்கச் செய்வதற்கான உயர்ஸ்தானிகருக்கு கிடைத்திருக்கும் வாய்ப்பு இது.
  • சிறிலங்காவின் கடந்த 77 ஆண்டுகால வரலாற்றின் அடிப்படையில், சர்வதேச குற்றவியல் நீதி பொறிமுறையால் (international criminal justice mechanism) மட்டுமே மோதலின் வடிவங்களையும் மூல காரணங்களையும் அடையாளம் காண முடியும் என்பதையும், இலங்கையில் தேவையான கட்டமைப்பு மாற்றங்களை ஏற்படுத்துவதன் மூலம் வன்முறை சுழற்சி மீண்டும் நிகழாமல் இருப்பதை உறுதிசெய்ய முடியும் என்பதையும் ஐ.நா மற்றும் பிற சர்வதேச சமூகங்கள் ஒப்புக் கொள்ளும்.

நன்றி.

ஐ.நா. மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரின் சிறிலங்காவிற்கான பயணம் Fn2

May 2025 Letter to His Excellency Mr Volker Turk

 

]]>
UNHRC HIGH COMMISSIONER’S SRI LANAKA VISIT & THE SIGNIFICANCE OF UNEARTHING CHEMMANI MASS GRAVE https://www.britishtamilsforum.org/unhrc-high-commissioners-sri-lanaka-visit-the-significance-of-unearthing-chemmani-mass-grave/ Tue, 10 Jun 2025 07:53:16 +0000 http://www.britishtamilsforum.org/?p=10068 Read more]]> The unearthing of mass graves at Chemmani and the ongoing plight of Tamil victims demand urgent international attention. We trust that the High Commissioner’s visit will serve as a turning point in our pursuit of truth and justice, and that the upcoming UNHRC session in September will pave the way for justice and accountability.

The British Tamils Forum (BTF) underscores the critical importance of the upcoming visit of UN High Commissioner for Human Rights, Mr. Volker Turk to Sri Lanka scheduled for the third week of June 2025. This visit marks the first official visit of the High Commissioner to Sri Lanka in nine years, and it presents a vital opportunity to witness and address past and ongoing human rights violations, in the northeastern regions, particularly Trincomalee, Chemmani and Mullivaikkal.

Among many fully substantiated documentations of emblematic cases lodged by the British Tamils Forum (BTF) to OHCHR’s Sri Lanka Accountability Project (OSLAP), to facilitate its mandatory provisions pursuant to the UNHRC Resolutions of A/HRC/46/1, A/HRC/51/1 and A/HRC/57/1, Chemmani Mass Grave and Krishanti Kumaraswamy Murder had constituted significant parts therein.

Sooner the BTF learned that the High Commissioner (HRC), Mr Volker Turk, would be making a 3-day official visit to Sri Lanka in June 2025 and inter-alia would be visiting only Trincomalee in the traditional Tamil homeland, the BTF wrote a letter to the High Commissioner on 27 May 2025 (please find attached) urging, among the other areas, to visit Chemmani and Mullivaikkal to witness and consult the Tamil victims about the ruthless & heinous human rights violations committed in these areas. 

With the advent of recent excavations a few metres away from Chemmani Mass Grave, with over 17 skeletons, including infants, stripped off their clothes being unearthed, it is inevitable that the High Commissioner, Mr Volker Turk, is ethically obliged to visit Chemmani and directly witness the situation and to ensure justice and accountability incorporating victims’ centric consultations. 

The BTF considers that it is vital to reiterate communications hitherto it had with the High Commissioner at this stage.

  • Letter dated 22 July 2024 – Warning the monumental failure of the UN institutions, the “Sri Lanka Model” has become an international precedence for ruthless states to escape binding justice and the necessity to transform Sri Lanka from its “bad model” to a “good model”, setting it as a deterrence for other countries to follow.
  • Email dated 16 September 2024 – Common Proposal by Tamil People for UNHRC Resolution of September 2024 expressing our concerns about the slow progress of the UNHRC at that time. 
  • Letter dated 10 March 2025 – Referring to the new NPP (JVP) government and quoting its Sinhala fundamentalist policies, reiterating the importance of setting a pathway to truth, justice and accountability to Tamil victims in Sri Lanka.
  • Letter dated 27 May 2025 – Expressing pleasure of the High Commissioner’s intended visit to Sri Lanka in June 2025, the BTF, among other things, emphasized the importance of going to Mullivaikkal and Chemmani to witness the plight of the victims of the war even after 16 years lapsed since the end of the civil war and to see unearthing mass graves respectively.

It is important that the High Commissioner or the international community should not be carried away with the common concept that the current Sri Lankan government is taking a righteous path in respecting human rights with its guises “Clean Sri Lanka” but should be sagacious by taking the facts and figures that are already warranted in UN repository. Tamil people are anxious if the UN bodies and the international community will desert them by believing that the current NPP government will provide justice and accountability for the victims of war crimes, crimes against humanity and genocide, through its internal criminal prosecution mechanism

With the High Commissioner’s victims’ centric consultations along with OSLAP’s final report and reasons cited above, we, Tamil people, trust that the forthcoming 60th UNHRC Session in September 2025 will pave a pathway to deliver justice for Tamis, peace, stability and prosperity for the island. 

  • The High Commissioner now has an opportunity to get the focus of the international community on Sri Lanka’s killing fields, mass graves, hidden torture chambers, illegal detention centres and the victim’s community.
  • Based on the past 77-year history of Sri Lanka, the UN and other international communities will acknowledge that only an international criminal justice mechanism can identify the patterns and root causes of the conflict and ensure the non recurrence of cyclic violence by establishing necessary structural changes in Sri Lanka. 

HRC HIGH COMMISSIONER’S SRI LANAKA VISIT & UNEARTHING MASS GRAVE

May 2025 Letter to His Excellency Mr Volker Turk Fn

]]>
44th ANNIVERSARY REMEMBRANCE OF THE BURNING OF THE JAFFNA PUBLIC LIBRARY https://www.britishtamilsforum.org/44th-anniversary-remembrance-of-the-burning-of-the-jaffna-public-library/ Tue, 03 Jun 2025 21:23:51 +0000 http://www.britishtamilsforum.org/?p=10065 Read more]]> Tamil people around the world undergo the excruciating psychological trauma for the loss of their precious assets of more than 93,000 irreplaceable rare books and documents by the deliberate arson of Jaffna Public Library, by the willful, malevolent and calculated action of Sri Lankan state, remembering even after 44 years with no tangible action has been taken against the perpetrators or provide justice and accountability to the victims community of Tamil people to date.

Whilst the history chronically records numerous foreordained genocidal acts by the Sri Lankan state against Tamil people, among which 158 massacres, between 1956 and 2008,  have been atrocious, considering the climax of the genocidal war in 2009 where devouring over 70,000 innocent Tamil lives according to Secretary-General’s Internal Review Panel report on United Nations Action in Sri Lanka, with the intention of decimating Tamil people in the island and continuously proceeding with erasing Tamil peoples’ footprints, historical records and heritage, expecting humanity of justice and accountability from the Sinhala Buddhist chauvinistic state have so far proved futile.

The arson attack on Jaffna Public Library, which then was surrounded by Jaffna Police Station, and Army camp in Jaffna fort in its proximity, while two cabinet ministers, Gamini Dissanayake and Cyril Matthew of the UNP government (both self confessed Sinhala supremacists) were stationed in a Jaffna near the library building, was carried out by Sinhala thugs brought from South using state owned apparatuses; buses and presumably equipped and paid by the state funds. 

While Rev. Fr. (Dr.) Hyacinth Singarayar David, a Sri Lankan Tamil priest, scholar, and linguist, passed away from shock after hearing the burning of the Jaffna Library and observing the flames engulfing the library from his room at St. Patrick’s College, Jaffna, and while former Jaffna Municipal Commissioner Mr. CVK Sivagnanam was barricaded at gun points by the Sri Lankan army closing the access roads from preventing access to any fire-brigades or to the general public, burning down the Jaffna Library was executed by Sri Lankan state as a premeditated act. 

Among several scenarios provided by Kamalika Peris in Lankaweb of 20 September 2021, the following important facts are recited at this juncture. 

  • Upon shooting and killing three policemen by unidentified gunmen on 31 May 1981 night at a massive pre District Development Council (DDC) election rally the Tamil United Liberation Front (TULF), about two hundred police personnel present there went amok and burnt boutiques, shops, houses, cars and ‘commercial establishments’ and these attacks were the worst that the people of Jaffna had experienced so far, reported the media.
  • The TULF election rally took place in Nachchimaar Koviladi, which is nowhere closer to Jaffna Public Library.
  • That night, police and paramilitaries began a pogrom that lasted for three days, said Wikipedia. The head office of TULF party was destroyed. The Jaffna MP V. Yogeswaran‘s residence was also destroyed. Four people were pulled from their homes and killed at random. Many business establishments, a Hindu temple  and the office of the Eelanaadu, a local newspaper, were also destroyed. Statues of Tamil cultural and religious figures were destroyed or defaced, said Wikipedia.
  • On the night of June 1, 1981, the Jaffna public Library was burned. The burning of the library lasted the entire night. Yogendra Duraiswamy, then GA, Jaffna, requested the Navy base in Karainagar and the Municipality for bowsers of water to extinguish the fire. He found that the Municipal Office was closed, and the water tower locked. The city was virtually deserted. Although the Navy’s browser arrived at the scene, its capacity was inadequate to douse the roaring fire. No one had dared to come out that night. None of the TULF politicians were present.

“It is regrettable that the government did not institute an independent investigation to establish responsibility for these killings (in May/June 1981) and take measures against those responsible. Instead, one police officer involved was promoted and emergency legislation was introduced facilitating further killings.” quoted by Mr. Orville H.Schell, Chairman of the American Watch Committee, and Head of the Amnesty International 1982 fact finding mission to Sri Lanka. 

This abhorrence caused Tamil people to retain this charred Jaffna Public Library as a memorial monument of structural genocide of their priceless inheritance and to build an identical one nearby. 

During the peace talks between the Chandrika Kumaratunga government (SLFP) and the Liberation Tigers was in progress during 1994 – 95, the Sri Lankan government (GoSL) wanted to include the burnt Jaffna library in the agenda and during the deliberations government delegates accepted the LTTE representatives’ proposal of preserving the burnt library structure as a living monument and building a new structure with modern facilities in the adjacent area. Preliminary feasibility studies and architectural drawings were submitted by the Tamil representatives to their counterparts for necessary action. 

This was shattered when the Liberation Tigers lost control of the peninsula and the Sri Lankan government tacitly rushed to refurbish the ruined Jaffna Library building and hid all evidence of their genocidal act. This once again proved whatever political differences the Sinhala politicians have among their intra party rivalries, whether it be UNP, SLFP or other, they take a united stand in protecting their Sinhala Buddhist supremacist state craft.

The BTF, among its many pursuits at the UNHRC, has signified this inhuman act of “Burning of the Jaffna Public Library” as an important element substantiating with evidence to the ongoing OHCHR’s Sri Lanka Accountability Project (SLAP).

The BTF, on behalf of Tamil people in Sri Lanka, entreat the international community to establish a process to set up an international protection mechanism from continuing erosion of Tamil people in Sri Lanka and to arbitrate a sustainable political solution for them to live in peace and harmony recognizing their legitimate rights. 

If there is a will, the international community have many ways. Truth and justice must prevail.

44th ANNIVERSARY REMEMBRANCE OF THE BURNING OF THE JAFFNA PUBLIC LIBRARY

]]>
https://www.britishtamilsforum.org/10049-2/ Wed, 26 Mar 2025 22:00:24 +0000 http://www.britishtamilsforum.org/?p=10049 Read more]]> மனித உரிமை மீறல்கள் தொடர்பில் நான்கு இலங்கையர்கள் மீது பிரித்தானிய அரசாங்கத்தின் தடை நடவடிக்கையினை பிரித்தானிய தமிழர் பேரவை வரவேற்கிறது

இலங்கை உள்நாட்டுப் போரின் போது நீதிக்குப் புறம்பான கொலைகள், சித்திரவதை மற்றும் பாலியல் வன்முறைகள் உட்பட கடுமையான மனித உரிமை மீறல்களுக்குப் பொறுப்பான நான்கு நபர்கள் மீது சொத்து முடக்கம் மற்றும் பயண தடைகளை விதித்ததற்காக பிரித்தானிய தமிழர் பேரவை (BTF), பிரித்தானிய அரசாங்கத்தை வரவேற்று பாராட்டுகின்றது.

உலகளாவிய மனித உரிமைகள் தடை விதிமுறைகளின் கீழ் மாக்னிட்ஸ்கி பாணியிலான (Magnitsky style) தடையை அமல்படுத்தவும், (1) இலங்கை ஆயுதப் படைகளின் முன்னாள் தளபதி சவேந்திர சில்வா, (2) முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொட, (3) இலங்கை முன்னாள் இராணுவத் தளபதி ஜகத் ஜயசூரிய மற்றும் (4) துணை இராணுவக் குழுவின் முன்னாள் தலைவர் விநாயகமூர்த்தி முரளிதரன் என்கிற கருணா அம்மான் (கருணா குழு) ஆகியோருக்கு எதிராகப் பயணத் தடை மற்றும் சொத்துக்களை முடக்குவதற்காக எடுக்கப்பட்ட  இங்கிலாந்து அரசாங்கத்தின் முடிவினைப் பாராட்டுகிறோம்.

பிரித்தானியாவில் 2024 இல் நடந்து முடிந்த தேர்தலின் போது, தாங்கள் அளித்த வாக்குறுதிகளில் ஒரு பகுதியை நிறைவேற்றியதற்காக பிரதமர் ரைட் ஹானரபிள் சேர் கெய்ர் ஸ்டார்மர் (Rt Hon Sir Keir Starmer MP) மற்றும் வெளியுறவு, பொதுநலவாய மற்றும் அபிவிருத்தி விவகாரங்களுக்கான செயலாளர் ரைட் ஹானரபிள் டேவிட் லாமி எம்பி (Rt Hon David Lammy MP) ஆகியோருக்கு நாங்கள் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். பிரதமர் தேர்தலுக்கு முன்பு அளித்த வாக்குறுதியானது இந்த நேரத்தில் நினைவுகூரத்தக்கது. https://www.youtube.com/watch?v=6aFa36ZY61E). அத்துடன் இலங்கையில் குற்றவாளிகளுக்கு எதிராக மாக்னிட்ஸ்கி சட்டத்தை பிரயோகித்தமைக்காக அமெரிக்கா மற்றும் கனடாவுக்கும் நன்றி தெரிவிக்கிறோம்.

அமெரிக்காவின் “மாக்னிட்ஸ்கி சட்டம்” போன்ற சட்டத்தைப் பயன்படுத்தி, பிரித்தானியா தமிழர் பேரவை, பிரித்தானியாவில் வசித்து வரும் போரினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் மற்றும் உலகளாவிய ரீதியில் வாழும் தமிழ் மக்கள் அமைப்புகளின் பத்து வருட காலத்திற்கும் மேலாக இலங்கை அரசாங்கத்திற்கெதிராக மனித உரிமைகள் ஆணைக் குழுவில் சர்வதேச நீதி விசாரணைக்காக, தொடர்ச்சியான கோரிக்கைகளை ஐ.நாவில் முன் வைக்க எம்முடன் தொடர்ந்து பயணித்த பல அரசியல்வாதிகளுடன், குறிப்பாக முன்னாள் கன்சர்வேடிவ் பாராளுமன்ற உறுப்பினர் ரைட் ஹானரபிள் தெரசா வில்லியர்ஸ் (The Rt Hon Theresa Villiers), ரைட் ஹானரபிள் சேர் ஸ்டீபன் டிம்ஸ் எம்.பி. (The Rt Hon Sir Stephen Timms MP), ரைட் ஹானரபிள் வெஸ் ஸ்ட்ரீட்டிங் எம்.பி. (The Rt Hon Wes Streeting MP), ரைட் ஹானரபிள் சேர் எட் டேவி பாராளுமன்ற உறுப்பினர் (Rt Hon Sir Ed Davey) ஆகியோர் குறிப்பிடப்படக் கூடியவர்கள். இலங்கையில் அட்டூழியக் குற்றங்களில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக உலகளாவிய நியாயாதிக்கக் கோட்பாட்டைப் (Universal Jurisdiction) பயன்படுத்துமாறு ஐ.நா மனித உரிமைகள் உயர் ஆணையாளர்கள் மீண்டும் மீண்டும் உறுப்பு நாடுகளுக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.

2020 மார்ச்சில் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் அமர்வுக்கு பிரித்தானிய தமிழர் பேரவையுடன் விஜயம் செய்த தெரசா வில்லியர்ஸ், அப்போதைய கன்சர்வேட்டிவ் அரசாங்கம் இது தொடர்பாக ஒரு சட்டத்தை முன்வைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாக எங்களுக்கு உறுதியளித்தார். இதன் விளைவாக ஜூலை 2020 இல் உலகளாவிய மனித உரிமைகள் தடை விதிமுறைகள் (Global Human Rights Sanctions Regulations) உருவாக்கப்பட்டன. இந்த சட்டம் தற்போது நடைமுறையில் உள்ள நிலையில், சர்வதேச குற்றவியல் நீதிப் பொறிமுறையின் ஊடாக பொறுப்புக்கூறலுக்காக ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நீதிக்காக போராடும் அதே வேளை, மனித உரிமை மீறல்கள், போர்க் குற்றங்கள், மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள்  மற்றும் இனவழிப்பு போன்ற அட்டூழியக் குற்றங்கள் செய்தவர்களுக்கு எதிராக பிரித்தானியாவில் தடைகளை விதிப்பதற்கான நடவடிக்கைகளை BTF தீவிரமாக முன்னெடுத்து வருகிறது. 

மார்ச் 2009இலிருந்து ஐ.நா.மனித உரிமை கழகத்தில் (UNHRC) BTF இன் தொடர்ச்சியான முயற்சிகள், அங்கு மேற்கூறிய அரசியல்வாதிகள் மற்றும் எம் சகோதர அமைப்புகளுடன் இணைந்து எடுத்த காத்திரமான நடவடிக்கைகளின் விளைவாக மார்ச் 2021 இல் HRC/RES/46/1 எனும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதைத் தொடர்ந்து அக்டோபர் 2022 இல் HRC/RES/51/1 என்ற மேலும் வலுவூட்டப்பட்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த இரண்டு தீர்மானங்களின் அடிப்படையில் சிறிலங்கா பொறுப்புக்கூறல் திட்டத்தை (OSLAP) நிறுவி செயல்பாடுகளை தொடங்கின. 

OSLAP இற்கு வழங்கப்பட்ட ஆணை (Mandate), மனித உரிமை மீறல்கள் அல்லது சர்வதேச மனிதாபிமான சட்டத்தின் கடுமையான மீறல்களுக்கான (1) எதிர்கால பொறுப்புக்கூறல் செயல்முறைகளுக்கான சாத்தியமான உத்திகளை உருவாக்குவதற்கும், (2) பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் உயிர் தப்பியவர்களுக்காக வாதிடுவதற்கும், (3) தகுதி வாய்ந்த நியாயாதிக்கத்துடன் உறுப்பு நாடுகள் உட்பட தொடர்புடைய நீதித்துறை நடவடிக்கைகள் மற்றும் பிற நடவடிக்கைகளுக்கு ஆதரவளிப்பதற்கும் (5) தகவல் மற்றும் ஆதாரங்களை சேகரித்தல், ஒருங்கிணைத்தல், பகுப்பாய்வு செய்தல் மற்றும் பாதுகாத்தல் போன்றனவாகும். அத்துடன் இனவழிப்பு குற்றங்கள் தொடர்பான சாட்சியங்களையும் OSLAP இற்கு தொகுத்து அனுப்பி வைக்க முடியும்.

இதன் விளைவாக, ஆகஸ்ட் 2024 இல் வெளியிடப்பட்ட OHCHR இன் இடைக்கால அறிக்கை (HRC/57/19), இலங்கை ஆயுதப் படைகளால் இழைக்கப்பட்ட பல மனித உரிமை மீறல்களை OSLAP இன் சாட்சியங்களை அடிப்படையாக கொண்டு சுட்டிக் காட்டியது. 1948 ஆம் ஆண்டு முதல் தமிழ்மக்களுக்கெதிராக 156 க்கும் மேற்பட்ட படுகொலைகள் நடத்தப்பட்டுள்ளன. இந்த கொலைகள் உட்பட இனவழிப்புத் தொடர்பான சாட்சியங்கள், குறிப்பாக கறுப்பு யூலை, செம்மணிப் படுகொலை போன்ற குற்றங்களுக்கு நேரடிச் சாட்சியாக இருப்பவர்கள் OSLAP உடன் அல்லது எம்முடன் (BTF) உடன் தொடர்பு கொள்ள முடியும். இவ்வாறாக நாம் இனவழிப்பு குற்றங்களைத் தொகுத்து வழங்க முடியும்.

2024 செப்டெம்பர் மாதத்தில் (OSLAP) தனது வசமுள்ள முக்கியமான அடையாள வழக்குகளை (emblematic cases) உள்ளடக்கிய தனது அறிக்கையை சமர்ப்பிப்பதற்காக மேலும் ஒரு வருட கால நீட்டிப்பு வழங்கப்பட்டு, 2025 செப்டெம்பரில் நடைபெறவுள்ள 60வது மனித உரிமைகள் பேரவையின் அமர்வில் இலங்கை மீது கொண்டு வரவிருக்கும் புதிய தீர்மானம் இலங்கை அரசாலும் பாதுகாப்புப் படையினராலும் இழைக்கப்பட்ட மனித உரிமை மீறல்களின் அளவையும் அதன் பாதிப்புகளையும் வெளிப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

OSLAP இற்கு வழங்கப்பட்ட ஆணைக்கு அமைய, ஐ.நா. உறுப்பு நாடுகள் தங்கள் நீதித்துறை பொறிமுறைகளில் சட்ட நடவடிக்கைகளுக்கு உதவுவதற்கான தகவல்களை வழங்க OSLAP தயாராக உள்ளதானது, ஒரு முக்கியமான சாதகமான அம்சமாகும்.

இவ்வாறாக சர்வதேச தளங்களில் தமிழ் மக்கள் எடுத்த முக்கியமான நகர்வுகளின் தொடர்ச்சியாக ஈழத் தமிழ் மக்களுக்கு எதிரான குற்றமிழைத்தவர்கள் மீது அமெரிக்கா, கனடா மற்றும் பிரித்தானியாவில் கொண்டு வரப்பட்டுள்ள தடைகள் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தவை.

உலகளாவிய மனித உரிமைகள் விதிமுறைகள் 2020 இன் (Global Human Rights Sanctions Regulations) கீழ் குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்குவதில் இங்கிலாந்து அரசாங்கம் சாதகமான நடவடிக்கைகளை எடுத்துள்ளதை தொடர்ந்து மனித உரிமைகள் மற்றும் சட்டத்தின் ஆட்சியை மதிக்கும் பல நாடுகளை, குறிப்பாக ஐரோப்பிய ஒன்றியத்தில் (EU) உள்ள நாடுகள் மற்றும் ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து என்பன அதனை பின்பற்ற ஊக்குவிக்கும். இது குறித்து மேற்படி நாடுகளில் உள்ள புலம்பெயர் தமிழ் மக்களுடன் இணைந்து பணியாற்றுவோம்.

Reference

Report of the OHCHR Investigation on Sri Lanka (OISL) 2015 – “Whenever possible, notably under universal jurisdiction, investigate and prosecute those allegedly responsible for violations, such as torture, war crimes or crimes against humanity”

Sri Lanka on alarming path towards recurrence of grave human rights violations – UN report

ஐக்கிய இராச்சியத்திற்கு வருகை தந்துள்ள இலங்கை இனப்படுகொலையாளிக்கு அதிகார வரம்பு நீதியை (Jurisdictional Justice Provisions) பிரயோகிக்குமாறு உலகளாவிய புலம்பெயர் அமைப்புகள் கோரிக்கை 

Accountability central to Sri Lanka’s future – UN Human Rights report

https://www.facebook.com/share/1BWWBKDasQ/

https://x.com/wesstreeting/status/1237394176460746755?t=uVM9hlUnlKHANF–JAyl2Q&s=08

https://youtu.be/__D-0UNOT1w?si=FkBcEbQIFlZGaWbP

பிரித்தானியா அரசு விதித்த தடை

]]>