CALL US NOW +44 (0)208 808 0465
Donate Now
are-they-alive

சர்வதேச காணாமல் போனோர் தினம் 2017, அவர்கள் உயிருடன் இருக்கின்றார்களா?

இலங்கையில் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் படையினராலும் அவர்களுடன் செயல்பட்ட ஒட்டுக் குழுக்களினாலும் (para military) காணாமல் ஆக்கப்பட்டனர். சர்வதேச மன்னிப்புச் சபை, 1980இலிருந்து சிறிலங்காவில் அனைத்து சமூகத்தையும் சேர்ந்த ஏறத்தாள 60,000 தொடக்கம் 100,000 வரையான வலிந்து காணாமல்ஆக்கப்பட்டோர் பற்றிய விடயம் முடிவு காணப்படவில்லை என்று கூறுகின்றது. இதில் ஏறத்தாழ 20,000 சிங்களவர்கள் எனவும் ஏனையோர் தமிழர் எனவும் ஜனாதிபதிஆணைக்கு குழு குறிப்பிடுகின்றது

“1994இலிருந்து பல்வேறு ஆணைக் குழுக்களின் அறிக்கைகளின்படி 65,000 பேர் வரை காணவில்லை அல்லது கொல்லப்பட்டார்களா இருக்கின்றார்களா என அறியமுடியவில்லைஎன முன்னாள் ஜனாதிபதியும் அரசாங்கத்தின் நல்லிணக்க விவகாரங்களுக்கான அலுவலகத்திற்கு பொறுப்பாகவுள்ள சந்திரிகா குமாரதுங்க 2016இல்ஊடகவியலாளர்களுக்கு குறிப்பிட்டுள்ளார். 2015இல் சிறிலங்காவிற்கு வருகை தந்த  வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் குறித்த .நா. செயலணி (UN Working Group on Enforced Disappearance), காணாமல் ஆக்கப்பட்டோர் பட்டியலில் சிறிலங்கா உலகிலேயே மிகமோசமான இரண்டாம் இடத்தில்  உள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளது.

இலங்கையில் 2009 ம்  ஆண்டு யுத்தம் முடிவுக்கு வந்த பொழுது போராளிகள், அரசு ஊழியர்கள், சமூக ஆர்வலர்கள் என பல்லாயிரக்கணக்கான தமிழர்கள்  சிறிலங்காபடையினரிடம் சரணடைந்து எட்டு வருடங்கள் கடந்த பின்பும் அவர்கள் தொடர்பில் இன்றுவரை எதுவித தகவல்களும் வெளியிடப்படவில்லை. மன்னார் மாவட்ட ஆயர்ராயப்பு ஜோசப் அவர்கள் 8 ஜனவரி 2011இல் அரச ஆணைக் குழுவின் முன் கையளித்த அறிக்கையின் பிரகாரம் இலங்கையில் யுத்த முடிவின் பின்பு  அரசின் புள்ளிவிபரத்தின் அடிப்படையில் 146,679 தமிழர்கள் தொடர்பில் எதுவித தகவல்களும் இன்றுவரை பெற்றுக்கொள்ள முடியவில்லை எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. 1979இலிருந்து ஆகஸ்ட் 2007 வரையான காலப் பகுதியில் 26,840 தமிழர்கள் காணாமல் போயுள்ளனர் என பிரான்சிலிருந்து செயல்படும் மனித உரிமைகளுக்கானதமிழர் மையம் (TCHR) ஆவணப்படுத்தியுள்ளது.

மேற்படி விபரங்கள், ஒரு சிறிய எண்ணிக்கையிலான மக்கள் குழாமிற்கு ஏற்பட்ட பேரிழப்பாகும். அத்துடன் காணாமல் ஆக்கப்பட்டோரின் இருப்பு குறித்த நிச்சயமற்றதன்மையானது அவர்கள் பற்றிய தகவல்களை உடனடியாக வெளிக் கொண்டு வர வேண்டிய தேவையை ஏற்படுத்தி உள்ளது

 “.நா. சித்திரவதை மற்றும் மனிதத்தன்மையற்ற இழிவுபடுத்தும் செயற்பாடுகள்குறித்த சிறப்பு பிரதிநிதி (UN Special Rapporteur on torture and other cruel, inhuman and degrading treatment or punishment) Mr. Juan E. Mendez அவர்கள் 2016 சிறிலங்கா சென்று திரும்பிய பின் 2016 மே மாதத்தில் வெளியிட்டஅறிக்கையில்யுத்த காலப்பகுதியிலும் அதன் பின்னரும் 16,000தொடக்கம் 22,000 வரையிலான காணாமல் ஆக்கப்படட  மக்கள் தொடர்பான தகவல்கள் நிலுவையில்உள்ளதாக எதிர்பார்க்கப்படுகின்றது. காணாமல் போனோர் தொடர்பான பிரச்சனைகள் தீர்க்கப்பட வேண்டும். கடந்த கால அனுபவங்களின் பிரகாரம் காணாமல்ஆக்கப்பட்டோர் பயங்கரமான சித்திரவதைகளுக்கு உட்படுத்தப்படும் ஆபத்திலுள்ளனர். காணாமல் போனோருக்கு என்ன நடந்தது, அவர்களின் இருப்பு தொடர்பாகநிச்சயமற்ற தன்மை என்பன நீடிக்கப்படும்போது அவர்களது உறவுகளுக்கு கொடூரமான மன உளைச்சலையும் மாண்பு இழப்பையும் ஏற்படுத்துகின்றது. இதன்காரணமாகவே காணாமல் போனோர் ஒவ்வொருவர் தொடர்பிலும் விசாரணை மேற்கொள்ளும் பொருட்டு ஓர் செயற்பாட்டு அலுவலகம் உருவாக்கப்பட வேண்டும், அதுஒவ்வொருவர் தொடர்பாக தீவிரமானதும் ஆழமானதுமான விசாரணைகளை மேற்கொள்ளும் என எதிர்பார்க்கின்றோம்என தமது அறிக்கையில் தெரிவித்திருந்தார்.

தமிழ் மக்கள் காணாமல் ஆக்கப்பட்ட தம் உறவுகள் தொடர்பாக அரசின் செயலாற்றலற்ற  தன்மைக்கெதிராக போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். படையினரின் அச்சுறுத்தல் மத்தியிலும் 200  நாட்கள் அளவாக வடக்கு கிழக்கு பகுதிகளின் பல இடங்களில் போராட்டங்கள் தொடர்கின்றன. அவர்களது குரல்செவிமடுக்கப்பட வேண்டும். போராடும் மக்களின் பிரதிநிதிகள் 12 ஜூன் 2017 சிறிலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவை சந்தித்துள்ளனர். யுத்தத்தின் இறுதிக்கட்டத்தில் சரணடைந்தோர் மற்றும் தடுத்து வைக்கப்பட்டோர், இரகசிய தடுப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டோர், பயங்கரவாத தடை சட்டத்தின் (PTA) கீழ்தடுத்து வைக்கப்பட்டோர் பற்றிய விபரங்களை வெளியிடுவதாக சிறிலங்கா ஜனாதிபதி அவர்களுக்கு உறுதியளித்துள்ளார். இன்றுவரை அவ் உறுதிமொழி  நிறைவேற்றப் படவில்லை.

8 வருடங்கள் பூர்த்தியாகி விட்ட சூழ்நிலையில் காணாமல் போனோர் மற்றும் கொல்லப்பட்டோருக்கு என்ன நடந்தது , ஏன் நடந்தது என்ற உண்மை அவர்களதுஉறவுகளுக்கு தெரிய வேண்டும்.

காணாமல் போனோர் எங்கே? அவர்கள் உயிரோடு இருக்கின்றார்களா? என்று தமது நாட்டு அரசையும் .நா. வையும் கேள்வி கேட்க வேண்டியது மனிதநேயமிக்கஅனைவரதும் கடமையாகும்.

சிறிலங்கா அரசு பின்வரும் நடவடிக்கைகளை எடுக்க சர்வதேசம் அழுத்தம் போட வேண்டுமென BTF மற்றும் USTPAC இணைந்து.கோரிகையை முன்வைக்கின்றனர்.

  1. காணாமல் போனோருக்கான அலுவலகம் (OMP) கால அட்டவணையுடன் கூடிய ஒரு திட்டத்தின் அடிப்படையில் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும், வெளிநாட்டு வல்லுநர்கள் மற்றும் நிதி உதவிகளை பெற்றுக் கொள்ள அனுமதிக்க வேண்டும், காணாமல் போனோர் பற்றி திரட்டப்பட்ட முழுத் தகவல்களையும்அவர்களின் உறவுகளிற்கு கொடுக்க வேண்டும், குற்றமிழைத்தவர்களைக் கையாளக்  கூடிய நீதிப் பொறிமுறை அவசியமானது.
  2. வெவ்வேறு விதமாக கைது செய்து தடுத்து வைக்கப்பட்டவர்கள் தொடர்பான விரிவான தகவல் அறிக்கை வெளியிடுதல் மற்றும் சட்டவாளர்கள் மற்றும் குடும்பஉறுப்பினர்கள் தடுப்பிலுள்ளவர்களை சந்திக்க அனுமதித்தல்
  3. வலிந்து காணாமல் போகச் செய்யப்படுபவர்கள் தொடர்பானஐ .நா உடன்படிக்கையினை  (UN Convention on the Protection of all persons from Enforced Disappearances) உள்நாட்டு சட்டத்தில் இணைத்தல் .

 காணாமல் ஆக்கப்பட்டோர் பற்றிய விபரம் அறியத் துடிக்கும் உறவுகளுக்கு நீதி , உண்மை கண்டறிதல், இழப்பு ஈடு என்பனவற்றை வழங்க இலங்கை அரசுக்கு அழுத்தம்கொடுக்குமாறு உலக நாடுகளும் .நா.வும் இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கின்றோம்.

காணாமல் ஆக்கப்பட்ட அனைவரையும் குறித்த பொறுப்புக் கூறலை சிறிலங்கா அரசு நிறைவேற்ற வேண்டும் என உலகெங்கும் உள்ள மக்களுடனும்அமைப்புகளுடனும் BTF, USTPAC அமைப்பினர் இணைந்து உரத்துக்  குரல் கொடுக்கிறோம்.

btf-ustpac-press-release_intl-day-of-the-disappeared_aug302017-tamil-v2

NEWSLETTER SIGN-UP

Sign-up to receive regular update from us.