காணாமல் ஆக்கப்பட்டோருக்கான சர்வதேச நினைவு தினம்

சிறிலங்கா அரசினாலும், ஒட்டுக்குழுக்களினாலும் மற்றும் ஏனைய துணைஆயுதக்குழுக்களினாலும் திட்டமிட்டு காணாமல் ஆக்கப்படடோர் தொடர்பில் மீண்டும் ஒரு காணாமல் ஆக்கப்பட்டோருக்கான சர்வதேச நினைவு தினத்தில் மிக துயரமான நினைவுகளை சுமந்து நிற்கின்றோம்.  காணமல் ஆக்கப்படடோரின் உறவுகள் தமது காணாமல் போன உறவுகள் தொடர்பில் இதுவரை எதுவித தகவல்களும் இன்றி தவிக்கும் துயர நிலைமையினை நாம் பகிர்ந்து கொள்கின்றோம்.

காணாமல் ஆக்கப்பட்ட பல்லாயிரம் தமிழர்கள் தொடர்பில் என்ன நடைபெற்றது என்னும் உண்மையை கண்டறியும் முகமாக நீதியையும் சமாதானத்தையும் விரும்பும் அனைவரும் எம்முடன் இணைத்து பணியாற்ற முன்வருமாறு அழைப்பு விடுக்கின்றோம். ஒற்றுமையே எமக்கான பலம் என்னும் நம்பிக்கையில், காணாமல் ஆக்கப்படடோர் உறவுகளுடன் ஒன்றிணைந்து அவர்களின் நீதிக்காக நாம் எம் செயற்பாடுகளை முன்னெடுக்கின்றோம்.

‘’காணாமல் போனவர்கள் வெளிநாடுகளில் வேறு பெயர்களில் வாழ்கின்றனர்’’ என்னும் இலங்கை அரசின் பிரதிநிதி ஒருவரின் அண்மைய கருத்து தொடர்பில் நாம் மிகவும் விசனம் அடைகின்றோம். இத்தகைய கருத்து குற்றவாளிகளை காப்பாற்றும் நோக்குடன் உண்மைக்கு புறம்பான விசமத்தனமான கருத்தாக இருப்பதுடன் பாதிக்கப்படடவர்களை குற்றவாளிகளாக சித்தரிக்கும்  முயற்சியாகவே  நாம் கருதுகிறோம். காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம் தொடர்பில் உலக நாடுகள் பட்டியலில் இலங்கை இரண்டாம் இடத்தில் உள்ளது என்பதே உண்மை நிலவரமாக  உள்ளது. 

மரணம் அடைந்தவர்களின் மொத்த தொகை தொடர்பில் நாம் கணக்கெடுப்பு முயற்சியினை மேற்கொள்ளும் பொழுது, காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான உண்மையான எண்ணிக்கையினை நாம் அறிந்து  கொள்ள முடியும் என நாம் திடமாக நம்புகின்றோம். காணாமல் போனவர்களின் உண்மையான எண்ணிக்கையை கணக்கிடுவதற்கும் அவர்களின் பெயர்கள் மற்றும் விவரங்களை நீதித்துறை செயல்முறை, வரலாற்று பதிவுகள் மற்றும் நினைவுகூருதல் ஆகியவற்றுக்காக தொகுக்கவும் நாம் அனைவரும் ஒரு கூட்டு முயற்சியை முன்னெடுக்க வேண்டும் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம்.

1979இல் அறிமுகப்படுத்தப்பட்ட பயங்கரவாத தடைச்சட்டம் மூலம் இலங்கையில் காணாமல் ஆக்கப்படடோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. திட்டமிடப்பட்ட தொடரும் இனப்படுகொலையின் ஒரு பகுதியாக சட்டவிரோத கைதுகள், சித்திரவதைகள், பாலியல் வன்முறைவிசாரணையின்றி நீண்ட காலக் காவலில் வைத்தல், சட்ட அதிகாரம் இன்றி   இறந்தவர்களின் உடலை அகற்றுதல், அரசியல் எதிர் கருத்துக்களை தெரிவிப்பவர்களை அடக்குதல் மற்றும் வலிந்து காணாமலாக்குதல் போன்ற செயற்பாடுகள் இப் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படுகின்றது. பல தசாப்தங்களாக தமிழர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் அனைத்து குற்றங்களையும்  விசாரிக்கும் முகமாக சர்வதேச குற்றவியல்  விசாரணை பொறிமுறை ஒன்றினை ஆரம்பிக்க வேண்டும் என நாம் சர்வதேச சமூகத்திடம் எம்  கோரிக்கையை முன்வைக்கின்றோம்.

திடடமிட்டு காணாமல் ஆக்கப்படட  தமது உறவுகள் தொடர்பான தகவல்களை பெறுவதற்காகவும் , அவர்கள் தொடர்பான நீதிக் கோரிக்கைக்கும்,   பாதிக்கப்பட்டவர்கள் அமைப்புக்கள் நடாத்தும் போராட்டங்களில் எமது அமைப்புக்கள் மீண்டுமொரு முறை எமது ஒருமைப்பாட்டினை வெளிப்படுத்தி நிற்கின்றோம்.

மேலதிக தகவலுக்கு பின்வரும் அமைப்புகளுடன் தொடர்பு கொள்ளவும்:

Australian Tamil Congress (ATC): +61300660629, mano_manics@hotmail.com

British Tamils Forum (BTF): +447814486087, info@britishtamilsforum.org

Maison du Tamil Eelam (France): +33652725867, mte.france@gmail.com

Irish Tamils Forum (ITF): 0035389959270, irishtamilsforum@gmail.com

National Council of Canadian Tamils (NCCT): +14168307703, krishanthy@ncctcanada.ca

Norwegian Council of Eelam Tamils (NCET): +4790641699, stevenpush.k@gmail.com

Solidarity Group for Peace and Justice (SGPJ – South Africa): pregasenp@telkomsa.net

United States Tamil Action Group (USTAG): +12025953123, info@theustag.org

காணாமல் ஆக்கப்பட்டொருக்கான சர்வதேச நினைவு தினம் (Final)

Please follow and like us:
error

Comments are closed.