சிறிலங்கா குற்றவாளிகளுக்கு எதிராக உலகளாவிய மனிதஉரிமைகள் தடை விதிமுறைகளை பிரயோகியுங்கள்

கடுமையான மனித உரிமை துஷ்பிரயோகங்கள், மீறல்கள் புரிந்த குற்றவாளிகள் தொடர்ச்சியாக தண்டனைகளிலிருந்து தப்புவிப்பதனை நிறுத்துவதற்காக, ஐக்கிய ராச்சியம் சமீபத்தில் அதன் ”உலகளாவிய மனித உரிமைகள் தடை விதிமுறைகள்” சட்டத்தை (Global Human Rights Sanctions Regime Act), கடந்த ஜூலை மாதத்தில் நடைமுறைக்கு கொண்டு வந்தது. ஆயினும், சிறிலங்கா அரசில் பங்கு வகிக்கும் மனிதநேயமற்ற அட்டூழியங்களைப் புரிந்து உள்நாட்டில் எவ்வித தண்டனைகளுமின்றி வாழும் குற்றவாளிகளுக்கு பிரித்தானியாவின் இச் சட்டம் விலக்களித்து உள்ளதால் தமிழர் சமூகம் மேற்படி சட்ட அமுலாக்கலில் அதிருப்தி அடைந்துள்ளது. சிறிலங்கா சர்வதேச சட்டம் மற்றும் மனித உரிமை விழுமியங்கள் ஆகியவற்றை உதாசீனம் செய்வதும் அவமதிப்பதும் தொடர்கிறது என்பது வெளிப்படையான உண்மை ஆகும்.

இந்த நோக்கத்திற்காகவே, செப்டம்பர் 2015 ல் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபை உயர் ஸ்தானிகர் அலுவலகத்தின் இலங்கை மீதான விசாரணை அறிக்கையில் (OISL) தீவிர மனித உரிமை மீறல்கள் புரிந்ததாக சந்தேகிக்கப்படும் குற்றவாளிகள் என இனம் காணப்பட்டவர்களை உலகளாவிய மனித உரிமைகள் தடைகள் சட்டத்துள் முழுமையாக உள்ளடக்கப்படுவதோடு, இங்கிலாந்து வெளியுறவு, காமன்வெல்த் மற்றும் மேம்பாட்டு அலுவலகத்தால் (FCDO) அறிவிக்கப்படவும் வேண்டும் என நாம் விரும்புகிறேம்.

சிறிலங்காவில் கொடுமைகள் புரிந்ததாக, OISL அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள சந்தேக நபர்களின் பெயர் பட்டியலை கீழே அடையாளம் காட்டியுள்ளோம். இத் தடைகள் மூலம், எதிர்காலத்தில் பரவலாக பல நாடுகளிலும் தொடர்ந்து நிலவும் தண்டனையின்மையையும், துஷ்பிரயோகங்களையும் இங்கிலாந்து தடுக்க முடியும். லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா மீது பயணத் தடை விதித்த அமெரிக்க உதாரணத்தை அடியொற்றி உலகளாவிய நியாயாதிக்கம் மற்றும் நாடு சார்ந்த தடைகள் மூலமும் இக் குற்றங்களை தடுப்பதற்கான நடவடிக்கை எடுக்க முடியும்.

https://www.ohchr.org/EN/HRBodies/HRC/Pages/OISL.aspx

  1. Lieutenant General Shavendra Silva
  2. Major General Sathyapriya Liyanage
  3. Major General Kamal Gunaratne
  4. Major General Mahinda Hathurusinghe
  5. Major General Nanda Mallawarchcha
  6. Colonel G.V. Ravipriya
  7. Brigadier Prasanna Silva
  8. Major General Jagath Dias
  9. Gotabaya Rajapaksa
  10. Mahinda Rajapaksa
  11. Admiral Wasantha Kumar Jayadewa Karannagoda
  12. Admiral Thisara S. G. Samarasinghe
  13. Admiral Dissanayake Wijesinghe Arachchilage Somatilake Dissanayake
  14. Major General Jagath Jayasuriya
  15. Brigadier Nandana Udawatta
  16. Brigadier Chagie Gallage
  17. C.N.Wakishta
  18. General Sarath Fonseka

BTF 271020 PR Tamil- UK’s Global Human Rights Sanctions Regime (Tamil) UNICODE FINAL (1)

Please follow and like us:
error

Comments are closed.