சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தில் (30-08-2020) அவுஸ்ரேலிய தமிழ் காங்கிரஸ் (ATC), பிருத்தானிய தமிழர் பேரவை (BTF), அயர்லாந்து தமிழர் பேரவை (ITF), அமைதிக்கும் நீதிக்குமான ஒற்றுமைக்குழு (SGPJ), மற்றும் ஐக்கிய அமெரிக்க தமிழர் செயற்பாட்டுக் குழு (USTAG) ஆகிய அமைப்புக்கள் சிறிலங்காவில் காணாமல் ஆக்கப்பட்ட தமிழ் சொந்தங்களின் உறவுகளுடன் கைகோர்த்து நிற்கின்றன. தங்கள் அன்பு உறவுகள் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து 1,200 நாட்களுக்கு மேலாக தொடர்ந்தும் அவர்களின் உறவுகள் நீதி கேட்டு வருகிறார்கள். இராசபக்ச அரசின் மீள்வருகையின் பின்னும் இது தொடர்கிறது.
பாதிக்கப்பட்டோர் சமூகத்தின் மீது பாதுகாப்புப் படையினரின் துன்புறுத்தலும் அச்சுறுத்தலும் கூடிவரும் சூழ்நிலை உருவாகி வருகிறது. இன்று மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டக் கூட்டத்தில் கலந்து கொண்டிருந்தவர்களில் ஒரு பெண்ணிடமிருந்து காணாமலாக்கப்பட்ட அவரது கணவனின் ஒரேயொரு படத்தினை பொலிசார் பறித்துச் சென்றுள்ளனர். தமிழ் மக்களுக்கெதிராக யுத்தக் குற்றங்கள் மற்றும் மனிதநேயத்திற்கெதிரான குற்றங்கள் உள்ளடங்கலான பாரிய சர்வதேச குற்றங்கள் புரிந்திருப்பார்கள் என ஐநா உயர் ஸ்தானிகரின் 2015 “OISL” அறிக்கையில் அடையாளம் காணப்பட்ட குற்றவாளிகளை தற்போதைய சிறிலங்கா அரசு முக்கியமான அரச பதவிகளில் அமர்த்தியுள்ளது.
ஆயுதப் போராட்டம் முடிந்து பதினொரு வருடங்கள் கடந்தும், இன்னமும் ஏறத்தாழ 40,000 தொடக்கம் 80,000க்கு மேல் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்று தெரியாத நிலையும், குறிப்பாக யுத்த முடிவில் சரணடைந்த 18,000 பேருக்கு மேற்பட்டோர் குறித்த எவ்வித தகவல்களையும் சிறிலங்கா அரசு வெளிவிட மறுக்கின்றது. உயர்மட்ட ராஜதந்திரிகளின் ஏற்பாடுகளிற்கமைய சரணடைந்தவர்களும் பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்டும், மிருகத்தனமாக கொலை செய்யப்பட்டும் உள்ளனர். முன்னாள் நோர்வே சமாதானத் துாதுவர் எறிக் சொல்ஹெயம் (Eric Solheim) சமீபத்தில் கூறியது போன்று, வெள்ளைக் கொடியுடன் சரணடைந்த தமிழ் போராட்ட முக்கியஸ்தர்களான நடேசன், புலித்தேவன் முதலியோர் ஈவிரக்கமின்றிக் கொல்லப்பட்டமை நிச்சயமாக ஒரு யுத்தக் குற்றமாகும்.
சிறிலங்காவிற்கான சர்வதேச பொறுப்புக் கூறல் பொறிமுறையொன்றை உருவாக்கியோ அல்லது நடைமுறையிலிருக்கும் சர்வதேச நீதிமன்றம் ஒன்றிற்கு சிறிலங்காவை பாரப்படுத்தியோ பாதிப்புற்றோருக்கு நீதி தேடிக் கொடுக்கும் பொறுப்பு சர்வதேசத்திற்கு உள்ளது. மக்னிட்ஸ்கி சட்டத்தினை (Magnitsky Act) ஒத்த உலகளாவிய சட்டங்கள் மற்றும் மனித உரிமை மீறல்களுக்கான உலகளாவிய தடைகளை சர்வதேச குற்றங்கள் புரிந்த சிறிலங்கா குற்றவாளிகள் மீது பிரயோகிக்கும் படியும், சிறிலங்கா ராணுவத்தினருடனான தொடர்புகள் மேற்கொள்ள முன்னர் அவர்களது யுத்தக்குற்ற பின்னணி ஆராயப்பட வேண்டுமெனவும் நாம் சர்வதேச அரசுகளிடம் கேட்டுக்கொள்கிறோம்.
2017ம் ஆண்டிலிருந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான நீதி வேண்டியும், உண்மை நிலையை வெளிக் கொண்டு வரவும் போராடிக் கொண்டிருந்த நிலையில் 72 தாய், தந்தையர்கள் உயிர் நீர்த்துள்ளார்கள். காணாமலாக்கப்பட்டவர்களின் பெயர் விபரங்கள் சேகரித்துக் கொண்டிருந்த இளம் தமிழ் செயற்பாட்டாளர்கள் கடத்தப்பட்டு, சித்திரவதை செய்யப்பட்டு, பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கப்பட்டுள்ளனர். இராசபக்ச அரசின் பயமுறுத்தலுக்கு ஆளாகி வருவதால் சாட்சிகளுக்கு உடனடிப் பாதுகாப்பு தேவை. ஐநா மூலமான பக்கச் சார்பற்ற சர்வதேச சுயாதீனப் பொறிமுறையொன்று (International, Impartial, Independent Mechanism) சான்றுகளை சேகரிக்கவும், ஒருங்கிணைக்கவும், பாதுகாக்கவும், பகுப்பாய்வுப் பொறி முறைக்குட்படுத்தவும், அதன் மூலம் சிறிலங்கா குற்றவாளிகளுக்கு எதிராக நீதி தேடும் பாதையில் குற்றவியல் நடவடிக்கைகளை எளிதாக்கவும் விரைவுபடுத்தவும் தயார் செய்த கோப்புகளை பாவித்துக் கொள்வதற்கான அவசியத் தேவையுள்ளது.
மேலதிக விபரங்களுக்கான தொடர்புகள்:
Manokaran Chairman, Australian Tamil Congress (ATC)
T: +61 300 660 629 Website: http://www.australiantamilcongress.com/en/ Email:
Chairman@australiantamilcongress.com.au
Ravi Kumar General Secretary, British Tamils Forum (BTF)
T: +44 (0) 7814 486087 www.britishtamilsforum.org @tamilsforum
Pragas Padayachee Solidarity Group for Peace and Justice in Sri Lanka (SGPJ- South Africa)
pregasenp@telkomsa.net
Sutharsan Irish Tamils Forum (ITF)
T: 00353 899592707 irishtamilsforum@gmail.com
Mr. S. Seetharam President United States Tamil Action Group (USTAG) (formerly USTPAC) www.theustag.org @UstpacAdvocacy (202) 595 3123
Comments are closed.