38ம் வருட கருப்பு ஜூலை 1983 நினைவுகூரல்

18 மே 2021 அன்று 12ம் வருட முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை  நினைவுகூரல் மற்றும் 01 ஜூன் 2021 அன்று 40ம் வருட யாழ்.பொது நூலக எரிப்பு நினைவைத் தொடர்ந்து, பிரித்தானிய தமிழர் பேரவை பின்வரும் உலகளாவிய சகோதர அமைப்புகளுடன் சேர்ந்து 38ம் வருட கருப்பு ஜூலை 1983 நினைவுகூரல் நிகழ்வினை 27 ஜூலை 2021 அன்று ஏற்பாடு செய்துள்ளது.

ஆஸ்திரேலியத் தமிழ் காங்கிரஸ் (ATC)

பிரான்ஸ்  தமிழ் ஈழ மக்களவை (MTE)

அயர்லாந்து தமிழர் பேரவை (ITF)

கனடியத் தமிழர் தேசிய அவை (NCCT)

நோர்வே ஈழத் தமிழர் அவை (NCET)

நீதிக்கும் சமாதானத்துக்குமான ஒற்றுமைக் குழு – தென் ஆப்பிரிக்கா (SGPJ – South Africa)

ஐக்கிய அமெரிக்க தமிழர் நடவடிக்கை குழு (USTAG)

சுதந்திரம் அடைந்த நாள் தொடக்கம், காலம் காலமாக இலங்கையில் தமிழர் இனச் சுத்திகரிப்பும் இன அழிப்பும் தொடர்ந்து நடைபெற்றாலும், 1983 ஜூலையில் சிறிலங்கா அரசு நடந்தேற்றிய திட்டமிட்ட இனப் படுகொலைக்கு பின்புதான் இதன் சுயரூபம் உலகெங்கும் தெரிய வந்தது. அப்படி தெரிய வருவதற்கு அந் நேரத்தில் கொழும்பில் இருந்த வெளி நாட்டு சுற்றுலாப் பயணிகளின்  பங்கும்  குறிப்பிடத் தக்கது. அதன் பின் 2009 மே மாதம் நடாத்தப்பட்ட முள்ளிவாய்க்கால் இனப் படுகொலை சர்வதேச சமூகத்தை மேலும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருந்தது.

கடந்த மார்ச் மாத ஐக்கிய நாடுகள் மனித உரிமைச் சபையின் 46வது  அமர்வில் சிறிலங்கா அரசுக்கு எதிராக எடுத்த தீர்மானத்தின் பின்பும் கூட சிறிலங்கா அரசு தன் நடவடிக்கைகளில் உறுதியுடன் தான் உள்ளது.  இவ்வரசு மேன்மேலும் ஒரு இனம், ஒரு மதம், ஒரு மொழி என்ற கொள்கையைப் பின்பற்றி ஏனைய இன, மத, மொழியைச் சார்ந்தவர்களை தொடர்ந்தும் அழித்துக் கொண்டுதான் இருக்கிறது.

இது ஜனநாயகம் என்ற போர்வையில் இயங்கும் ஒரு இராணுவ சர்வாதிகர பேரினவாத அரசு. சவேந்திர சில்வா, ஜகத் ஜயசூரிய மற்றும் கமல் குணரத்ன போன்ற ஐக்கிய நாடுகள் மனித உரிமைக் குழுவால் (UNHRC OISL செப்டம்பர் 2015) குற்றங்களுடன் அடையாளங் காணப்பட்டவர்களை, அப்போது பாதுகாப்பு செயலாளராக இருந்தவரும் தற்போது ஜனாதிபதியாக இருப்பவருமான கோத்தபாய ராஜபக்சே, அரசின் முக்கிய பதவிகளில் அமர்த்தியுள்ளதைக் கண்டித்து சர்வதேச சமூகம் இக் குற்றவாளிகளுக்கு எதிராக தடை உத்தரவுகள்  விதிக்காது இருக்குமானால் அது, சிறிலங்கா அரசை மேலும் இன அழிப்பை ஊக்குவிப்பது போலாகும்.

இப்போதுள்ள அரசின் சர்வாதிகாரப் போக்கால் சிறிலங்காவின் நிதி நிலைமை முடங்கிப் போய் உள்ளது. இந்த நிலை நீடிக்குமானால் நாடு மீள முடியாத நிலைமைக்கு தள்ளப்பட்டு விடும். சிங்கள பௌத்த பெரும்பான்மை இனத்தை திருப்திப்படுத்துவதுதான் தன் முழு நோக்கம் எனக் கருதிக் கொண்டு இவ்வரசு கொடுங்கோன்மை ஆட்சியைத்  தொடர்ந்து கொண்டிருக்கிறது.

சர்வதேச சமூகம் முன்வந்து பொருளாதாரத் தடைகள் (ECONOMIC SANCTIONS), நெறிமுறையற்ற வர்த்தகத்தை (UNETHICAL TRADE) நிறுத்துவது போன்ற தகுந்த நடவடிக்கைகளை எடுக்காவிடின்  சிறிலங்கா அரசு, சர்வதேச சமூகத்தின் விதிமுறைகளை மீறி, தற்போதுள்ளது போன்று  தனது நடவடிக்கைகளைத் தொடரத்தான் போகிறது. அதனால் சர்வதேச சமூகம் விழித்தெழுந்து பொருளாதார தடைகள் விதித்தல், GSP+ மற்றும் அது போன்ற சலுகைகளை நிறுத்துவத்துவதன் மூலம்  சிறிலங்கா அரசின் கடும்போக்கை கட்டுப்படுத்த முடியும் என நம்புகிறோம்.

நினைவுகூரல் நிகழ்வில் கலந்து கொள்வது உட்பட்ட விபரங்கள் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

38TH YEAR OF REMEMBERENCE OF BLACK JULY TAMIL PRESS RELEASE

Black July 2021 flyer _ Global event

Please follow and like us:
error

Comments are closed.