பிரித்தானிய தமிழர் பேரவையின் கருப்பு ஜூலை 83 நினைவேந்தல் 2020 ‘அவர்கள் எதிர் ‘நாங்கள்’

“தமிழ் மக்கள் கருத்துக்கள் பற்றி நான் கவலைப்படவில்லை. அவர்கள் பற்றியோ, ‘அவர்கள்’ வாழ்க்கை பற்றியோ அல்லது அவர்கள் எம்மைப் பற்றி வைத்திருக்கும் கருத்து பற்றியோ ‘நாங்கள்’இப்போது சிந்திக்க முடியாது”. இது 1983 ஆடி படுகொலையின் போது சிறிலங்காவின் ஜனாதிபதியாக இருந்த ஜே ஆர் ஜெயவர்தனேயினால் 11-07-1983 அன்று ‘டெயிலி ரெலிகிறாவ்’ (Daily Telegraph) பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் கூறப்பட்டது.

37 வருடங்கள் கழிந்தும் நீதி இன்னமும் எட்டாக் கனியாகவே உள்ளது. பாதிக்கப் பட்டவர்கள் அவ்வினப்படுகொலை அதிர்ச்சியிருந்து முற்றாக மீளவில்லை. 1948ல் சிறிலங்கா சுதந்திரம் அடைந்ததில் இருந்து தமிழ் மக்கள் பல படுகொலைகளுக்கு முகம் கொடுத்து வந்துள்ளார்கள். இப் படுகொலைகள் யாவற்றிலும் 1983 ஆடிப் படுகொலையே மாபெரும் பேரழிவை உலகளாவிய அளவில் வெளிக் கொண்டு வந்தது. இதில் 3,000 தமிழர்கள் கொல்லப்பட்டும், 25,000 தமிழர்கள் காயமுற்றும், 150,000 தமிழர்கள் வீடிழந்தும், 8,000 தமிழ் வியாபார நிலையங்கள் கொள்ளையிடப்பட்டு தீயிடப்பட்டும் உள்ளன.

இவையனைத்தும் பொலிஸ், ராணுவத்தின் நேரடிக் கண்காணிப்பில் அவர்களின் அனுசரணையுடன் நடந்தேறியுள்ளன. குற்றம் புரிந்தவர்கள் கூலிக்கமர்த்தப்பட்ட சிங்கள காடையர்களாவர். அவர்கள் கைகளில் தமிழர் வசிக்கும் விலாசங்களை கண்டறிவதற்கு இலகுவாக வாக்காளர் பட்டியல் கொடுக்கப்பட்டிருந்தது.

தமிழர்களுக்கு எதிராக நடந்தேறிய வன்கொடுமைப் படுகொலைகள் அனைத்திலும் கீழ்க் காணும் பொதுத் தன்மை இழையோடுகின்றது.

 

  • எப்பொழுதும், பாதிக்கப்பட்டவர்கள் தமிழர்களாவர்,
  • அடக்கு முறைக்கு எதிராக தமிழர்கள் கிளர்ந்தெழும் போதெல்லாம்,    சிறிலங்கா அரசின் பதில் தமிழினப் படுகொலைகளும் வன்செயலாகவுமே இருந்துள்ளது,
  • அனைத்துப் படுகொலைகளிலும் சிறிலங்கா அரசின் ஈடுபாட இருந்துள்ளமைக்கான வெளிப்படைச் சான்றுகள் உள்ளன,
  • தமிழர்கள் இன்று சொந்த நாட்டை விட்டு வெளியேறி உலக நாடுகளில் தஞ்சமடைந்து வாழ்வதற்கு தமிழினப் படுகொலைகளே காரணம்.

23-07-2020ல் நடைபெறவுள்ள நினைவேந்தல் நிகழ்வில் காண்பிக்கப்படுவதற்காக கறுப்பு ஆடிப் படுகொலை (83) சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சாட்சிகளிடம் இருந்து வாக்குமூலச் சான்றுகளை பிரித்தானிய தமிழர் பேரவை சேகரித்து வருகின்றது. தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொள்ள விரும்புபவர்கள் வரவேற்கப்படுகிறார்கள். அவர்கள் விரும்பும் பட்சத்தில் அவர்களின் அடையாளங்களின் இரகசியத் தன்மை பேணப்படும்.

Zoom, Youtube and Facebook ஆகிவை வாயிலாக நினைவேந்தல் நிகழ்வை பார்வையிட முடியும்.

Date: 23 July 2020

Time: 6:00 PM – 6:30 PM – Eyewitness Testimonial Screening

6:30 PM – 7:30 PM – Panel Discussion: “Them” vs “Us”

 

Zoom: https://us02web.zoom.us/j/87205091034…

Webinar ID: 872 0509 1034

Passcode: 792999

 

Youtube: https://www.youtube.com/channel/UCrijfF827bKXoqiB54wrqpA

Facebook: https://www.facebook.com/BritishTamilsForum/live/

 

மேலதிக தகவல்களைப் பெற்றுக் கொள்ள எம்மை அணுகவும்.

Email: info@britishtamilsforum.org

Phone: 0208 808 0465

 

Press release tamil 200720

 

Please follow and like us:
error

Comments are closed.