உலகெங்கும் கடுமையான மனித உரிமை மீறல் புரிந்தவர்களுக்கு எதிராக ஐக்கிய இராட்சியம் (UK) உலகலாவிய மனித உரிமைகள் தடை விதியை கொண்டு வந்தமையை பிரித்தானிய தமிழர் பேரவை வரவேற்கிறது. இது விடயத்தில் பிரித்தானிய தமிழர் பேரவை கருத்துரைக்கையில், “இப் புதிய சட்ட அதிகாரம் மனித உரிமை மீறல்களை தடுப்பதற்கு துணை நிற்கும். அத்தோடு பாரிய மனித உரிமை மீறல் புரிந்தவர்கள் சுதந்திரமாக பயணிப்பதையும், தவறான வழிகளில் சம்பாதித்த பணத்தை இந் நாட்டில் பதுக்கி வைப்பதையும் தடை செய்யும். சிறிலங்காவில் 2009ம் ஆண்டு முடிவடைந்த யுத்தத்தின் போதும் அதன் பின்னரும் அப்பாவித் தமிழர்கள் மீது மாபெரும் அட்டூழியக் குற்றம் புரிந்தவர்கள் மீதும் இவ்வாறு தடை விதிக்கப்பட வேண்டும் என நாம் எதிர் பார்க்கின்றோம். இத்தகைய பாரிய மனித உரிமை மீறல்கள் புரிந்தவர்களையும் பட்டியலில் உள்ளடக்க, அவர்கள் மீது பயணத் தடை விதிக்க, சொத்துக்களை முடக்க, நிதி, வர்த்தக தடைகளுக்கு உட்படுத்த, பிரித்தானிய அரசு தன் அதிகாரத்தின் முழு பலத்தையும் பிரயோகிக்க நாம் ஒத்துழைப்போம்.” என்று கூறியுள்ளது. அட்டூழிய குற்றங்கள் (atrocity crimes) புரிந்ததாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைக்கான உயர் ஸ்தானிகர் காரியாலய அறிக்கையில் (OISL report) உள்ள சந்தேக குற்றவாளிகளை நாம் கீழே தருகின்றோம்.
முன்னை நாள் பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூன் அவர்களின் சர்வதேச சுயாதீன விசாரணையை கொண்டு வரும் முயற்சியை அடியொற்றியும், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் முன்னை நாள் உயர் ஸ்தானிகர் சயிட் (Zaid) அவர்களின் உலகளாவிய நியாயாதிக்க (Univrsal jurisdiction) பரிந்துரைக்கு அமையவும் கீழே பட்டியலிடப்பட்டவர்கள் மீது முதல்கட்டமாக தடை விதிப்பது அவசியமானதாகும்.
https://www.ohchr.org/EN/HRBodies/HRC/Pages/OISL.aspx
- Lieutenant General Shavendra Silva
- Major General Sathyapriya Liyanage
- Major General Kamal Gunaratne
- Major General Mahinda Hathurusinghe
- Major General Nanda Mallawarchcha
- Colonel G.V. Ravipriya
- Brigadier Prasanna Silva
- Major General Jagath Dias
- Gotabaya Rajapaksa
- Mahinda Rajapaksa
- Admiral Wasantha Kumar Jayadewa Karannagoda
- Admiral Thisara S. G. Samarasinghe
- Admiral Dissanayake Wijesinghe Arachchilage Somatilake Dissanayake
- Major General Jagath Jayasuriya
- Brigadier Nandana Udawatta
- Brigadier Chagie Gallage
- C.N.Wakishta
- General Sarath Fonseka
இப்பட்டியலிலுள்ள Lt Gen சவேந்திர சில்வா (Lieutenant General Shavendra Silva) மற்றும் அவரது குடும்பம் மீது, மே 2009 முடிவடைந்த யுத்தத்தின் இறுதி கட்டங்களில் மனித உரிமைகள் ஒட்டுமொத்தமாக மீறப்பட்டமைக்காக அமெரிக்கா பிரயாணத் தடை விதித்துள்ளது. இவ் யுத்தத்தில் 70,000க்கும் மேலான பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளார்கள்.
மேலே பட்டியலிடப்பட்டுள்ள அனேகமானவர்கள் சிறிலங்காவின் தற்போதய பிரதமரும் நாட்டின் ஜனாதிபதியாக யுத்தத்தை நடத்திய மகிந்த ராஜபக்ச(10), யுத்த காலங்களில் பாதுகாப்பு செயலராக செயற்பட்ட கோத்தபாய ராஜபக்சவின்(9) கட்டுப்பாட்டில் செயற்பட்டவர்கள். மேற்காணும் அனைவரும் தற்போதய அரசில் நிறைவேற்று பதவிகளில் உள்ளார்கள். பின்நோக்கிப் பார்க்கையில், வெளிச்சத்திற்கு வரும் உண்மைகள் தற்போதய அரசாங்கத்தில் உள்ள பலரின் கைகளிலும் தமிழர் இரத்தம் தோய்ந்திருப்பதை துலாம்பரமாக படம் பிடித்துக் காட்டுகின்றன.
சிறிலங்கா அரசு சர்வதேசத்திற்கு கொடுத்த வாக்குறுதிகளை கௌரவிக்கத் தவறியது மாத்திரமல்லாமல், ஐக்கிய நாடுகள் மனித உரிமை சபையின் தீர்மானம் 30/1ல் அடங்கியுள்ள தனது கடப்பாடுகளிலிருந்தும் துணிவுடன் பின்வாங்கியுள்ளது. சிறிலங்கா அரசுக்கெதிராக பிரித்தானியா பல்வேறு தடைகளை பிரயோகிக்க வேண்டுமென்பது பிரித்தானிய தமிழர் பேரவையின் வேண்டுகோளாகும்.
கடந்த 5 ஆண்டு காலத்துள் பாரிய அட்டூழியக் குற்றம் புரிந்தவர்கள் மீது பிரயோகிக்கப்படும்படியாக ஜனாதிபதி டொனால்ட் ரம்ப்பினால் 2017ம் ஆண்டு நிறைவேற்று உத்தரவு இலக்கம் 13818ன் மூலம் பலப்படுத்தப்பட்டதான ‘உலகளாவிய மக்நிற்ஸ்கி சட்டம் 2016’ (Global Magnisky Act 2016) என்றழைக்கப்படும் அமெரிக்க சட்டத்தை ஒத்ததாக இப் புதிய ஐக்கிய இராட்சிய தடைகள் சட்டம் 2020 காணப்படுகிறது. 2017ம் ஆண்டில் கனடா தனக்கே உரித்தான மக்நிற்ஸ்கி சட்டத்தை உருவாக்கியது. இது ‘ஊழல் நிறைந்த வெளியுறவு அதிகாரிகளினால் பாதிக்கப் பட்டவர்களுக்கான நீதிச் சட்டம்’ என்றும் பெயர் பெற்றது.
ஐரோப்பிய ஒன்றியத்தின் 2018ம் ஆண்டு தடைகள் மற்றும் பணமோசடிக்கு எதிரான சட்ட அதிகாரத்திலிருந்து விலகி, பிரித்தானியா முதல் தடவையாக் இத் தடைகளை சுயாதீனமாக விதித்துள்ளது.
Comments are closed.