முதலமைச்சர்
தமிழ்நாடு சட்ட மன்றம்
சென்னை
இந்தியா
மாண்புமிகு தமிழக முதல்வர் திரு மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு,
ஈழத்தமிழ் உறவுகள் குறித்த நலத்திட்ட அறிவிப்புத் தொடர்பானது
ஐயா,
தமிழக முகாம்கள் மற்றும் வெளிப்பகுதிகளில் தங்கியிருக்கும் ஈழத்தமிழ் உறவுகளின் கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதார மேம்பாட்டு நலத்திட்டங்கள் தொடர்பான தங்களது அண்மைய சட்டப்பேரவை அறிவிப்பிற்காக, உலகெங்கிலும் வாழும் ஈழத்தமிழர்கள் சார்பில் எமது வரவேற்பையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.
தமது சொந்த நிலங்களிலிருந்து பலவந்தமாக வெளியேற்றப்பட்டும், கதியற்றும் தாய்த் தமிழகம் வந்தடைந்த எம் சொந்தங்களில் கணிசமானோர் தொடர்ந்தும் பல வித இன்னல்களுக்கு முகங்கொடுத்து வந்த நிலையில் தங்களது இவ்வறிவிப்பானது, அவர்களது வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தி, ஒளிமயமான ஓர் எதிர்காலத்தை நோக்கி அவர்களை நகர்த்தும் என்று நம்புகின்றோம்.
பொறியியல், வேளாண், வேளாண்-பொறியியல், இளங்கலை, முதுகலை மற்றும் பல துறை மாணவர்களுக்கு தாங்கள் அளித்திருக்கும் உதவிக்கும், ஊக்கத்துக்கும் புலம் பெயர் ஈழத்தமிழ் அமைப்புகள் சார்பில் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். அதேபோல மருத்துவம் படிக்கவும், உதவிகள் செய்யுமாறு தாழ்மையுடன் வேண்டிக் கேட்டுக் கொள்கிறோம்.
கூடவே நாடற்றவர்களாக எதிர்காலம் குறித்துக் கேள்விக்குறிகளோடு இருந்த எம் மக்களுக்கு, இந்தியக் குடியுரிமை வழங்குதல் அல்லது இலங்கை திரும்ப ஏற்பாடுகள் செய்வது தொடர்பாக ஆலோசனைக் குழு அமைக்கும் தங்கள் அறிவிப்பு, நம்பிக்கையூட்டுவதாக அமைகிறது. இது தொடர்பான தங்கள் வருங்கால செயற்திட்டங்களில், புலம்பெயர் ஈழத்தமிழ் அமைப்புக்கள் சார்பில், இணைந்து பயணிக்கத் தயாராகவும் ஆவலோடும் இருக்கின்றோம் என்பதைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
மேலும் கடந்த காலங்களில் தவிர்க்க முடியாமல் நலிவுற்றிருந்த தாய்த் தமிழக ஈழ தொப்புள்கொடி உறவினை தங்களது இந்தக் கரிசனைசார் நலத்திட்ட முன்னெடுப்பானது மேம்படுத்தும் என்று நாம் திடமாக நம்புவதோடு, ஈழத்தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை வென்றெடுப்பதற்கான எமது போராட்டத்திற்கும் தங்கள் தார்மீக ஆதரவினைத் தொடர்ந்து நல்கி உதவுமாறு அன்புரிமையோடு வேண்டி நிற்கின்றோம்.
நன்றி
தங்கள் உண்மையுள்ள
Australian Tamil Congress (ATC): +61300660629, mano_manics@hotmail.com
British Tamils Forum (BTF): +447814486087, info@britishtamilsforum.org
Maison du Tamil Eelam (France): +33652725867, mte.france@gmail.com
Irish Tamils Forum (ITF): 0035389959270, irishtamilsforum@gmail.com
National Council of Canadian Tamils (NCCT): +14168307703, info@ncctcanada.ca
Norwegian Council of Eelam Tamils (NCET): +4790641699, stevenpush.k@gmail.com
Solidarity Group for Peace and Justice (SGPJ – South Africa): pregasenp@telkomsa.net
United States Tamil Action Group (USTAG): +12025953123, info@theustag.org
ஈழத்தமிழ் உறவுகள் குறித்த நலத்திட்ட அறிவிப்புக்கு வரவேற்பும் நன்றியும் CM
Comments are closed.